Ad Widget

உக்ரைனில் ஆயுதங்களை குவிக்கும் மேற்கத்திய நாடுகள்! விரட்டியடிக்கப்பட்ட ரஷ்ய படைகள்

உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய படைகள் வசமிருந்த 7 கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்தி 90 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை கைப்பற்றி, ரஷ்ய படைகளை விரட்டி அடித்ததாகவும் உக்ரைன் கூறியுள்ளது.

தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா ஆகிய கொன்று கிராமங்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாகவும், அவற்றுக்கு அருகில், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் தெற்கில் உள்ள ஸ்டோரோஷேவ் கிராமத்தின் கட்டுப்பாட்டையும் உக்ரேனியப் படைகள் மீட்டுள்ளதாக கன்னா மல்யார் கூறியுள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊர் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் கைப்பற்றியதாக கூறும் பகுதிகளில், உக்ரைனின் தாக்குதலை முறியடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பல கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைனும், ரஷ்யாவும் மாறி மாறி அறிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts