Ad Widget

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தயாராம்!

தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பொதுமன்னிப்பு வழங்கத் தயாராக இருக்கிறார் என 'இந்து' செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குக் கூடத் தீர்வைத் தராது!

ஆட்சி மாற்றமானது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குக் கூட தீர்வைத் தராது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த ஜனாதிபதி வேட்பாளராவது தாம் ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என உறுதிமொழி வழங்க முன்வருவார்களா எனவும் கேள்வியெழுப்பியுள்ளது. (more…)
Ad Widget

இலவசமாக இபுக் டவுன்லோட் செய்ய !

புத்தகங்களை வாங்கி படிப்பது குறைந்து கணினி மூலம் pdf பைலாக டவுன்லோட் செய்து படிப்பதால் செலவும் குறைந்து பேப்பர் செலவும் குறைவதனால் மரங்கள் பாதுகாகப்படுகின்றன என்பது ஒரு புறம் இருந்தாலும் முக்கியமான சில புத்தகங்களை (more…)

ஊடகவியலாளன் என்பவன் ஓர் தகவல் களஞ்சியமாக இருக்கவேண்டும் – தவராசா

ஏறத்தாழ இன்றிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்புதான் இந்த எழுத்து என்பது பல இடங்களில் மனிதனினால் முதல் முதல் பதியப்பட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த எழுத்தை என்றைக்கு மனிதன் ஆரம்பித்தானோ அன்று தொடக்கம் தன்னுடைய அந்த அறிவை, (more…)

வெளிநாடுகளிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் மக்களின் பயண அனுமதி தொடர்பில் விரைவில் தீர்வு

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்திற்கு திரும்பும் போது அவர்களுக்கான பயண அனுமதியில் நடைமுறைப்படுத்தப்படும் தடைதொடர்பில் அரசுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

டீனேஜ் பெண்களின் சுய கௌரவத்திற்கு வேட்டு வைக்கும் சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் பதின்வயது சிறுமிகள் அதாவது டீனேஜ் பெண்களின் சுயகௌரவம் குறைவது கணக்கெடுப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. (more…)

கொழும்பில் அனந்தியைப் பின்தொடர்ந்த புலனாய்வாளர்கள்! – சுரேஷ் எம்.பி

வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனை புலனாய்வாளர்கள் நேற்று முன்தினம் பின்தொடர்ந்தனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

கிளி­நொச்­சியில் மாங்­கல்­யத்­துடன் வாழும் பெண்­களை வித­வைகள் என்­கி­றாரா அரி­ய­நேத்­திரன் – அஸ்வர் எம்.பி.

கிளி­நொச்சி மாவட்­டத்தில் மாங்­கல்­யத்­துடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற பெண்களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பி. அரி­ய­நேத்­திரன் வித­வைகள் என்று கூறு­கி­றாரா என ஆளும் கட்சி எம்.பி. யான ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று முன்தினம் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பினார். (more…)

பழிவாங்கல் ஆரம்பம்? ரத்தன தேரரின் முகநூல், மின்னஞ்சல் முடக்கம்!

ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் முகநூல் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு தென்பகுதியில் சந்தை வாய்ப்பு

வடமாகாணத்திலுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு, தென்பகுதியில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். (more…)

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில், கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக பொதுமக்கள் தாக்கல் செய்த வழக்கை, எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் நேற்று செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார். (more…)

தவராசாவின் மின்னஞ்சலில் ஹக்கர்ஸ்கள் ஊடுருவல்

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஹக்கர்ஸ்களால் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முடக்கப்பட்டுள்ளது. (more…)

ஆயுத விவகாரம்: பதிலளிக்குமாறு கோட்டாவுக்கு சமல் பணிப்பு

இந்தியாவிடமிருந்து இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்ததா என்பது தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு பணித்துள்ளார். (more…)

ஐஸ்கிறீம், யூஸ் தடை – சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை

யாழ் மாவட்டத்தில் உள்ள ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்த சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக பல தரப்பட்ட விமர்சனங்களும் நிலவுகின்றன. (more…)

நல்லூரில் 1,200 வீதி விளக்குகள்

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 1,200 க்கு மேற்பட்ட வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். (more…)

மரண தண்டனைத் தீர்ப்புக்கெதிராக இந்திய மீனவர்கள் மேன்முறையீடு

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து இந்திய மீனவர்கள், தங்களுக்கெதிரான தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். (more…)

குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை: இந்தியாவில் 11 பெண்கள் பலி

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு நடத்திய சுகாதார முகாமில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 11 பெண்கள் மரணமடைந்துள்ளனர். (more…)

லிங்காவிற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்?

ரஜினியின் பிறந்தநாள் அன்று லிங்கா திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. (more…)

மும்பையில் குப்பை பொறுக்கிய தமன்னா!

தமன்னா தமிழ் சினிமா மட்டுமின்று தற்போது பாலிவுட்டிலும் வெற்றிக் கொடி கட்டி விட்டார். (more…)

யாழ் நகரில் இடம்பெற்ற தொழில் ஊக்குவிப்பு கருத்தரங்கு!

யாழ் மாவட்ட வர்த்தக கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கை வர்த்தக மன்றம் மற்றும் நிதித்திட்டமிடல் அமைச்சின் அனுசரணையுடன் மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் ஊக்குவிப்பு கருத்தரங்கு (more…)
Loading posts...

All posts loaded

No more posts