செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு நேற்று (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார்.
பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் ஒக்ரோபர் 01ம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்க்கான அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது.
ஒக்ரோபர் 01ம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமாயின் ஒக்ரோபர் 21ம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி V.S.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.