போல்டின் சுழலில் மடிந்தது ஆஸி!

நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் குழு 'ஏ' இற்கான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 32.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது....

கச்சதீவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட படகுகள் : காத்திருக்கும் மக்கள்

கச்சதீவு செல்வதற்கான பதிவு செய்யப்பட்ட படகுகள் குறைவாக இருப்பதால் 200க்கு மேற்பட்ட மக்கள் குறிகட்டுவானில் படகுகளுக்காக காத்திருக்கின்றனர். இதுவரையில் 700க்கு அதிகமான மக்கள் பதிவு செய்யப்பட்ட 5 படகுகள் மூலம் சென்று விட்டனர் எனினும் மீதமுள்ள 200க்கு அதிகமான மக்கள் குறிகட்டுவானிலேயே காத்திருக்கின்றனர். இதேவேளை படகு மூலம் கச்சதீவு செல்வதற்கு மாத்திரம் 5 மணித்தியாலங்கள் தேவை...
Ad Widget

தேசிய அர­சாங்கம் உருவாக்கப்­ப­டு­மாயின் எதிர்க்­கட்­சி­யாக தமிழ் ­தே­சியக் கூட்­ட­மைப்பு

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஐக்­கிய தேசியக் கட்சி ஒன்­றி­ணைந்த தேசிய அர­சாங்கம் உருவாக்கப்­ப­டு­மாயின் நாடா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு உரு­வெ­டுக்கும். அமர்­த­லிங்­கத்­தினால் ஏற்­பட்ட அச்­சு­றுத்தல் இனி ஒரு போதும் இடம்­பெற அனு­ம­திக்­கக்­கூ­டாது என தெரி­விக்கும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­யான தூய்­மை­யான ஹெல உறு­மய யாருக்கும் திறக்­காத சர்­வ­தேச கத­வுகள் எதிர்க்­கட்­சிக்­காக திறக்கும்...

வடக்கின் பெரும்போர் 5ம் திகதி ஆரம்பம்!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி வரும் 5, 6, 7 ஆம் திகதிகளில் இடம்பெறும். 109 ஆவது தடவையாக நடக்கும் இந்தப் போட்டிக்கு 'எயார்ரெல் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது. மைதானத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவர். இதுவரை நடந்து...

தொழிநுட்பக் கூடம் திறந்து வைப்பு

இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை (27) இளவாலை ஹென்ரியரசர் கல்லூரியிலும் வேம்படி மகளிர் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் கூடத்தை திறந்து வைத்ததோடு, யாழ். மத்திய கல்லூரிக்கு கணணிகளையும் வழங்கி...

128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது – தவராசா

128 அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபை தவறியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 690 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும், வடமாகாண சபையினால் 16 மில்லியன் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்படவில்லை என்று வடமாகாண சபைக்குரிய இணையத்தில் வெளியிட்ட கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா இந்த பிரச்சினையை இம்மாதம் 24ஆம் திகதி அவையில் பிரஸ்தாபித்தார்....

யாழ். எஸ்.எஸ்.பி கொலைக்குற்றச்சாட்டில் கைது

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன கொலை குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொம்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே விமலசேன கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.எஸ்.பியுடன் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணத்திற்கு பதவியேற்று வருவதற்கு...

போதனா வைத்தியசாலை கழிவுகளை அகற்ற பணிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 நாள்களாகக் கழிவகற்றப் படாததால் அங்கு குப்பைகள் நிரம்பி வழிகின்றன. அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் செயலாளருடனான சந்திப்பை அடுத்து 2 நாள்களில் அவற்றை அகற்றுமாறு முதலமைச்சர் யாழ்.மாநகர சபைக்குப் பணித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.ஸ்ரீப வானந்தராஜா தெரிவித்தார். யாழ்.மாநகர எல்லையில் குப்பை அகற்றுவது தொடர்பான சிக்கல்...

மணிரத்தினம் இயக்கத்தில் ‘ஓகே கண்மணி’ – டீசர்

துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், மணிரத்தினம் இயக்கத்தில் ஓகே கண்மணி டீசர்.

