- Tuesday
- October 28th, 2025
வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி காலை 6.30 மணிக்கு பயணிக்கும் வவுனியா வீதிக்கு சொந்தமான இபோச பஸ்ஸின் அளவு சிறியதாக உள்ளதால் பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என வவுனியா மாநகரசபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு பொதுமக்களால் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுருந்தது. இதனை கருத்தில் கொண்ட துணை முதல்வர் வவுனியா வீதி முகாமையாளருடன்...
சபையில் மக்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு முற்பட்ட உறுப்பினர்களுக்கு பிரச்சினைகளை கதைப்பதற்கு நேரத்தை வழங்காமல் யாழ். முதல்வர் தட்டிக் கழித்து சென்றதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் தர்ஷானந்த் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபையில் குழுத் தெரிவிற்காக கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட கூட்டத்தின் தொடர்ச்சியான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணம்...
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கால...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது இதன்போது சிறு குழந்தையின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்...
ஏ-9 வீதியில் கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையிலான பகுதிகளைச் சேர்ந்த மக்களும், பாடசாலை மாணவர்களும் தங்களுக்கான போக்குவரத்துச் சேவை சீராகக் கிடைப்பதில்லையென கிளிநொச்சி மாவட்டச் செயலர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஆகியனவற்றுக்கு என்னால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வீதிப் போக்குவரத்து...
இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு இன்று (26) கருத்து கூறுகையில்- பொதுமக்களால்...
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று காலை (26) நடைபெற்றது. சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை...
நாட்டில் சிறுவர்களிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு நுகர்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் மோனிகா விஜேரத்ன குறிப்பிட்டார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட...
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களால் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் 06 அம்ச கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட செப்பு தகட்டினை கையளித்துள்ளனர். செம்மணி படுகொலைக்கு நீதி கோரி , யாழ். வளைவுக்கு அண்மையில் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு , போராட்டம்...
காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளூனரிடம் கேட்டறிந்து கொண்ட ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் கரிசனையை வெளிப்படுத்தியதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர்...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தலைமையிலான குழுவினரையும் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில்...
செம்மணியில் புதையுண்டுள்ள உறவுகளுக்கு, சர்வதேச நீதி கோரி செம்மணி வளைவுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி முதல் 3 நாட்கள் ”அணையா தீபம்’ எனப்படும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவான மக்கள் குறித்த பகுதியில் ஒன்று கூடி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்து...
நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். "மக்களுக்கு சொல்ல விரும்புவது, எந்த பிரச்சனையும் இல்லாமல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை நாங்கள் முன்பதிவுகள் செய்துள்ளோம். அந்த முன்பதிவுகள் உறுதி...
வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி நேற்றைய தினம் (24) நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். நான்காவது நாளான நேற்றைய தினம் காணிக்கான தமது உறுதிகளை எடுத்து வந்து அதனை காண்பித்து போராட்டத்தினை முன்னெடுத்தனர். காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமை மயிலிட்டி சந்தியில்...
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தானமும் பரிசளிப்பு விழாவும் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய சந்தர்ப்பத்திலே அவர் அங்கு உரையாற்றினார். இன்று தேசியம், தமிழ்த் தேசியம் மற்றும் சுதேசியம் ஆகிய சொற்களெல்லாம் அரசியல்வாதிகளிடத்தே அடிக்கடி நடமாடினாலும் மகாஜனாக் கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பா பிள்ளை அவர்கள் இந்த மண்ணிலே...
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது என்பதால், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள...
யாழ் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது. குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் தலைமையில் மதத் தலைவர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச சபையின் செயலர்கள், மற்றும் யாழ் மாவட்டத்தின்...
மனிதப் புதைகுழிகள் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும் இதுவரை கிடையாத நிலையில் குறித்த விடயத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டு செல்வதுடன் அதனூடாக உறவுகளுக்கு நீதி கிடைக்க வலியுதுத்தும் வகையில் இந்த 'அணையா தீபம்' போராட்டம் நேற்று (23) செம்மணியில் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் தலைமையில்...
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் நேற்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும் பெண்நோய்யியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணரும் ,வைத்தியர்களும், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நெதர்லாந்து அரசின் 5320மில்லியன்...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 10.00 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணியில் உள்ள மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வந்தது. இவை தொடர்பில் உரிய விசாரணைகளை...
Loading posts...
All posts loaded
No more posts
