- Thursday
- May 14th, 2026
பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அமைப்பு என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் தமது தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையிலான ஊடக சந்திப்பு (கொழும்பு) ஒன்றில் அவர்கள் நேற்று (19) தமது கோரிக்கையை முன்வைத்தனர். குறித்த அமைப்பின் இணை தலைவரான பி...
சமூக வலைத்தளங்களில் தனி நபரை இழிவுபடுத்தும் வகையிலான பதிவேற்றங்களுக்கு எதிராக புதிய சட்டமொன்றை அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் வழக்குகளின் காலதாமதத்தை குறைப்பதற்கு விசேட நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நீதி அமைச்சில் நேற்று (19) இடம்பெற்ற சட்டம் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுக்க ளின் பிரதிநிதிகளுடனான...
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய படைத் தளபதிகள் அண்மையில் பாரிய, மோசடிகள் குறித்த விசாரிக்கப்பட்டது குறித்து, மைத்திரிபால சிறிசேன அதிருப்தி தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட, முன்னாள் கடற்படைத் தளபதிகள் அட்மிரல் திசார சமரசிங்க, அட்மிரல் வசந்த கரன்னகொட, முன்னாள்...
இஸ்ரேலில் உள்ள பேஸ்புக் தலைமையகம்மீது யூத ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி சேதமாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்களால் பலஸ்தீனில் மேற்கொள்ளப்படும் அட்டூலியங்கள் குறித்த கருத்துக்கள் அடங்கிய பேஸ்புக் பக்கங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் குறித்த பக்கங்கள் பேஸ்புக் இணையதளத்திலிருந்து அகற்றப்படாததைக் கண்டித்து இஸ்ரேலில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போதே குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள்...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் வருடாந்த விருது வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது உள்ளிட்ட நான்கு விருதுகளை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தனதாக்கிக்கொண்டார். ஆண்டின் சிறந்த ஜனரஞ்சக வீரருக்கான விருதினை குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டார். ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த சகல துறை வீராங்கனையாக முன்னாள் அணித்...
தமிழ் மக்களின் விடிவுக்காக சுமார் இரண்டு தசாப்தங்களாக போராடி இன்று மீளாத்துயிலில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளராகவிருந்த தமிழினி அவர்களது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அஞ்சலி செலுத்தினர். பரந்தன் சிவபுரத்தில் உள்ள தமிழினி அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
வடக்கு மாகாண பொதுசேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படும் இறுதி திகதி 16/11/2015 இது தொடர்பிலான அறிவித்தலை முழுமையாக பார்வையிடுவதற்கு
கனடாவில் நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் போட்டியிட்ட ஆறு ஈழத் தமிழர்களில் ஹரி ஆனந்தசங்கரி மட்டும் வெற்றிபெற்றுள்ளார். ராதிகா சிற்சபைஈசன் உள்ளிட்ட ஏனைய ஐந்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். அதேவேளை, இம்முறை 189இற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று லிபரலி் கட்சி ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது. ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சட்டத்தரணி ஹரி...
யாழ். மாவட்டத்தில் 7 பிரதேச செயலகங்களில் 1318 குடும்பங்களைச் சேர்ந்த 4,737 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் பல வருடங்களாக தங்களது சொந்த இடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் வாழ்ந்து வருவதால் இவர்களுக்கான உலருணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீள் குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், ரி.மகேஸ்வரன், ரி.எம்.தசநாயக்கா ஆகியோரின் படுகொலைகள் சம்பந்தமான விபரங்களை தந்து உதவுமாறு சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் தங்களை வேண்டியுள்ளதாக அறிகின்றேன். இதே காலத்தில்தான் தங்கத்துரை, கிங்ஸ்லி ராஜநாயகம், லக்ஸ்மன் கதிர்காமர் மற்றும் ஆகியோரின் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. தயவு செய்து இவர்களின் விபரங்களையும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றிய செயலாளர் நாயகத்துக்கு...
இலங்கைத் தீவில் தமிழ் ஈழத் தாயக விடுதலைக்காக முழுமையான அர்ப்பணிப்போடு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயலாற்றி வந்த சகோதரி தமிழினி உயிர் நீத்தார் என்ற செய்தி என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. சிறந்த மதிநுட்பமும், அறிவாற்றலும், உயர்ந்த பண்புகளும் கொண்ட இத்தமிழ்மகள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் முழு நம்பிக்கைக்கு உரியவராக விடுதலைப் புலிகள்...
பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவால், தமிழக பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஆசிரியர்களாக வேலை பார்க்கும் 5 ஆயிரம் தமிழர்களுக்கு வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) உத்தரவின்படி, தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் வழிமுறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்தது....
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த குய்ன் என்ற பெண்ணுக்கு திங்கள் கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்காக ஒரு 4 ஸ்டார் ஹோட்டலில் அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் போன் பண்ணிய மணமகன், திருமணத்தை நிறுத்தும்படி கூறிவிட்டார். இதனால் மணப்பெண்ணும் அவரது தாயும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பல லட்சம் செலவு செய்து ஏற்பாடு செய்திருந்த...
தனது வயோதிபத் தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 42 வயதான பெண் எதிர்வரும் 2ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கண்டி - பலகோல்ல பகுதியிலுள்ள சொகுசு வீடொன்றில் வேறாக கட்டப்பட்டிருந்த கூட்டில் இருந்து வயோதிபர் ஒருவர் பலகோல்ல பொலிஸாரால் அண்மையில் மீட்கப்பட்டார். பின்னர் குறித்த வயோதிபர் அந்த வீட்டு உரிமையாளரின்...
சிவசேனா கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தால் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகிகளின் பேச்சு இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான பேச்சு டெல்லியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற இருந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷகாரியார்கான், தலைமை...
வெஸ்ட் இண்டீஸ்–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேனும், பகுதிநேர சுழற்பந்து வீச்சாளருமான சாமுவேல்ஸ் பந்து வீச்சு விதிமுறைக்கு மாறாக இருப்பதாக நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்...
நடிகர் சங்க பொதுக்குழு சென்னையில் கூடுகிறது. இதில், புதிய நிர்வாகிகள் பதவி ஏற்க உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்த்–கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வென்றுள்ளனர். நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத்தலைவர்களாகவும் தேர்வாகியுள்ளார்கள். பொருளாளராக கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 24 பேரை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம்...
வேதாளம் படத்தின் டப்பிங்கில் பிசியாக இருந்ததாலும், சங்கம் மீது கொண்ட அதிருப்தியாலும் அஜீத் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷாலின் பண்டவர் அணியும், சரத்குமார் தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று ஏராளமான...
விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினியின் பூதவுடலுக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அஞ்சலி செலுத்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த தமிழினியின் பூதவுடல் கிளிநொச்சி பரந்தனிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டுச் செல்லபட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவை...
Loading posts...
All posts loaded
No more posts
