- Tuesday
- May 12th, 2026
இன்று (13-08-2015 )வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு அகில இலங்கை தமிழ்காங்கிரஸ்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பரப்புரைக்கூட்டம் பருத்தித்துறை மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் தலைமையில் இப் பரப்புரைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை இலக்கு வைத்து பொலிசாரின் அடாவடிச் செயற்பாடுகள் தொடர்கின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று புதன்கிழமை சைக்கிள் சின்னத்தின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை அழைத்து வருவதற்காக...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் பயப்பட தேவையில்லை சிலர் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரிய வரும் என மிரட்டுவதாக தகவல்கள் உண்டு அவ்வாறு நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதனை யாராலும் எச் சந்தர்ப்பத்திலும் பார்க்க முடியாது எனவே அவ்வாறானவர்களின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்....
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக இலவச பஸ் சேவை நடத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் தெரிவித்தார். கரவெட்டி பிரதேச செயலகத்திலிருந்து குஞ்சர் கடையடி, நெல்லியடி, கொடிகாமம் வீதி, துன்னாலை கலிகைச்சந்தி, மந்திகைச்சந்தி, மாலுசந்தி, உடுப்பிட்டி, அச்சுவேலி, புன்னாலைக்கட்டுவன், வசாவிளான், மல்லாகம் ஊடாக...
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏற்பாடாகியிருந்த வாக்களிப்பு நிலையங்களில் 13 நிலையங்களின் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் தெரிவித்தார். புங்குடுதீவு சித்தி விநாயகர் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையம், புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாலயத்துக்கும் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் இருந்த இரண்டு...
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 183 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் நேற்று காலி சர்வதேச விளையாட்டரங்களில் ஆரம்பமாகிய முதலாவது போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில்...
கிளிநொச்சிப் பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் லொறி ஒன்று தீக்கிரையாகியுள்ளது. நேற்று மாலை 05.15 அளவில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து வெளியேறிய பொற்றோலினாலேயே லொறி தீப்பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், புதன்கிழமை (12) உத்தரவிட்டார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 60 நாட்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட 9 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, 4ஆவது சந்தேகநபரிடமிருந்து...
புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கை திசைதிருப்பும் விதத்தில் நடந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐ.தே.கவின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் பிரபல வர்த்தகருமான துவாரகேஸ்வரனை 20 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதித்தது. மாணவியின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி வந்த சட்டத்தரணி கே.வி.தவராசாவை...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய அனைவருக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அந்த வகையில் வாக்காளர்களின் தூரத்தை கருத்திற்கொண்டு குறைந்தது அரைநாள் முதல் ஒருநாள் வரையான விடுமுறை வழங்கப்பட வேண்டும்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஊடகவியலாளர் வித்தியாதரனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்தச் சூழ்நிலையில், 27 வருடங்களாக மக்களின் விடிவுக்காக களமாடிய முன்னாள் போராளி ஒருவர் தனது குமுறல்களை எம்முடன்...
எதிர்வரும் 17.08.2015 அன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை.... எதிர்வரும் 17.08.2015 அன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக ஒன்றுக்கொன்று முரணான நிலைப்பாடுகளை வெவ்வேறு அரசியற் கட்சிகள் மட்டுமின்றி ஒரே கட்சியின் வெவ்வேறு வேட்பாளர்களும் வெளியிட்டு வருகின்ற நிலையில் ‘‘மெய்ப் பொருள் காண்பது...
இலங்கை அரசால் வடமாகாணத்தில் நியமனம் செய்யப்பட இருக்கும் 361 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களில் 332 பேர் சிங்களவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து, தமிழ் மக்களுக்கு உரிய நியாயம் விரைவில் கிடைக்காவிடில் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் நியமனங்களில் 90 விழுக்காடு சிங்களவர்கள் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று புதன்கிழமை (12.08.2015) யாழ்...
லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் அமெரிக்க ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புது ஹீரோவாக நடிக்க இவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். சிவா கனேஸ்வரன் என்னும் இந்த ஈழத் தமிழ் இளைஞர் ஏற்பனவே லண்டனில் மிகவும் பிரபல்யமானவர். ஆரம்ப காலங்களில் அவர் மாடலாக இருந்தார். பின்னர் அவர் "வாண்டட்" என்னும் இசைக் குழுவில்...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர முடியாது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் அதற்கான அனுமதி இல்லை என்று வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் நடுநிலை வகிக்கப்போவதாக அறிவித்தமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், முதலமைச்சருக்கு எதிராக வடமாகாண சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக்...
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டார். கடந்த மே மாதம் 20ஆம் திகதி, நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில், 27பேர் தொடர்ந்து விளக்கமறியலில்...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து மற்றும் சுழல்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்களுக்கு பாரிய நெருக்கடியை கொடுத்துள்ளனர். காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் மதியபோசன இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும்...
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட குறித்த இலங்கையர்கள் இருவரும் இந்திய சுங்க திணைக்களத்தின் உளவுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. கைது செய்யப்பட்ட இருவரும் தமது பாதங்களுக்கிடையில்...
இன்றைய சூழ்நிலையில் சில அரசியல் கட்சிகள் பணத்துக்காக உறுப்பினர்களை கட்சியில் இணைத்து வேட்பாளர்களாக்கும் நிலையில் தமிழர் விடுதலை கூட்டணி சாதாரண சிவில் சமூகத்தவர்களையும் புத்தியீவிகளையும் வேட்பாளர்களாக நியமித்து தேர்தலில் போட்டியிடுகின்றது. மனோ கணேசன் பண பலம் படைத்தவர்களை கட்சியில் இணைத்து அரசியல் வங்குரோத்து நிலையை சீர் செய்வதற்காக மக்களின் எதிர் காலத்தை விலை பேச முடியாது...
கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று வயதுச்சிறுமியினுடைய மரணம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் பராமரிக்கப்பட்டுள்ள 14 வயதுச்சிறுவனை தொடர்ந்தும் குறித்த பாடசாலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை வைத்துப்பராமரிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு சக்திபுரம் பகுதியில் சந்திரகுமார் ஜெருசா...
Loading posts...
All posts loaded
No more posts
