யாழ்ப்பாணத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் இன்று ஆரம்பம்!

தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்ப நிகழ்ச்சி நடைபெற்றதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் நாடு முழுவதும் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது, வேலை கண்காட்சிகள் மூலம் வேலை வாய்ப்புகளை வழங்குவது மற்றும் சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts