Ad Widget

தாஜ்மகால் அருகே ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து

டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் 17–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மகால் உள்ளது. இதை நாட்டின் நினைவுச்சின்னமாக மத்திய அரசின் தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.

Ar-rahman

இந்த நிலையில் தாஜ் மகாலின் அருகே 500 மீட்டர் தூரத்தில் உள்ள அரங்கில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமான வருகிற 28–ந்தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக ஆக்ரா நகர வளர்ச்சி குழுமத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. இதுபற்றி தொல்லியல் துறை மற்றும் சுற்றுச் சூழல் துறையிடம் ஆக்ரா வளர்ச்சி குழுமம் கருத்து கேட்டது. அப்போது தாஜ்மகால் அருகே இசை நிகழ்ச்சி நடத்துவதால் இசைக்கருவிகளின் அதிக அளவிலான சப்தத்தால் ஒலி மாசு ஏற்படும். மேலும் விளக்கு வெளிச்சமும் அதிக அளவில் பயன்படுத்தப்படும். இது தாஜ்மகாலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்து இருந்தது.

இதையடுத்து ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு ஆக்ரா நகர வளர்ச்சி குழுமம் அனுமதி மறுத்தது. இதனால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts