செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவு!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றையதினத்துடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான நேற்றைய தினம் 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், 10 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான நேற்றைய தினம் இறுதிநாள் அகழ்வு...

செம்மணி அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – நேற்றும் 10 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!!

செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன்கிழமை (19) இறுதி நாள் அகழ்வு பணிகள் நடைபெறவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (18) முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க...
Ad Widget

“நீதியின் ஓலம்” சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவடைந்த பேரணி!

''சர்வதேச விசாரணை தேவை'' என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (17) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. நேற்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணியாக ஆரம்பமான போராட்டம், வடக்கு – கிழக்கைச் சேர்ந்த மக்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து ஆஸ்பத்திரி...

செம்மணியில் இதுவரை 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 54 ஆவது நாளான நேற்று (17) 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 108 நாள்...

மக்களின் இன உணர்வுடனான பேராதரவுடன் தொடர்கிறது “நீதியின் ஓலம் 2” போராட்டம்!

யாழ். செம்மணியில் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனிதப் படுகொலைக்கு நீதி கோரியும், சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே இதற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்தும் முகமாகவும் தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் ”நீதியின் ஓலம் 2“ நீதி கோரும் தொடர் போராட்டத்தின் இறுதி நாளான இன்று...

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார் சிறிதரன்!!

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை இன்றைய தினம் (14) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டார். செம்மணி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றில் அனுமதி கோரி இருந்த நிலையில் அதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்கியதை அடுத்து இன்றைய தினம் சி. சிறிதரன் அகழ்வு பணிகளை பார்வையிட்டார்.

செம்மணியில் மேலும் 8 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி நேற்று இடம்பெற்றது. அதற்கமைய நேற்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 10 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் கடந்த ஏப்ரல்...

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (12) நடைபெற்றது. இதன்போது, 05 மனித எலும்புக்கூடு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் அகழ்வு...

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி புதைகுழியில் நேற்று (04) 43 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது, புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரையில் மொத்தம் 97...

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் இன்று (30) காலை அரியாலையில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது அதிகாலை புனித யூதா ததேயு தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து செம்மணி சிந்துபாத்தி மயானம் வரை அமைதி வழி பேரணியாக இடம்பெற்றது. இதன்...

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் சிறுவனின் என்புக்கூடு மீட்பு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான நேற்று (23) , 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில்...

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றையதினம் (22) நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான நேற்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில்...

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை!! சர்வதேச விசாரணை வேண்டும்!!

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழுவினர் இன்றைய தினம்...

செம்மணியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு!!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் இன்றைய தினம் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது. அதனை அடுத்து இன்றைய தினம் புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!!

செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று காலை 9 மணி அளவில் நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். இந்நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நியாயமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபடத் தயாராகி வருகிறது....

அருகருகே இரு சிறுவர்கள் உட்பட மேலும் 13 என்புக் கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று (21) செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடு உட்பட 13 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன் சில என்புக்கூடுகள் மண்டையோடுகள் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. சில என்புக்கூடுகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் மண்டையோடுகளும் காணப்படுவதனால், ஆய்வுகளின்...

நேற்றைய அகழ்விலும் இரு சிறுவர்களின் என்புக்கூடுகள் மீட்பு!!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (20) நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38 ஆவது நாளான நேற்று புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம்...

செம்மணியில் அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடு மீட்பு

செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (19) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன. நேற்றைய அகழ்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டன. இதன்மூலம், செம்மணி மனித புதைகுழி அகழ்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு...

செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் 420 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 420 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 34 வது நாளான நேற்று (16) 6 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்...

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று (15) ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 23 ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts