செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 09 மனித என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 3 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றுடன் மொத்தமாக 94 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்று 19ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 28 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆனந்தராசா வின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
நேற்று செம்மணி புதை குழியில் இருந்து மேலும் 09 மனித என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 03 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் வரையில் 85 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுடன் மொத்தமாக 94 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.