முதல் போட்டியிலேயே மண்ணைக் கவ்வியது இலங்கை

உலகக் கிண்ணத் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொண்ட இலங்கை அணி 98 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இன்று அதிகாலை நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த களமிறங்கின. முதலில் நாணய சுழற்சியில்...

கடந்த உலகக் கோப்பையில் கடைசியாக பந்து வீசியவரே இம்முறை முதல் பந்தையும் வீசிய அதிசயம்

கடந்த உலக கோப்பையில் கடைசி பந்தை வீசிய நுவான் குலசேகரா, இந்த உலக கோப்பையின் முதல் பந்தையும் வீசினார். 20011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் நடந்தது. இந்தியா-இலங்கை மோதின. இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இந்தியா 48.2வது ஓவரில் டோணியின் இமாலய சிக்சருடன் வெற்றிக் கனியை பறித்தது. அந்த ஓவரை வீசியது...
Ad Widget

மஹிந்தவின் போர் வெற்றி இனி இராணுவத்துககான பாராட்டு விழா!

தமிழீழ விடுதலைப்டிபுலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மே 18 ஆம் திகதியில் நிகழ்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய கூட்டணியரசு தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் மஹிந்த ஆட்சியில் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்ட 'போர் வெற்றி விழா'வானது பெயர் மாற்றத்துடன் 'இராணுவ பாராட்டு விழா'வாக புதிய...

ஆசிரியரை தாக்கிய யாழ் இந்து கல்லூரி மாணவர்களுக்கு விளக்கமறியல்

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வியாழக்கிழமை (12) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆசிரியரை கடந்த 9ஆம் திகதி தாக்கிய அதே பாடசாலையை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவரையும் யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினார்கள். இது தொடர்பான...

Facebook கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் கணக்குக்கு நடப்பது என்ன?

முகப்புத்தக கணக்கு (Facebook) வைத்திருப்பவர் இறந்ததன் பின்னர் அக்கணக்குக்கு என்ன நடக்கும்? இது யாரும் எதிர்பார்க்காத பிரச்சினையாகும். எனினும், முகப்புத்தக (Facebook) நிறுவனம் இந்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. அதன் பிரகாரம் முகப்புத்தக (Facebook) கணக்கு உரிமையாளர் மரணமடைந்ததன் பின்னர் அக்கணக்குக்கு என்ன நடக்கும் என்பதை அக்கணக்கின் உரிமையாளர் உயிருடன் இருக்கும் போதே தீர்மானித்துகொள்ள...

ரவிகரனை ரி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு வருமாறு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு பொலிசார் ஊடாக இந்த அழைப்பாணையை கடந்த புதன்கிழமை பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் விடுத்துள்ளனர் என மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். அந்த அழைப்பாணையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத...

கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிஐடி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு பொலிஸாரால் (சிஐடி) விசாரிக்கப்பட்டுள்ளார். யுத்த காலத்தில் சட்டவிரோதமாக ஆயுதக் கிடங்குகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழேயே அவர் விசாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காலி துறைமுகத்தில் தடுத்து சோதனையிடப்பட்ட மிதக்கும் ஆயுதக்கிடங்கு மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இருந்த...

‘நம்பகமான விசாரணை வேண்டும்’: போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள்

இலங்கையில் கடந்த காலங்களில் நடந்துள்ள வன்முறைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக சுதந்திரமானதும் நம்பகத்தன்மை உள்ளதுமான விசாரணைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் 20 பொது அமைப்புக்களும் இணைந்து கையெழுத்திட்டு...

என்னை அறிந்தால் இரண்டாவது பாகம்!

என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது என்று மீண்டும் கூறியுள்ளார் கௌதம். தோல்விகளால் துரத்தப்பட்டு தமிழ் சினிமாவின் விளிம்புக்கு சென்ற கௌதமை மீண்டும் மையத்தில் உட்கார வைத்துள்ளது, என்னை அறிந்தால். தன்னுடைய ஸ்கிரிப்டோ இயக்கமோ இதற்கு காரணமல்ல, அஜீத் என்ற நடிகரின் ஸ்டார் பவரே காரணம் என்பது அவருக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது....

ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் மீண்டும் ஒரு இசையமைப்பாளர்

ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் ஏற்கெனவே ரெஹனா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையமைப்பாளர்களாக உருவெடுத்துள்ளனர். தற்போது இவரது குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு இசைக்கலைஞன் உருவாகியுள்ளார். ரகுமானின் தங்கை மகனான இ.ஆர்.அசார் காஷிஃப் ‘கண்ணாலே’ என்ற மியூசிக் வீடியோ மூலம் இசையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறார். இளமை பொங்கும் இந்த காதல் பாடலை காஷிஃப் இசையமைக்க,...

நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு மேல்நீதிமன்றும் தடை உத்தரவு!

மல்லாகம் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ஆட்சேபித்து நொதேர்ன் பவர் நிறுவனத்தினரால் யாழ்.மேல் நீதிமன்றில் செய்யப்பட்ட முறையீட்டை விசாரித்த நீதிமன்று அந்த தடையை தொடர்ந்து அமுல்படுத்த உத்தரவிட்டது. சுன்னாகம், தெல்லிப்பழை பகுதிகளில் கிணறுகளில் கழிவு ஒயில் கலந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களால் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நொதேர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூட மல்லாகம் நீதிமன்று...

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டார் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!

யாழ்ப்பாணம் வந்துள்ள கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க, இன்று வெள்ளிக்கிழமை மதியம் காங்கேசன்துறை துறைமுகத்தை நேரில் பார்வையிட்டார். இவருடன் கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். துறைமுகத்தை நேரில் அவதானித்த இந்தக் குழுவினர் அதன் அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடினர். காங்கேசன்துறை துறைமுகத்தை...

இலங்கை குறித்த விசாரணையில் மாற்றமில்லை!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் மாற்றம் இல்லை என்பதே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிலைப்பாடு என, அவரது பேச்சாளர், ஸ்டீவன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்குள்...

கையெழுத்து போராட்டம்

முன்னிலை சோஷலிச கட்சியின் ஏற்பாட்டில் 3 கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து போராட்டமொன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (13) முன்னெடுக்கப்படுகின்றது. 'குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே!', 'காணாமற்போனோர், கடத்தப்பட்டோரின் விபரங்களை வெளிப்படுத்து!' மற்றும் 'அரசியல் கைதிகளை விடுதலை செய்!' ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாடளவிய...

போலி ஆவணங்களுடன் காணிகள் வழங்கிய டக்ளஸ், விமல் – விஜயகலா

யாழ்ப்பாணம், நாவற்குழியில் வழங்கப்பட்ட காணிகள், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரினால் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ளன என்று மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். நாவற்குழி மேற்கு புதிய குடியிருப்பு மக்களை வியாழக்கிழமை (12) சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு...

உள்ளக விசாரணையே அரசாங்கத்தின் நோக்கம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் சம்பந்தமாக சர்வதேச விசாரணை மேற்கொள்வதை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளக விசாரணையை செய்வதையே எதிர்பார்க்கிறது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவுக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

இன்று உலக வானொலி தினம்!

உலகளாவிய ரீதியில் உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி அனைத்து உலக மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அனைத்து உலகத்திலும் அனைத்து வகுப்பு ரீதியான மக்களும் அதிகமாக விரும்பிக் கேட்பது வானொலி ஆகும். உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்கவே 2010...

கண்கவர் உலக கோப்பை தொடக்க விழா!

உலக கோப்பை தொடக்க விழா நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் ஆகிய இரு நகரங்களிலும் ஒரே நேரத்தில் நடந்தது. ஒவ்வொரு நாட்டுகுழுவும் தங்களது கலைநிகழ்ச்சிகளை திரண்டிருந்த கூட்டத்தினர் முன்பு நிகழ்த்தி காண்பித்தனர். இலங்கை சார்பில், எமது நாட்டின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலையில் கிரீடம் வைத்துக் கொண்ட பெண்கள் இரு குழுவாக...

தாஜ்மகால் அருகே ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து

டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் 17–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மகால் உள்ளது. இதை நாட்டின் நினைவுச்சின்னமாக மத்திய அரசின் தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் தாஜ் மகாலின் அருகே 500 மீட்டர் தூரத்தில் உள்ள அரங்கில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு...

இலங்கைக்கு எதிரான அறிக்கை மார்ச்சில் வெளியாகாது! – மங்கள

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியாவதை தடுக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியை சந்தித்த பின்னர் வாசிங்ரனில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த அறிக்கையை எப்போது வெளியிடுவது என்ற முடிவை எடுப்பது...
Loading posts...

All posts loaded

No more posts