பிப்ரவரி கடைசி வெள்ளி… 5 புதுப் படங்கள் வெளியீடு

பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நேற்று. இந்த நாளில் 5 புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டைதான் இவற்றில் பெரிய படம். மற்றவை கிடைத்த இடைவெளியில் வெளியானால் போதும் என்று ரிலீஸ் ஆகியிருக்கின்றன. டாணா என்ற தலைப்புடன் ஆரம்பமான படம் இது. பின்னர் சத்யா மூவீசுக்கு பணம் கொடுத்து, காக்கிச் சட்டை...

திருட்டு விசிடி, நடிகைகளின் ஆபாசப் படங்கள் – விவாதிக்கிறது நடிகர் சங்க செயற்குழு

நடிகர் சங்க செயற்குழு இன்று கூடுகிறது. செயற்குழு கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி துணை தலைவர்கள் விஜயகுமார், காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு அச்சுறுத்தலாக உள்ள திருட்டு விசிடியை ஒழிப்பது குறித்தும், சமீபமாக நடிகைகளின் ஆபாசப் படங்கள்...

கணவரை சேர்த்து வைக்க கோரி கவிஞர் தாமரை போராட்டம்

பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. ‘மின்னலே’ படத்தில் எழுதிய வசீகரா பாடல் தாமரையை பிரபலபடுத்தியது. ´சுப்ரமணியபுரம்´ படத்தில் எழுதிய கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் பாடல் மூலம் முன்னணி பாடலாசிரியர் ஆனார். ´உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்´ படத்தில் எழுதிய மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா, ´தெனாலி´ படத்தில்...

யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்திய வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்து யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மதியம் 1.30 மணிக்கு தொழுகை முடிந்ததும் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும், எனவே அரச அதிகாரிகள் உடனடியாக...

மே.தீவுகள் அணி வீரர்களைப் பந்தாடிய தெ.ஆபிரிக்கா

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 409 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. உலகக் கிண்ணத் தொடரின் 19வது போட்டியாக பி பிரிவிலுள்ள தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த...

மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பாரவூர்தி உரிமையாளர்கள் போராட்டம்!

மகேஸ்வரி நிதியம் தமது தொழிலை அழித்துவிட்டது என்று கூறி யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் மகேஸ்வரி நிதிய அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தினர். ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே!, எங்கள் வைப்புப் பணத்தை வட்டியுடன் திருப்பித் தா!, சேமிப்பு பணத்தை எமது சங்கத்திடம் மீள ஒப்படை! போன்ற கோரிக்கைகள் முன்வைத்தே...

வலி.வடக்கில் 1000 ஏக்கர் நிலங்களை மூன்று கிழமைகளில் விடுவிக்க நடவடிக்கை

வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக்...

வடமாகாணசபை தீர்மானத்தின் பிரதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைப்பு

வடமாகாண சபையில் கடந்த 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தின் பிரதிகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 'தமிழ் மக்களின் உண்மையான அழிவுகளையும் இழப்புக்களையும் விளங்கிக்கொண்டு நீதியான நியாயமான முறையில் செயற்பட...

20 வருடப் பிரச்சினையை குறுகிய நாட்களில் முடிக்க முடியாது – சுவாமிநாதன்

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது 20 வருடங்களுக்கு மேலாக இருக்கின்ற பிரச்சினையாகும். இதனை குறுகிய நாட்களுக்குள் தீர்க்க முடியாது. எனது கடமையை நான் உணர்ந்து செல்லும் இடங்களிலுள்ள பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்பேன் என மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சர் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்புப் ஆகிய பகுதிகளுக்கு...

இளைஞனை காணவில்லை

யாழ்ப்பாணம், மாலுசந்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்ற இளைஞனை கடந்த 25ஆம் திகதி முதல் காணவில்லையென அவரது தாயாரால் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. 25ஆம் திகதி காலை வீட்டுக்கு வந்திருந்த இரண்டு இளைஞர்கள் குளிர்பான நிலையமொன்றின் வேலைக்காக தனது மகனை அழைத்துச் சென்றதாகவும் அப்போது சென்றவர், இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும்...

இரு பிரதேச சபைத்தேர்தலுக்கு இடைக்கால தடை

நாளை சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts