சுபாஷ் சந்திர போஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்கம்

சுபாஷ் சந்திரபோஸ் குறித்த 64 ரகசிய ஆவணங்களை மேற்குவங்க அரசு வெளியிட்டிருக்கிறது. இதுவரை கொல்கத்தா காவல்துறை வசமிருந்த இந்த ஆவணங்கள் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இருந்தபோதும், அந்த ஆவணங்களில் என்ன இருக்கின்றன என்பது இதுவரை தெளிவாகவில்லை. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை வெளியேற்றி தனியாக ராணுவமொன்றை நிறுவிய சுபாஷ் சந்திரபோஸை நேச நாட்டுப் படைகள் தேடிவந்தன. அவரது...

“புலிகளை வென்றதற்காக வருந்துகிறேன்” – கோட்டாபய

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை வென்றது குறித்து தான் வருந்துவதாகத் தெரிவித்திருக்கிறார். அந்தப் போரில் வென்றதால்தான் தன் மீது இப்போது போர்க்குற்றங்கள் சுமத்தப்படுவதாக அவர் கூறியிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை...
Ad Widget

தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விரைவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் – சி.தவராசா

மது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கச் செய்வதற்கு ஏற்றவகையில் சம்பந்தப்பட்டவர்கள் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலும் அவரது காரியாலயத்தினால் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

இலங்கைக்கு வெளியிலேயே கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்! – சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

இலங்­கையில் இடம்­பெற்­றுள்ள குற்­றங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு ஐ.நா. அறிக்­கையில் கூறப்­பட்­டுள்ள கலப்பு விசேட நீதி­மன்றம் நாட்­டுக்கு வெளியி­லேயே அமைய வேண்­டு­மென்றும், இதில் சர்­வ­தேச தரப்­பி­னரே அதி­க­ளவில் பங்கேற்கவேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தி­யுள்ளார் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன். இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை ஆணை­யாளர் வெளியிட்­டுள்ள அறிக்கை குறித்து...

சர்வதேச நீதிபதிகள் மூலமே போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்! – கலம் மக்ரே

எத்தகைய விசாரணைகளை விரும்புகின்றீர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கேட்பது நியாயமில்லை என்று தெரிவித்துள்ளார் சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுளள்ள அவர்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை வரவேற்கிறேன். ஏற்கனவே கூறப்பட்ட விடயங்கள் உறுதியாகியுள்ளன....

26 அலைபேசிகள் பறிமுதல்! : நீதிமன்றத்துக்குள் அலைபேசிகளுடன் நுழைய தடை

பருத்தித்துறை நீதிமன்ற நடவடிக்கைக்கு வந்திருந்தவர்கள் வைத்திருந்த 26 அலைபேசிகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதவான் மா.கணேசராசா, நீதிமன்றத்துக்குள் அலைபேசிகளை கொண்டு வரவேண்டாம் என எச்சரிக்கை செய்த பின்னர் அவற்றை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு உத்தரவிட்ட சம்பவம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது. நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்த போது, நீதிமன்றத்துக்கு வருகை தந்த...

வலி. வடக்கு, கிழக்கு பகுதியில்; மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர் உணவு

வலிகாமம் வடக்கு, வலி, கிழக்கு பகுதியில் அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன், வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலி, வடக்கு, வலி, கிழக்கு பகுதியில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு...

வட மாகாண சபையின் உறுப்பினர்களாக இருவர் சத்தியப் பிரமாணம்

வட மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்பட்ட இருவெற்றிடத்திற்கு தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு இரு புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இடம்பெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வட மாகாண சபையின் யாழ் மாவட்ட உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் இடத்திற்கு கணபதிப்பிள்ளை தர்மலிங்கமும் வன்னி மாவட்டத்தில்...

நாடாவை வெட்டிய 2 பெண்கள் கைது

நாடாவை வெட்டிய இரண்டு பெண்களை கைது செய்த பொலிஸார் அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சம்பவம் கடவத்தையில் இடம்பெற்றுள்ளது. கடவத்தை-கடுவெல அதிவேக நெடுஞ்சாலையை வைபவரீதியாக திறந்துவைப்பதற்கு முன்னர், அங்குவந்த இரண்டு பெண்களும் வீதிக்கு குறுக்காக கட்டப்பட்டிருந்த ரிப்பனை (நாடாவை) வெட்டியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் அடங்கிய பதாதையை கையில் ஏந்தியிருந்த இருவரும் 'மஹிந்தவுக்கு...

