தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் தான் எதிர்ப்பு!!

வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தோர்கடிக்க தமிழ் மக்கள் முன் வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தோர்கடிக்க தமிழ் மக்கள் முன் வர வேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியப் பேரவையுடன் ஒப்பந்தத்தை ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்ணி செய்து கொண்டுள்ளது. அந்த வகையில் ஏக்கியராட்சியத்தை எதிர்க்க வேண்டும், 13ஐ பேசி மக்களை திசை திருப்ப வேண்டாம். ஏக்கியராட்சித்துக்கு எதிராக வேலை செய்ய வேண்டும்.

சுவிஸ் ஆட்சி முறை தொடர்பான கல்விப் பட்டறை இடம்பெற்றது. இதில் இலங்கையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இங்கு சமஷ்டி தொடர்பான கல்விக் கருத்தரங்கு இடம்பெற்றது.

புலம்பெயர் மக்கள் அமைப்புக்கள் தான் கலந்து கொண்டது. ஐ.நா ஆசிய பசுபிக் பொறுப்பதகாரி இலங்கையின் மனித உரிமை சார்ந்த பொறுப்பதிகாரி மற்றும் சாட்சியங்களை சேகரிக்கும் அதிகாரிகளையும் சந்திக்க முடிந்தது.

இதில் தமிழ் மக்களின் இனப்பிரசினை தொடர்பில் அரசு தமக்குத் தான் மக்கள் வழங்கிய இருப்பதாக அரசு தெரிவித்துள்ளதாக கருத்துக்கள் வெளிவந்தது. தமிழ் மக்களின் மாற்றம் என்ற வகையில் அதை வலியுறுத்தி வந்துள்ளார்கள்.

அது உண்மையல்ல பொய், தேசிய மக்கள் சக்திக்கு அவ்வாறான, யாழ்ப்பாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தே அந்த கருத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

EPDP ஐங்கயன் 1 இலட்சம் கிடைத்தது, NPP 80 ஆயிரம் தான் கிடைத்தது. தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு அதிகம்.

ஏக்கிய இராட்சிய அரசியல் அமைப்பை பாராளுமன்றிற்கு கொண்டு வந்து நிறைவேற்ற இருப்பதாக தெரிவித்தனர். ஏக்கிய இராட்சிய திருத்தம் செய்து கொண்டு வரவுள்ளதாக மக்களுக்கும் சுவிஸ் அரசுக்கும் கூறியுள்ளனர்.

இதனை நாம் ஏற்கனவே இவ்வாறு நடக்கும் என்று கூறினோம். ஹரிணி பாராளுமன்றிற்கு வெளியே புதிய அரசியலமைப்பை உருவாக்கலாம் என்ற நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அரசுக்கு 3/2 பெரும்பான்மையுடன் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றும். சர்வஜன வாக்கெடுப்புக்கு விட்டு நிறைவேற்றப் பார்ப்பார்கள். இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இது தொடர்பில் பேச முனைந்து வருகிறோம். சுமந்திரன் இந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டார்.

பாராளுமன்ற குழுவைத் தாண்டி கட்சியுடன் பேச நாம் முனைந்தோம். தமிழரசு சி.வி.கே சிவஞானத்தை சந்தித்த போது அவர் அறிவித்தார், ஏக்கியராட்சியத்தை நாம் நிராகரித்துள்ளோம் என்றும் அறிவித்தார்.

இதன் பின்னர் சுமந்திரன் அவசர அவசரமாக செயலாளராக வந்தார். இந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டார்.

தமிழ்த் தேசிய தரப்பு ஒன்று கூடி பெரும்பான்மையைக் காட்டி ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க முடியும். சுவிஸ் அரசின் சந்திப்பின் போது கலந்து கொண்ட சத்தியலிங்கத்திற்கும் தெரியும்.

தமிழரசுக் கட்சி கடிதம் ஒன்றை எழுதுகிறார்கள் தாம் தனியாக பேச்சு நடத்துவதற்கு காலம் தருமாறு கோரியிருந்தனர். சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்கும் அரசின் நிகழ்சி நிரலுக்கும் வேறுபாடு கிடையாது. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் தான் எதிர்ப்பு.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 13 ஆவது திருத்தத்தை மீள மையப்படுத்தி முன்னுக்கு நின்று செயற்பட்டவர் சுரேஷ். அவருக்கும் தெரியும் ஏக்கியராட்சியத்தை நிறைவேற்றப்போகிறது என்று தெரியும். இது கற்பனை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Related Posts