Ad Widget

வாக்காளர்கள் யாருடைய மிரட்டல்களுக்கும் பயப்படத் தேவையில்லை : யாழ்.அரச அதிபர்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் பயப்பட தேவையில்லை சிலர் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரிய வரும் என மிரட்டுவதாக தகவல்கள் உண்டு அவ்வாறு நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதனை யாராலும் எச் சந்தர்ப்பத்திலும் பார்க்க முடியாது எனவே அவ்வாறானவர்களின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய தேர்தல் தொகுதியில் நிறைவடைந்துள்ளது.

526 வாக்கெடுப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பருத்தித்துறை கரவெட்டி மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்களில் இருந்து வாக்களர்களை அவர்களுக்கு உரிய வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளன.

எட்டாயிரம் உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை யாழ்.தேர்தல் மாவட்டத்தில் பாரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெறாது சுமூகமான நிலை காணப்படுகின்றது.

அத்துடன் வாக்களிப்பு நேரம் காலை 7 மணி முதல் மாலை 4 வரையில் தான் அன்றைய தினம் சிலர் வாக்களிப்பு நேரம் அதிகரிகப்பட்டுள்ளதாக வதந்திகளை பரப்புவார்கள் எனவே அது தொடர்பிலும் வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை பார்வையிடுவதற்கு

Related Posts