புரட்டாசி சனி விரதம் இன்று ஆரம்பம்

மன்மத வருடத்தின் புரட்டாசி சனி விரதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது. இம்முறை 5 சனிக்கிழமைகளுக்கு விரதம் நிகழவுள்ளது. சைவ சமயத்தவர்களுக்கு மிக முக்கியமான இவ்விரதத்தில் ஜாதகத்தில் சனி பகவான் கூடாத இடங்களில் தங்கியிருக்கப் பெற்றவர்கள் இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து, எள்ளெரித்து, நீலப்பட்டாடை சாத்தி, நீல நிறப் பூவால் அர்ச்சனை செய்து விமோசனம் பெற்றுக்கொள்ளலாம்.

ஐ.நா அறிக்கை தொடர்பில் இலங்கையின் செயற்பாடுகளுக்கு பான் கீ மூன் பாராட்டு

இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடனான மோதலின்போது இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்த விவகாரத்தை ஆராய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்கள், நிலைமைகளை முன்னேற்றுவதற்கு உதவும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித...

நாட்டுக்கு தேவை மஹிந்த இல்லாத அரசாங்கமே – ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்‌ஷ இல்லாத அரசாங்கம் ஒன்றுதான் நாட்டிற்குத் தேவையாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில்...

நாடு பயங்கர நிலையிலிருந்து விடுபட்டுள்ளது – பிரதமர் ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த, ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு பாரிய சிக்கலில் இருந்து விடுபட்டுள்ளதாக தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வௌியிடும்போது பிரதமர்...

தோனி அதிரடி: ஹீரோஸ் லெவன் வெற்றி

சேவை நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்கான டி-20 கிரிக்கெட் போட்டியில் மகேந்திர சிங் தோனி அதிரடியில் ஹீரோஸ் லெவன் அணி வெற்றி பெற்றது. பிரிட்டன் ராணுவச் சேவை அமைப்பு ஒன்று நோயாளிகள், காயமடைந்தவர்கள், படுகாயமடைந்த பிரிட்டன் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சேவையாற்றி வருகிறது. இந்த அமைப்புக்கு நிதி திரட்டும் வகையில் சர்வதேச பிரபல முன்னாள் மற்றும்...

வடக்கின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலை,பூநகரியில் அமைச்சர் ஐங்கரநேசன் திறந்துவைத்தார்

வடமாகாணத்தின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலையை பூநகரியில் வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த வியாழக்கிழமை (17.09.2015) திறந்துவைத்துள்ளார். பூநகரி பள்ளிக்குடாவில் கொடுவா மற்றும் பாலைமீன் வளர்ப்புத்திட்டம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரையை அண்மித்ததான கடலில் பண்ணைகள் அமைத்து வளர்க்கப்படும் இம்மீன்களுக்குப் புரதத் தீவனத்தை வழங்குவதில் கடற்றொழிலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடலில்...

தென்னிலங்கையில் தொடரும் கொடூரம்!! மற்றுமொரு சிறுமி பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை

காலி, அக்மீமன ஜனபாலா பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அக்மீமன குருந்துவத்த பகுதில் உள்ள ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெமுனி பூஜானி என்ற 8 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி வீட்டுக்கு அருகில் இருந்த...

இராணுவ முகாமில் தேநீர் அருந்தியதால் ஆயர் சுகயீனம்: முற்றிலும் பொய்யான செய்தி

மன்னார் மறைமாவட்ட ஆயர், மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்குச் சென்று தேநீர் அருந்திய நிலையிலே அவர் திடீர் உபாதைக்கு உள்ளாகியதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'மன்னார் மறைமாவட்ட ஆயரும் அருட்தந்தை...

‘ரத்த சிவப்பு’ நிலா : வரும் 28-ம் தேதி உலகம் அழிந்துவிடுமா?

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சிலர் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா விண்கற்கள் பூமி மீது விழும் என நம்புகின்றனர். ‘மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர் அழிவின்போது தேவைப்படும் என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர். உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய...

மானிப்பாயில் ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம்!

சாவகச்சேரி லயன்ஸ் கழகமும் மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலையும் இணைந்து நடாத்தும் இலவச மருத்துவ முகாம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (20.9.2015) காலை-8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலை மண்டபத்தில் சாவகச்சேரி லயன்ஸ் கழகத் தலைவர் பு.தினேஷ் குமார் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் கண்,...

வடக்கிற்கு வருகின்றதா மகாவலி??

வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் வடமாகாணம் ஆகியவற்றின் குடி நீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் ஒன்றினை அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்திற்கென உதவும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவியை வழங்க முன்வந்துள்ளது. இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு, 90 பில்லியன் ரூபா (அறுநூற்று எழுபத்து...
Loading posts...

All posts loaded

No more posts