- Sunday
- July 5th, 2026
வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை கையளித்தனர். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து நேற்று (13) காலை கலந்துரையாடினர்....
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் இடம்பெற்ற விபத்துகளில் மோட்டார் சைக்கிள்...
தனியார் துறையினரால் சுமார் 8 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அச்சடிக்கும் இயந்திரங்களின் திறன் குறைபாடு காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான...
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய படைகள் வசமிருந்த 7 கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்தி 90 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை கைப்பற்றி, ரஷ்ய படைகளை விரட்டி அடித்ததாகவும் உக்ரைன் கூறியுள்ளது. தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள...
இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். முதலில் பேரறிவாளன்...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303 ரூபாய் 73 சதமாக பதிவாகியுள்ளது. இதேநேரம் கொள்வனவு விலை 290 ரூபாய் 06 சதமாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 228 ரூபாயாகவும் கொள்விலை 215 ரூபாயாகவும்,...
சர்வதேச அளவில் காணப்படும் அணு ஆயுதங்கள் குறித்த பட்டியலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சீனா தனது அணு ஆயுதங்களைக் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பல நாடுகளும் சீனாவுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் நிலையில், இந்த விடயம் உலக ஆராய்ச்சியாளர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. எனினும் உலகளவில் பார்க்கும் போது அணு...
கருங்கடலில் உள்ள முக்கிய எரிவாயு குழாய்களுக்கு அருகே ரஷ்ய கப்பலை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்யா கூறியுள்ளது. கருங்கடலில் ஆறு அதிவேக ட்ரோன் படகுகள் மூலம் ரஷ்ய கடற்படை கப்பலை தாக்க உக்ரைன் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியா தீபகற்பத்தில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகமான...
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை தமிழ் தேசய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது,வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா ஐனாதிபதியால் நீக்கப்பட்டு புதிய...
இலங்கையின் LGBTQ சமூகத்தினருக்கு உறுதியான ஆதரவை வழங்குவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுயமரியாதை பவனி குறித்து தமிழ்தேசியமக்கள் முன்னணயின் ஆதரவாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிடடுள்ள கருத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்தேசிய மக்கள் இதனை தெரிவித்துள்ளது. எங்கள் கட்சியின் உறுப்பினரான நபர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் நிச்சயமாக இந்த விடயத்தில் எங்கள்...
காரைநகரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு போலியான கடவுச்சீட்டினை பயன்படுத்தி தப்பிச்செல்ல முற்பட்டபோதே யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் திகதி காரைநகர் ஊரி பகுதியில் விசேட...
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்தார். தினசரி நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு எடுப்பதன் மூலம் தனிநபர்கள் போதுமான...
வீடுகளில் அல்லது வணி நிறுவங்களின் டெங்கு நுழம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அதற்கான அபராதம் விதிக்கும் நடைமுறை அடுத்தவாரம் முதல் அமுலுக்கு வரவுள்ளது. சமீப வாரங்களாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறன்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இதுவரை 43...
கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 09 அட்டைகளில் 90 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் மீட்கப்பட்ட மாத்திரைகளையும் , கைது செய்யப்பட்ட நபரையும் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
மின் கட்டண திருத்தத்திற்கமைய, மீண்டும் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்குட்பட்டு இது தொடர்பான கட்டண திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணக் குறைப்பிற்கமைய, 0...
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கெர்சன் நகரில் உக்ரைனின் Su-25 போர் ஜெட் விமானங்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஜாபோரிஜியா பிராந்தியத்தில் உக்ரைனின் மூன்று தாக்குதலை ரஷ்ய படைகள் தடுத்து நிறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது....
வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டம் ஆரம்பித்து 2300 ஆவது நாளான இன்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது...
யாழ்ப்பாணம் நெடுந்தீவு நுழைவாயிலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் நேற்று (07) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் இவர்களை மீட்டுள்ளனர். கப்பலில் இருந்த கட்டுமானப் பொருட்கள் மூழ்காத வகையில் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவுக்கு 38 பேருடன்...
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நேற்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
