- Friday
- May 8th, 2026
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பதத்தை எவரும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உபயோகிக்காதிருக்கும் வகையில் தடை விதிக்குமாறு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு கடந்த மார்ச் 30ஆம் திகதியிட்டு ஆனந்தசங்கரி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எனது...
"யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளின்றி தவிக்கும் நிலையில், 200 கோடி ரூபா செலவில் மஹிந்த அரசு அங்கு ஜனாதிபதி மாளிகை அமைக்க முற்பட்டது. இதை நாம் நிறுத்தியுள்ளோம். அத்துடன், 10 வருடங்களில் மஹிந்த அரசால் செய்யமுடியாத விடயங்களை தற்போதைய அரசு 88 நாட்களில் செய்திருக்கிறது." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதிய அரசின் 100...
வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு தொடர்பில் வடமாகாணசபையின் நிபுணர் குழு அறிக்கையின் விளக்கத்தை எழுத்து மூலம் தருமாறு கோரி, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் உண்ணாவிரதம் இருந்த 8 பேரில் இருவர் நேற்று இரவு மயங்கி விழுந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அறிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் கிணற்றில்...
யாழ்.மின்சார நிலைய வீதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் குறித்த வீதியால் செல்லும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த காலங்களில் வெளிநோயாளர் பிரிவாக இருந்த குறித்த கட்டடம் தற்போது விபத்து பிரவாக புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் இந்தக் கட்டடம் யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதியுடன் இடிக்கப்பட்டு வருகிறதாக தெரிய...
ராவணனை போல இந்திய அணி கேப்டன் டோணி அழியப்போகிறார் என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தந்தை யோக்ராஜ் சிங் சாபமிட்டு பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை. அவரை அணியில் சேர்க்காமல் இருக்க டோணி தூண்டுதல் காரணம் என்று யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பேட்டியளித்து...
செம்மரம் வெட்டியதாக கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திரா போலீசார் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 12 பேர் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது 20 பேருமே தமிழர்கள்தான் என்று ஆந்திர மாநில வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திராவில் செம்மரம்...
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது போன்று 5000 ரூபா மஹாபொல புலமை பரிசில் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (07) உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, தேர்தல் சட்ட திருத்தம் குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். 100 வேலைத் திட்டம்...
தூய நீருக்காக உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் செய்தி சேகரித்த பின்னர் வீடு திரும்பிய மூன்று ஊடகவியலாளர்களை கத்தியுடன் சிவில் உடை தரித்த இருவர் மோட்டார் சைக்கிளில் துரத்திய சம்பவம் ஒன்று நேற்று இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர் மயூரப்பிரியன் கூறுகையில், நல்லூர் முன்றலில் தூய நீருக்காக உண்ணாவிரத போராட்டத்தில்...
முல்லைத்தீவு நாயாற்று கடல் பகுதியில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையில் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றபோது, ரவிகரன் இந்தப் பிரேரணையை கொண்டு...
வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பில் வடமாகாண சபையின் நிபுணர் குழு அறிக்கையின் விளக்கத்தை எழுத்துமூலம் தருமாறு கோரி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் 8 பேர் சாகும்வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அறிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் நீரில் நச்சுப்பதார்த்தங்கள் இல்லையென்றால் அந்நீரை பொதுமக்கள் பருகலாமா என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என்பது அவர்களது பிரதான...
தூய நீருக்கான ஆர்ப்பாட்ட பேரணி, மாவட்டச் செயலகத்தை அண்மித்தபோது மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலின் கதவுகள் பூட்டு இடப்பட்டு பூட்டப்பட்டிருந்தன. தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், விதை குழுமம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் யாழ்.மாவட்டச் செயலாளருக்கு மகஜர் வழங்குவதற்காக பேரணியில் கலந்து கொண்டவர்கள் மாவட்டச்...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த கட்சியின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடலாம் என்பது தொடர்பாக விரைவில் தீர்மானிக்கப்படும் என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் இன்னும் பயின்று கொண்டிருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று கூடியது. சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்த...
புதிய அரசானது ஆட்சி மாறிவிட்டது காட்சி மாறி விட்டது என்று வெளிநாடுகளுக்கு காட்டுகின்றது ஆனால் இங்கு காட்சி மாறவில்லை இது தான் உண்மை இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்றைய அமர்வில் தெரிவித்தார். உறுப்பினர் ரவிகரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தென் இலங்கை மீனவர்களின் அத்துமீறிய வருகை நிறுத்தப்படவேண்டும் என்ற ஆதரவு தெரிவித்து உரையாற்றுகையில் இவ்வாறு...
தேசிய அரசு உதயமாகிய பின்னர், நாடாளுமன்றில் நேற்று முதன்முறையாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 21 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. திறைசேரி உண்டியலூடாக அரசு பெற்றுக்கொள்ளக் கூடிய கடன் தொகையை 400 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்த இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 31 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இவ்வாறு பிரேரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சி...
யாழ் குடாநாட்டின் நீர்வளத்தை மீட்புச் செய்யும் தலையாய பணியில் நிபுணர்கள் அனைவரையும் வடக்கு மாகாணசபையுடன் கரம் கோர்க்குமாறு வேண்டி நிற்கிறோம் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர்கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (07.04.2015) வடக்கு மாகாணசபையின் 27வது அமர்வு நடைபெற்றபோது சுன்னாகம் நிலத்தடிநீரில் எண்ணெய் மாசு தொடர்பான...
வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் மேரி கமலா குணசீலனுக்கு பதிலாக புதிய உறுப்பினராக எம்.பி.நட்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற போது, புதிய உறுப்பினர் சபைக்கு வருகை தந்தார். சுழற்சிமுறையில் வடமாகாண சபை உறுப்பினர் பதவியை வகிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் பதவியேற்ற...
சாவகச்சேரி நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் சபையின் உபதவிசாளருமான குந்தன் யோகராஜாவை, திங்கட்கிழமை (06) இரவு இனந்தெரியாத நபர்கள் தாக்கியதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வரணி இயற்றாலை பகுதியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பில் உபதவிசாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம்...
சுனாமிக்கு பின்னர் வடக்கில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம், ஒரு வீட்டைக்கூட நிர்மாணிக்காமல் 1,470 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணை குழு அறிவித்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார். இந்த...
இன்று முதல் கையடக்கத் தொலைபேசி முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு 25 சதவீத கட்டணக் குறைப்பு சலுகை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சகல உள்நாட்டு அழைப்புக்களுக்கும் இந்த கட்டணக் கழிவு நடைமுறைப்படுத்தப்படும். மைத்திரி அரசால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு அமைய இந்த சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. எனினும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களின்...
Loading posts...
All posts loaded
No more posts
