O/L பரீட்சை விண்ணப்பம் குறித்த அறிவிப்பு!

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, மேற்கூறிய திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பரீட்சைக்கான ஒன்லைன் விண்ணப்ப முறை முடக்கப்படும்.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி எந்த சூழ்நிலையிலும் நீட்டிக்கப்படாது.

எனவே, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை இறுதி திகதிக்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும் விசாரணைகளுக்கு, விண்ணப்பதாரர்கள் பின்வரும் தொலைபேசி எண்கள் மூலம் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளலாம்:

தொலைபேசி: 0112-784208, 0112-784537, அல்லது 0112-785922.

தொலைநகர்; 0112-784422

மின்னஞ்சல்; gceolexansl@gmail.com

Related Posts