Ad Widget

வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து காப்பாற்றுங்கள் – பல்கலை மாணவன் மன்றாட்டாம்

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (05.2.2024) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிஸார் கொன்றாலும் என்ற பயத்திலேயே அங்கிருந்து ஓடி வந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தேன் என பாதிக்கப்பட்ட...

கில்மிஷாவுக்கு பாடசாலையில் கௌரவிப்பு!!

கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் கௌரவமளிக்கப்பட்டுள்ளது. கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் நேற்று பாடசாலைகள் ஆரம்பமானது. இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள், அயல்பாடசாலை மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர். அண்மையில் இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியின்...
Ad Widget

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று(05.02.2024) முன்வைத்திருந்தார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளில் ஒன்றாக கஞ்சா வளர்ப்பு மற்றும் விலைமாதர் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று டயானா கமகே நீண்ட காலமாக குரல்...

இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியால் எயிட்ஸ் ஏற்படக்கூடிய அபாயம்!

தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை பயன்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களுக்கு எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி சிகிச்சையைப் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக கடந்த 2 ஆம் திகதி...

தொலைபேசிப் பாவனை : குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இதற்கு முன்னர் 450 ஆக இருந்த நிலையில் ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் அந்தவகையில் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகுவதால் ஏற்படும்...

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை!

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்குமாறு ஏ9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராடத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தடைகளை அமைத்திருந்ததுடன், அதனை மீறி செல்ல முற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து மாணவர்களை...

‘ஆவா’ குழுவின் தலைவர் கல்கிசையில் கைது!!

கல்கிசை பகுதியில் வைத்து கைதான யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பாரிய குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த ஆவா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்கிசை – யஷோராபுர பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் வைத்து, வலான மோசடி தடுப்புப் பிரிவினால் 25 வயதுடைய குறித்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர்...

இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள் தூக்கி வீசப்பட்ட துயரம்! பொலிஸாரின் கொடூரம் – சிறீதரன்

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்ற போது தானும் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டி உள்ளார். சாதாரணமாக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை வெளிப்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டதானது இலங்கை அரசின் கோரமுகத்தையும் அராஜகத்தையும் சர்வதேசத்தின் கண்முன்...

யாழ்.சிறைச்சாலையில் இருந்து வீடு திரும்பிய இளைஞன் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன் என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். கடந்த ஜனவரி 26 ஆம் திகதி குறித்த...

வலி.வடக்கில் மீண்டும் காணி சுவீகரிப்பு? : பிரதேச மக்கள் எதிர்ப்பு!

வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் மீண்டும் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் மேலும் 500 ஏக்கரைச் சுவீகரித்துத் தருமாறு விமானப் போக்குவரத்து அதிகார சபை...

TIN இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் இடைநிறுத்தம்!

TIN இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என அரசாங்கம் அறிவித்திருந்தது. உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா...

பொலிஸார் மீது சரமாரி தாக்குதல்! 2 பொலிஸார் வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த திங்கட்கிழமை (29) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழுவாக நின்றவர்களை சோதனையிட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முயன்றுள்ளனர். இதன்போதே பொலிஸார் மீது...

கந்தரோடை பகுதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!!

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்தார். இறந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் சந்தேநபரின் வீட்டுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கொலைக்கு வழிவகுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையை செய்த 54 வயதுடைய சந்தேக நபர் கைது...

அமைச்சர் டக்ளஸை சந்தித்தார் சாந்தனின் தாயார்!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காலணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள்...

இளைஞன் மீது சுன்னாகம் பொலிஸாரின் கொடூர தாக்குதல்!!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் ஒன்றினை அடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் அங்கு கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் அவசர...

வானிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று (செவ்வாய்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய...

மின் கட்டணத்தை செலுத்த அறிமுகமாகும் புதிய முறை!!

மின்சார கட்டணத்தை செலுத்துவதற்காக நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை அஞ்சல் திணைக்களம் ஊடாகவும், மின்சாரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும் வங்கி KIOSK இயந்திரங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாகவும் mCash மற்றும் CEB Care போன்ற செயலி ஊடாகவும் இந்த சேவைகளை மின்சாரசபை...

மயிலிட்டியில் மதுபோதையில் சிறுவர்களை படகில் ஏற்றிக்கொண்டு சாகசம் புரிந்த நபர்!

ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும் , தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார். அதன்போது, படகினுள் கடற்தண்ணீர்...

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை!!

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (29) விடுதலை செய்யப்பட்டனர். பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 9 மாதங்கள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் அவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகினை அரச உடமையாக்குமாறு...

யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று பதவியேற்பு!!

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தன் கடமைகளை பொறுப்பேற்றார். இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்துகொண்டனர். இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவி உயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading posts...

All posts loaded

No more posts