Ad Widget

கச்சதீவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட படகுகள் : காத்திருக்கும் மக்கள்

கச்சதீவு செல்வதற்கான பதிவு செய்யப்பட்ட படகுகள் குறைவாக இருப்பதால் 200க்கு மேற்பட்ட மக்கள் குறிகட்டுவானில் படகுகளுக்காக காத்திருக்கின்றனர்.

இதுவரையில் 700க்கு அதிகமான மக்கள் பதிவு செய்யப்பட்ட 5 படகுகள் மூலம் சென்று விட்டனர் எனினும் மீதமுள்ள 200க்கு அதிகமான மக்கள் குறிகட்டுவானிலேயே காத்திருக்கின்றனர்.

இதேவேளை படகு மூலம் கச்சதீவு செல்வதற்கு மாத்திரம் 5 மணித்தியாலங்கள் தேவை அதுவரையிலும் மக்கள் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

Related Posts