Ad Widget

காணாமற் போனோர், அரசியல் கைதிகளின் உறவுகளின் கண்ணீர் கதறல்!

காணாமற் போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் கோரி அவர்களின் உறவுகள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். இதன்போது அவர்களின் கண்ணீர்க் கதறலால் யாழ். நகரமே சோக மயமானது. யாழ்ப்பாணம் பஸ் நிலையம் முன்பாக முற்பகல் 10 மணியளவில் ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். "அரசே காணாமல் போனோரை கண்டுபிடித்துத் தா",...

2015 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 6ம் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கலாம். பாடசாலை பரீட்சார்த்திகள் தங்களின் விண்ணப்பங்களை பாடசாலை அதிபரின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம். இதன்படி...
Ad Widget

வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் – வடமாகாண ஆளுநர்

வடமாகாணத்தில் வாழும் சாதாரண மக்களின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு நிலையான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது எமது பொறுப்பும் கடமையுமாகும் என்று வடமாகாணத்தின் புதிய ஆளுநர் எச்.எம்.பி.எஸ். பளிகக்கார தெரிவித்தார். வடமாகாணத்தில் வாழும் மக்களின் தேவைகளையும், அவர்களது எண்ணங்களையும் சரியான முறையில் அடையாளம் காண வேண்டும். நீண்ட காலமாக பல தரப்புக்களுடனும் செயற்பட்ட இவர்களது பிரச்சினைகளுக்கு...

நகுலேஸ்வர ஆலய தேர்த்திருவிழா!

நகுலேஸ்வர ஆலயத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கடந்த 04 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவத்தின் சப்பறத் திருவிழா எதிர்வரும் 16 ஆம் திகதியும் தேர்த்திருவிழா 17 ஆம் திகதியும் அன்றைய தினமே மகா சிவராத்திரி நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் பண்ணிசைக் கச்சேரி, புராணப்படலம், இன்னிசைக் கச்சேரி, பஜனை, என்பனவும்...

யாழ் மாவட்ட படைத்தலைமையகத்தால் பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கான உதவி

யாழ் மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் 2014 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்​வொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று (08) நடைபெற்றது. 51, 52 மற்றும் 55 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்...

இந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு?

பொதுப் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படாவிடின், நாடாளுமன்றம் இந்தவாரம் கலைக்கப்பட்டுவிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று (08) தெரிவித்தார். ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே...

நிதி அமைச்சின் சில ஆவணங்களைக் காணவில்லையாம்!

நிதி அமைச்சின் 2000க்கும் அதிகமான ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இவற்றில் முக்கியமான ஆவணங்களும் அடங்குவதாக அவர் கூறியுள்ளார். மேலும் இவற்றை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். விரைவில் இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரிசியின் விலையில் மேலும் அதிகரிப்பு?

வரவு செலவு திட்டத்தில் நெல் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயாக அதிகரித்தமையால் அரிசி விலை குறைக்கப்படும் என எதிர் பார்த்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். எப்படியிருப்பினும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பினால் வாடி க்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப் பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. புதிய விலையின் கீழ் கடைகளில் நாட்டு அரிசி ஒரு கிலோ 85...

ஹக்கீமின் தேசிய அரசுக்கான அழைப்பை ஏற்க ஆலோசித்துவருகிறதாம் கூட்டமைப்பு!

கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசை நிறுவுவதற்கான ஹக்கீமின் அழைப்பை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது என்றும், இதுகுறித்த முடிவை நாளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவிப்பார் என்றும் தெரியவந்துள்ளது. மத்தியைப்போன்று, மாகாணத்திலும் தேசிய அரசை உருவாக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி என்பன முன்வரவேண்டும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ஹக்கீம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்....

யாழில் இன்று போராட்டம்!

காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தவுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்ற போராட்டங்களைத் தொடர்ந்தே இன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தின் முன்பாக இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தப் போராட்டங்களை வவுனியா, மன்னார் மாவட்டங்களின் பிரஜைகள் குழு, 'நாங்கள்'...

வீதியில் துரத்திச்சென்று இளைஞனின் கையை வெட்டிய குழுவினர்

யாழ்ப்பாணம் கோப்பாய் அம்மன் கோவிலுக்கு அருகில், ஞாயிற்றுக்கிழமை(08) இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞனின் கை வெட்டப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் பகுதியை சேர்ந்த ஏ.அலெக்ஸ்தீபன் (வயது 20) என்பவரே இவ்வாறு கையை இழந்து படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனை வீதியில் துரத்தி சென்ற குழுவினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன்...

சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஐவர் கைது

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை(07) இரவு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொகான் மகேஸ் தெரிவித்தார். தாவடி, இளவாலை மற்றும் ஆனைக்கோட்டையை சேர்ந்த இந்த சந்தேகநபர்களிடமிருந்து குறடுகள், கத்தி மற்றும் கம்பிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன. வீதியில் நடமாடிய சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, சந்தேகத்துக்கிடமான...

மகிந்தவின் ஆட்சியில் உரிய அந்தஸ்து தரப்படவில்லை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எனக்கும் கூட சரியான அந்தஸ்து தரப்படவில்லை. ஆனாலும் நான் கட்சியை விட்டு ஓடிவிடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். எந்தப் பதவி என்றாலும் கட்சிக்காக தொடர்ந்து போராடுவதே சிறந்தது. எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெப்ரவரி 14 ஆம் திகதியன்று கலந்துரையாடவுள்ளதாகவும்...

இந்த வாரத்துள் 3000 ஏக்கர் விடுவிப்பு

வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் ஒரு பகுதியை முதல் கட்டமாக இந்த வாரத்துக்குள் விடுவிப்பதற்கு கொழும்பு அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளதாக நம்பகரமாக தெரிய வருகிறது. தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முதலில் சில ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்குத தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம்...

பிரபல காமெடி நடிகர் செல்லத்துரை மரணம்!

ஹலோ பிரபா ஒயின்ஸ் ஆப் ஓனர் இருக்காரா? என்று வடிவேலு கேட்கும் காமெடி காட்சியை யாரும் இன்றும் மறந்திருக்க முடியாது. இந்த காட்சியில் மட்டுமில்லாமல் பல படங்களில் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்தவர் செல்லத்துரை. இவர் உடல் நிலை சரியில்லாமல் காலமானார். இவரின் வயது 74. சில நாட்களாகவே சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அரசு...

காணாமற்போன வாகனங்களைத் தேடும் புதிய அரசு காணாமற்போனவர்கள்பற்றி அக்கறை காட்டவில்லை

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், கடந்த ஆறு வருடங்களாகக் காணமற்போனவர்களைத் தேடி அவர்களது உறவுகள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்தும் புதிய அரசு அதுபற்றி அக்கறை காட்டுவதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். காணாமற்போனவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச்...

மாற்றத்துக்காய் வாக்களித்தோம் மாற்றுவீரா எம் வாழ்வை?

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டப் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காணாமல் போனோரை கண்டுபிடிக்க கோரியும், கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியுமே இந்தப்...

மஹிந்த அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – ஜே.வி.பி

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும், இதுவரை காலமும் தமது பிரச்சனையை வெளியிடாது மௌனமாக இருந்த அனைவரும், தமது முறைப்பாடுகளை மக்கள் விடுதலை முன்னணியின் நீதி வழங்கும் குழுவிடம் அறியத்தருமாறு மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது...

20 கிலோ கஞ்சா மீட்பு

பருத்தித்துறைமுனை கடற்கரைப் பகுதியிலிருந்து 20 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா பொதியொன்று ஞாயிற்றுக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவான் பி.தந்தநாராயண தெரிவித்தார். கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டு பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கஞ்சா மீட்கப்பட்டது. மேற்படி பகுதியில் கஞ்சா பொதியிருப்பதை அவதானித்த இராணுவத்தினர் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின்...

சாவகச்சேரியில் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் படுகாயம்

சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த செல்வராசா உதயராசா (வயது 34) என்பவரே படுகாயமடைந்தவராவார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வீட்டில் இருந்த குடும்பஸ்தரை வெளியில் அழைத்த 6 பேர் கொண்ட குழுவினர்,...
Loading posts...

All posts loaded

No more posts