இலங்கையின் LGBTQ சமூகத்தினருக்கு உறுதியான ஆதரவை வழங்குவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுயமரியாதை பவனி குறித்து தமிழ்தேசியமக்கள் முன்னணயின் ஆதரவாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிடடுள்ள கருத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்தேசிய மக்கள் இதனை தெரிவித்துள்ளது.
எங்கள் கட்சியின் உறுப்பினரான நபர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் நிச்சயமாக இந்த விடயத்தில் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
LGBTQ சமூகத்தினருக்கு உறுதியான ஆதரவை வழங்குவதாகவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
LGBTQ சமூகத்தினரின் நலன்களை அங்கீகரிக்கும் பாதுகாக்கும் மேம்படுத்தும் அனைத்துவகையான சட்டங்கள் மற்றும் மாற்றங்களிற்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கும் எனவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
சகல விதமான ஒடுக்குமுறைகள் மற்றும் LGBTQIA+ சமூகத்துக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்து சுயமரியாதை நடைபயணமொன்று யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.
சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக ‘இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்’ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணத்தின் முக்கிய நிகழ்வாக இந்த நடைபவனி அமைந்தது.
இந்த நடைபவனி நேற்று முன்தினம் யாழ். பேருந்து நிலையம் முன்னால் இருந்து ஆரம்பமாகி, சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக பொது நூலகத்தை அடைந்து, வைத்தியசாலை வீதியூடாக நகர்ந்து, ஆரிய குளத்துக்கு முன்பாக நிறைவடைந்தது.
யாழ்ப்பாணம் கே.கே.பி. இளைஞர் கழகத்தின் ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபவனியில் பலரும் தன்னார்வத்தோடு கலந்துகொண்டனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி LGBTQ🌈 சமூகத்தினருக்கு மிகவும் உறுதியாக ஆதரவளிப்பதோடு, அவர்களது நலன்களை அங்கீகரிக்கும், பாதுகாக்கும், உறுதிப்படுத்தும் எல்லா சட்டங்களையும், திருத்தங்களையும் ஆதரிக்கும்.
— Tamil National People's Front (@TnpfOrg) June 11, 2023