- Saturday
- December 20th, 2025
நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வட்ஸ் அப் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் அனைவரும் 071- 8598888 என்ற வட்ஸ்அப்...
நாட்டில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக வெலிசறை தேசிய மார்பு வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் 2,000 - 3,000 நுரையீரல் நோயாளிகள் பதிவாவதாக தெரிவித்தனர். நுரையீரல் புற்றுநோய் ஆண்களிடையே இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது என சுவாச நோய் வைத்திய...
முத்ததையன்கட்டு இளைஞன் எதிர்மன்னசிங்கம் கவிராஜின் மரணத்திற்கு இராணுவத்தினர் காரணம் இல்லை எனவும் அவர் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாகவும் ஒட்டுசுட்டான் பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் ”ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் சிவநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப் படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்குச் சில நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த முகாமிலிருந்து அகற்றப்பட்ட...
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டு பகுதியில் உள்ள 13ஆவது படையணி முகாமில் எதிர்மனசிங்கம் கபில்ராஜ் (32) எனும் தமிழ் இளைஞர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கைத் தமிழரசு கட்சி...
ஐந்து தமிழ் இளைஞர்கள், 8 ஆம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பிச் சென்றவர்களில் ஒருவரான, கபில்ராஜ், 9 ஆம் திகதி முல்லை முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்க பட்டுள்ளார். தப்பிச் சென்ற ஏனைய நால்வர், தம்மை...
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளது. இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞன் மரணித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை 2025.11.10 ஆம் திகதி முதல் 2025.12.05...
யாழ்ப்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் , அந்நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அதேவேளை கத்திக்குத்து தாக்குதலை...
செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை இந்நிலையில்,...
செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர்கள் நேரில் பார்வையிட்டனர் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழு தயார் என்று தெரிவித்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழுவின் கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோர் யாழ்ப்பாண...
வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார். வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (03) வவுனியா...
செம்மணி மனித புதைகுழிகளின் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட , ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொது மக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காட்சிப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 05 ஆம் திகதி 13.30 மணியிலிருந்து 17.00 மணி வரை காட்சிப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. பொது மக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது...
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக வடமாகாண அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஞாயிற்றுக்கிழமை (03) முற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ். ஸ்ரீ நாகவிகாரை மற்றும் யாழ். நூலகம் ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்தார். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு காலை சென்ற பிரதமர், அங்கு...
கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு...
செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்றைய தினம் புதன்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து...
எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...
ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தை தொடர்ந்து ஜப்பானை சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளது. இந்த சுனாமி பேரலை ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ தீவில் சுமார் 30 சென்டிமீட்டர் (ஒரு அடி) உயரத்திற்கு மேலெழுந்துள்ளது. அங்கு அடுத்தடுத்த அலைகள் மிக அதிகமாக தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின்...
நாவற்குழி பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று...
இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில், வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியே 10 கி.மீ ஆழத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை...
Loading posts...
All posts loaded
No more posts
