- Tuesday
- October 7th, 2025

இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பமாகியுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின....

செம்மணி புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியத்துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளில் மனித என்பு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சிதிலங்களாக காணப்படுவதனால் அடையாளப்படுத்துவதில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை செம்மணியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மேலும் 05 எலும்பு கூட்டு...

பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துப்பாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து வளர்த்திருக்கிறார்கள். தமிழின படுகொலைக்கு ஒரு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என தென்னிந்திய பிரபல இயக்குனரும் நடிகரும், இசையமைப்பாளருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மயானத்திலே அகழ்வாராய்ச்சி பணிகளின் போது இதுவரை...

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் இதுவரை 44 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 11 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் தொல்லியல் துறை...

யாழ்ப்பாணம் - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகர் சு.சத்தியராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பது அனைவரது ஆணித்தரமான கருத்தும்கூட ஏனெனில் அந்தப்...

செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் பணிகள் நேற்று (03) முன்னெடுக்கப்பட்டன. நேற்றைய அகழ்வுடன் மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 34 முழுமையான மனித எலும்புக்கூடுகளும், மேலதிகமாக 6 எலும்புக்கூடு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த அகழ்வு யாழ்ப்பாண...

செம்மணியில் ஒரு மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறதுஎன பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டோனா எம்.பி தெரிவித்துள்ளார். செம்மணியில் ஒரு புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது - மேலும் சர்வதேச சமூகம் இறுதியாக...

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின்போது நேற்று (02) மொத்தமாக 38 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 34 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன மேலும் 04 என்புத் தொகுதிகள் நேற்றைய தினம் மாத்திரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 04 என்பு தொகுதிகள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற...

செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்...

செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என...

பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். செம்மணி...

செம்மணி விவகாரம் தொடர்பில் ஆய்வுகளை நடத்தவும் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்குச் சென்றிருந்த எம்மை எதிர்த்தவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரச நிதி மூலோபய கூற்று தொடர்பான சபை...

சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்பாக நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்திபாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம்...

செம்மணி மனித புதைகுழியில் நேற்று (29) வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம்...

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது இதன்போது சிறு குழந்தையின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்...

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை கைக்குழந்தைகள், குழந்தைகள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ,...

அரியாலை - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் நாள் அகழ்வு பணி புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது. அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் புதன்கிழமை (4) வரை பத்துக்கு மேற்பட்ட மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஐந்து வரையான மண்டையோட்டு பாகங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு பொதி...

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம்...

செம்மணி படுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (07.09.2023) தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். செம்மணி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தி உள்ளிட்டவர்களை நினைவு கூர்ந்து ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா...