காலியில் விழும் மர்மப் பொருளால் உலகம் அழியப் போகுதாமே…???

வேற்றுக்கிரகத்தில் இருந்து பறந்து வரும் மர்மப்பொருள் ஒன்று அடுத்தமாதம் பூமியின் மீது மோதப் போவதாகவும், அப்போது உலகம் அழியும் என்றும் புதிய வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவ்வப்போது அவை பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகின்றன. சில புவியின்...

கைதிலிருந்து தப்பவே கருணா, கூட்டணியுடன் சேர முயற்சிக்கின்றார் – தி.முகுந்தன்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவும் (வி.முரளிதரன்) கைது செய்யப்படாலாம் என்ற நிலை உருவாகியுள்ளமையடுத்து, கருணா தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தான் கைது செய்யப்படுவதை தவிர்க்கப் பார்க்கின்றார் என தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து அதிருப்தி காரணமாக விலகிய...
Ad Widget

விமலின் கடவுச்சீட்டு மீண்டும் வழங்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டு மீண்டும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவரது கடவுச்சீட்டு இன்று மீள வழங்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த வௌ்ளிக் கிழமை கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

பளையில் மாணவிகள் துஷ்பிரயோகம்

பாடசாலை மாணவர்கள் ஐவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பளை - உடுதுறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுத்துறை பகுதி பாடசாலை ஒன்றின் மாணவர்கள் ஐவர் பளை பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இவர் கடந்த 26ம் திகதி...

பாரிய கடல் கொந்தளிப்பு : மட்டக்களப்பு மீனவர்கள் அவதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாள பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். இம்மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி பிரதேசங்களான புதிய காத்ததன்குடி, ஏத்துக்கால், பாலமுனை, நாவலடி உட்பட பல இடங்களிலுள்ள கடலில் பாரியளவிலான கொந்தளிப்பு காணப்படுகின்றது. மேலும், இம்மாவட்டத்தில்...

நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்தது

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்தது. இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் மதியம் இந்துகுஷ் மலைப்பகுதியில் பூமிக்கு கீழே 190 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் கடுமையாக...

மும்பையில் பதற்றம்: சிவசேனா தலைவர் சுடபட்டார்

மும்பையை சேர்ந்த சிவசேனா தலைவர் அனில் சவுகான் நேற்று அடையாளம் தெரியாத சில மர்ம மனிதர்களால் சுடப்பட்டார். நேற்று மாலை 8.15 மணிக்கு ஜனதா நகர் காஷ்மீரா பகுதியில் உள்ள மிரா சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அனில் சவுகான் உடனடியாக பகவத் வேதாந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை...

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்றவரும், வாங்கிய மாணவனும் கைது!

கொக்குவில் பகுதியில் கஞ்சா மற்றும் பாவுல் ஆகிய போதைப்பொருட்களை மாணவன் ஒருவருக்கு விற்பனை செய்தவரையும் அவற்றை வாங்கி வைத்திருந்த மாணவனையும் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் யு.கே. தெரிவித்தார். நேற்றைய தினம் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இவர்கள் இருவரையும் தாம் கைது செய்ததாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,...

கருணாவையும் இணைத்து புதிய கூட்டணியை அமைக்கப் போகிறாராம் ஆனந்தசங்கரி!

கருணாவையும் வேறு பல கட்சிகளையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் புதிய கூட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆனந்தசங்கரி தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் ஊடகவியியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு கருத்து வெளியிட்ட அவர்- தற்போது எமது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் வேறு...

பிரதமரின் பிணை யோசனைக்கு த.தே.கூ எதிர்ப்பு

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 'தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்ததால் தான் அக்கைதிகள், தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினார்கள், விடுதலைக்கு மாறாக, பிணையில் விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ள...

கிளிநொச்சியில் ரயில் மோதியதில் முதியவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி 55ஆம் கட்டைப் பகுதியில் ரயில் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 அளவில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ரயிலுடன் மோதுண்டோ அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அந்தப் பகுதியிலுள்ள மூடியிருந்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே...

அரசின் தீர்மானம் எமக்கு ஏமாற்றம்! மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ளோம்!! – தமிழ் அரசியல் கைதிகள் அறிவிப்பு

தமது விடுதலை தொடர்பில் அரசால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். தாம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு வழங்கப்போவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தம்மை பொதுமன்னிப்பில் விடுவிக்குமாறு கோரி மீண்டும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போகின்றனர் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர். இலங்கையில்...

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அடையாள எண்; ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை

அடுத்த வருடம் ஜனவரி முதல் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டை முறையை இலத்திரனியல் அடையாள அட்டையாக மாற்றுவதற்குறிய செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும்...

சென்னை நீதிமன்றத்தில் டக்ளஸ் சாட்சியமளிக்கவுள்ளார்!

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தில் சாட்சியளிக்கவுள்ளார். இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து வீடியோ கோன்பரன்ஸிங் (video conferencing) மூலம் அவர் குறித்த சாட்சியத்தை அளிக்கவுள்ளார். 1987ம் ஆண்டு இந்தியாவின் சென்னை - சூளைமேடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, இந்த சம்பவம் தொடர்பில் டக்ளஸ் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக...

அஜித்தை பற்றி அவதூறான பேச்சு!! – கருணாஸின் விளக்கம்

நடிகரும், நடிகர் சங்க துணை தலைவருமான கருணாஸ், அஜித்தை பற்றி அவதூறாக பேசியதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதற்கு அஜித் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை கருணாஸ் மறுத்துள்ளார். இது குறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னுடைய டுவிட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது....

அஜித் மச்சினி விஜய்யின் தீவிர ரசிகையாம்!!

மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ஷாம்லி. இவர் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘வீரசிவாஜி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஷாம்லி, விஜய்யின் தீவிர ரசிகையாக நடிக்கிறாராம். தமிழ் சினிமாவில் சகபோட்டியாளர்களாக கருதப்படும் அஜித்-விஜய் பொது வாழ்வில்...

ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் – சச்சின்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே குரல்கொடுத்துள்ளனர். தெண்டுல்கர் கூறும் போது, ‘ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது நல்ல யோசனை. அதற்கு 20 ஓவர் கிரிக்கெட் பொருத்தமாக இருக்கும். கிரிக்கெட் பற்றி அதிகம்...

இறைச்சி உணவுப் பிரியர்களுக்கு எச்சரிக்கை: ‘புற்றுநோய் ஆபத்து’

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுவகைகளை உண்பது புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுகின்ற உலக சுகாதார நிறுவனம், சிவப்பு இறைச்சி வகைகளை உண்பது அந்த ஆபத்தை அதிகரிக்கும் என்று முடிவு செய்துள்ளது. தினமும் 50 கிராம் அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது குடல் புற்றுநோய் ஆபத்தை 18 வீதத்தால் அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.

யாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள்

வடமாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகிவிட்ட போதிலும், அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சுமார் ஒரு லட்சத்துக்குக் கிட்டிய எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து 24 மணி நேர அவகாசத்தில் விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்...

பியர் போத்தலால் மாணவர்களை தாக்கியவருக்கு விளக்கமறியல்

சுன்னாகம் நகரப் பகுதியில் மாணவர்கள் இருவரை, பியர் போத்தலால் வெட்டிய சந்தேகநபர்களில் பிரதான சந்தேகநபரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், உத்தரவிட்டார். கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு...
Loading posts...

All posts loaded

No more posts