Ad Widget

படை முகாம்கள் அகற்றப்படாது :பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடக்கு,கிழக்கு தமிழ் மக்களைப் போன்று ஏனைய மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இராணுவ முகாம்கள் எந்தவிதத்திலும் அகற்றப்படாது என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

military_visite_jaffna

நேற்று பி.ப 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பலாலி இராணுவப் படைத்தளத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

வடக்கு,கிழக்கு இணைந்த ஏனைய பிரதேசங்களிலும் இராணுவ குறைப்பிற்கு இடமில்லை.ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுத்து தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டுமே தவிர தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்.

மேலும் கடந்த காலங்களில் இராணுவம் தொடர்பான தவறான கருத்துக்களும் ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டுள்ளது.

எனவே தமிழ்மக்களின் பிரச்சினைகள் மற்றும் இடையூறு தொடர்பிலும் அரசு என்ற வகையில் கவனம் செலுத்தி இதற்கு தீர்வொன்றையும் பெற்றுத்தரும் அதேசமயம் இராணுவ முகாம்களும் எந்தவிதத்திலும் அகற்றப்படமாட்டாது எனவும் திட்டவட்டமாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts