- Wednesday
- May 13th, 2026
வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் தற்துணிவு நடவடிக்கைகளினை கேள்விக்குட்படுத்துவது குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மேலும் வடக்கு மாகாண சபை, மாகாண சபை போல் இயங்க வேண்டுமெனவும் மாநகரசபை போல் இயங்கக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இறுதியாக நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம்...
புகைப்பிடித்தல் காரணமாக வருடத்திற்கு 30 ஆயிரம் பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவி க்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தந்தைகள் புகைப்பிடிப்பதன் காரணமாக உயிரிழக்கும் குழந்தைகளும் அவர்களுள் உள்ளடக்கப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புகைத்தலற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்குவதற்காக...
பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி நேற்று முன்தினம் முதற்தடவையாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. கல்வி அமைச்சுடன் இணைந்து இப்போட்டிகளின் ஒழுங்குகளை மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் இசுறுபாய ஆகியன மேற்கொண்டுள்ளன. 15 வயது பிரிவு,17 வயது பிரிவு மற்றும் 19 வயதுப் பிரிவு ஆண், பெண் ஆகிய நான்கு குழுக்களாக இடம்பெறும் இப்போட்டிகள் யாழ் மாவட்டத்தின்...
இவன் எல்லாம் உருப்படவே மாட்டான் என மதுரைக்கார பெண்கள் தனக்கு சாபமிட்டதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். சாஹசம் பட விழாவில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தான் சிறுவனாக இருக்கையில் நடந்த சம்பவத்தை பற்றி சுவாரஸ்யமாக கூறினார். அவர் தெரிவித்தாவது, "நான் சிறுவனாக இருக்கையில் என் அம்மாவுடன்...
பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக காணாமல் போனோர் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. நவம்பர் 9ம் திகதி முதல் 18ம் திகதி வரை இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் சமர்ப்பிக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவின் முன்னாள் இலங்கையின் பிரதிநிதிகளான பேராசிரியர் தயான் ஜயதிலக்க, தமரா குணநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஜீவ் வீஜேசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது இராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அது குறித்த எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு...
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெக்மோகன் டால்மியா காலமானார். கடந்த செப்டம்பர் 17ம் திகதி கொல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். மாரடைப்புக் காரணமாக உயிரிழந்த இவருக்கு வயது 75 என்பது குறிப்பிடத்தக்கது.
2015 இலங்கை அழகி போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற ஹர்சனி ருமான், 2015 உலக சுற்றுலா அழகி போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். இப்போட்டி லெபனானில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா - இலங்கைக்கு இடையே, சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான பேச்சு, அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கவுள்ளது. இந்திய மத்திய, சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் இது குறித்து கூறியதாவது, அண்டை நாடுகளுடன் வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்துவதற்கு, போக்குவரத்து வசதி மிகவும் முக்கியம் என, மத்திய அரசு கருதுகிறது. பங்களாதேஷ், பூடான், நேபாளம் ஆகிய...
இலங்கைத்தீவில் இணைந்த வடக்கு கிழக்கு தமிழர்களின் ©ர்வீகத் தாய்நிலம். இப்போது வடக்கை நிர்வகிப்பதற்குத் தனியாக வடக்கு மாகாணசபை, கிழக்கை நிர்வகிப்பதற்குத் தனியாக கிழக்கு மாகாணசபை என்று எமது தாய்நிலம் இலங்கை அரசாங்கத்தால் நிர்வாகரீதியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பொதுவேலைத்திட்டங்களில் நாம் ஒன்றிணைய வேண்டும் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண விவசாய அமைச்சு...
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையின் முதலாம் வரைபு இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரேரணையில் திருத்தங்கள் செய்யப்படாமலிருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் பேசவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்துவரும் நாட்களில் இலங்கை தொடர்பான பிரேரணை...
இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பதிலளிக்கும் வலுவான நோக்கத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ள, மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பதிலளிக்க சர்வதேச சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் கூடிய நம்பிக்கையான உள்நாட்டு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கத்திடம் மிகவும்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணப்படம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30ஆவது கூட்டத் தொடர் நடைபெறும் கட்டடத்தில் இந்த ஆவணப்படம் நேற்றுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் நீதிக்கான தேடல் என்ற சனல் 4இன் கெலும் மக்ரேயின் ஆவணப்படமே...
இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சார்பாக இடம்பெற்ற சிறிய கூட்டங்களின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கடத்தப்பட்டு காணாமல்போனோர் விவகாரம் தொடர்பாக Forum Asia, Franisans Intenational ஆகிய அமைப்புகள் நடத்திய சிறிய கூட்டங்களின்போது இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து...
"போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது. இதற்கான உள்ளூர் பொறிமுறையை உருவாக்க புதிய அரசியல் சட்டங்கள் அவசியம். இதனால் அச்சட்டங்களை உருவாக்குவது தொடர்பில் சகல தரப்புக்களுடனும் அரசாங்கம் பேச்சுக்களை நடத்துகிறது" - இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இருந்து...
இலங்கையில் சிறார் மீதான துஷ்பிரயோகம் அதிகரித்துவருவது குறித்து நாட்டின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளது. இந்த வருடம் செப்டம்பர் வரையிலான காலப் பகுதிக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பாக 6500க்கும் அதிகமான புகார்கள் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரா பிபிசி தழிழோசையிடம் தெரிவித்தார். கடந்த ஆண்டு...
சிரியாவை சேர்ந்த நான்கு வயது சிறுமியின் உடல் ஒன்று ஏஜியன் கடற்கரை ஓரமாக கரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகதிகளை ஏற்றிக்கொண்டு, கிரேக்கத் தீவு ஒன்றை நோக்கிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியிருப்பதாக துருக்கிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. பல குழந்தைகள் உட்பட 14 சிரிய நாட்டவர் காப்பாற்றப்பட்டுள்னர். இரண்டு வாரங்களுக்கு...
சர்வதேச கரையோரப் பாதுகாப்பு தினம் இன்று நினைவுகூரப்படுவதை முன்னிட்டு, இலங்கையிலும் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 55,000 இற்கும் அதிகமான தொண்டர் படையணி இந்த வேலைத்திட்டத்தில் இணைந்துகொண்டுள்ளது. கரையோரம்...
செம்டம்பர் 21ம் திகதி ஜெனீவாவில் முருகதாசன் திடலில் ஒரு மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. அப்பேரணியில் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு உங்களில் ஒருவனாக வேண்டிக்கொள்கிறேன். தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை சர்வதேசத்திற்கு உட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் பேரணி. இப்பொழுது அமொிக்கா பின்வாக்கியுள்ளது. இது விரும்பத்தகாதவொன்று. இது வருந்தத்தக்கவொன்று. எனினும் ஐ.நா தலையிட்டு இந்த விசாரணையை...
Loading posts...
All posts loaded
No more posts
