Ad Widget

நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு மேல்நீதிமன்றும் தடை உத்தரவு!

மல்லாகம் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ஆட்சேபித்து நொதேர்ன் பவர் நிறுவனத்தினரால் யாழ்.மேல் நீதிமன்றில் செய்யப்பட்ட முறையீட்டை விசாரித்த நீதிமன்று அந்த தடையை தொடர்ந்து அமுல்படுத்த உத்தரவிட்டது.

jaffna_power_plant_chunnnakam

சுன்னாகம், தெல்லிப்பழை பகுதிகளில் கிணறுகளில் கழிவு ஒயில் கலந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களால் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நொதேர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூட மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக குறித்த நிறுவனம் யாழ்.மேல் நீதிமன்றில் முறையீடுசெய்தது. இந்த மேன்முறையீடு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நொதேர்ன் பவர் நிறுவனம் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்குமாறும், குறித்த நிறுவனத்தை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி விண்ணப்பம் செய்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணியான மணிவண்ணன் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்தார். இதனையடுத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற வழக்கேட்டினை மேல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு உத்தரவிட்ட மேல்நீதிமன்ற நீதிபதி, தடையுத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று உத்தரவிட்டார்.

Related Posts