மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முன்மொழிவு!

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி, பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம்.

வாய்மொழி கருத்துகளுக்காக 9 மாகாணங்களை உள்ளடக்கிய 9 பொது ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.

வாய்மொழி பரிந்துரைகளுக்கான அமர்வுகள் செப்டம்பர் 18 அன்று தொடங்கும்.

பொது ஆலோசனை குறித்த எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை 2025 ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு முன் பின்வரும் வழிகள் மூலம் சமர்ப்பிக்கலாம்.

மின்னஞ்சல் – info@pucsl.gov.lk
வாட்ஸ்அப் – 076 427 1030
ஃபேஸ்புக் – www.facebook.com/pucsl

Related Posts