Ad Widget

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு செல்லும் நிலையில் இந்த அழைப்பு பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ளது என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிக்க உள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரிடம் கலந்துரையாடிய பின்னர் அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவை எடுப்பேன் என பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் சபாநாயகரை தொடர்புகொள்ள எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என்றும் குறுஞ்செய்தி ஒன்றினை அவருக்கு அனுப்பியுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இச்சம்பவம் தொடர்பாக பிரதி சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் அவர்களை மருதங்கேணிப்பொலிஸ் நிலையத்தில் 08.06.2023(வியாழக்கிழமை) அன்று ஆஜராகுமாறு கொள்ளுப்பிட்டிப்பொலிசாரால் கட்டளை என்று கூறி சிங்களத்தில் எழுதப்பட்ட ஆவணம் கொண்டுவரப்பட்டபோது குறித்த ஆவணம் சிங்கள மொழியில் இருந்தமையால் அதனை தன்னால் வாசிக்க முடியாது என்று கூறி அதனை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார் .

Related Posts