Ad Widget

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சர்ச்சையான தையிட்டி சட்டவிரோத விகாரை!

வலி வடக்கு, தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவ நடவடிக்கை மூலம் பலவந்தமாக கைப்பற்றி பௌத்த விகாரை அமைக்கப்பட்டதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை புறந்தள்ளி விகாரை கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உடனடியாக அமுல்ப்படுத்த வேண்டுமென மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

நேற்றைய கூட்டத்தின் போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் சுட்டிக்காட்டினார்.

விகாரை அமைக்கப்பட்டது தவறு என்பதே தனது நிலைப்பாடு என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அந்த காணிக்குரியவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி ஆராய்வதாக குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், இ.அங்கஜன் ஆகியோரும் ஒருங்கிணைப்புக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலகம், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் விகாரை அமைக்க தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கஜன் குறிப்பிட்டார்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலேயே அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

அங்கஜன் அதை மறுத்து, ஆவணங்களை பார்த்தாலே அதை உறுதிப்படுத்தலாம் என்றார்.

பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ்-

தையிட்டியில் விகாரை அமைத்தது தவறு. இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் அன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். அப்போது இந்த பிரச்சினையை பகிரங்கப்படுத்தியிருக்கலாம்.

முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், இதுவரை அது பற்றி நான் பார்க்கவில்லை. யாழ், தெல்லிப்பளை பிரதேச செயலகங்களால் மாறுபட்ட தகவலே வந்துள்ளன என்றார்.

Related Posts