சங்கு, சைக்கிள் கூட்டணி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஆதரவு கோரின – டக்ளஸ் தேவானந்தா

சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை...

அரியாலை – செம்மணி இந்து மயானத்தில் தொடரும் அகழ்வுப் பணிகள்

அரியாலை - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் நாள் அகழ்வு பணி புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது. அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் புதன்கிழமை (4) வரை பத்துக்கு மேற்பட்ட மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஐந்து வரையான மண்டையோட்டு பாகங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு பொதி...
Ad Widget

குருந்தூர் மலை விவகாரம்: போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் “மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண்,...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் இரத்து செய்யப்படுமா?

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இன்று (04) பாராளுமன்றத்தில் இந்தக் கருத்தினை வௌியிட்டார். "புலமைப்பரிசிலை தற்போது இரத்து செய்ய திட்டமில்லை. புதிய சீர்திருத்தங்களின் தாக்கத்துடன் செய்யவே எதிர்பார்க்கிறோம்....

வடக்கிற்கு ஜனாதிபதி நிதியம்!!

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது. அதன் ஒரு அங்கமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,...

கிளிநொச்சி ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் தனது சுயாதீனத்துவத்தை இழக்காது ; கல்வி அமைச்சர் ஹரிணி

கிளிநொச்சி ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமானது கொழும்பில் உள்ள ஜெர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு சமாந்தரமான உயர் அங்கீகாரத்தை கொண்ட நிறுவனமாகும். இதனால் கிளிநொச்சியிலுள்ள குறித்த நிறுவனம் தனது சுயாதீன தன்மையை இழக்காது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கிளிநொச்சியில் இயங்கிவரும் இலங்கை ஜேர்மன் தொழில்பயிற்சி நிறுவனம் தொடர்பில் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை...

சுன்னாகம் பொலிஸாரினால் 20 பேர் கைது!!

சுன்னாகம் பொலிசாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் , , பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள், போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தவர்கள் என 20 பேர் கைது...

செம்மணி மனிதப் புதைகுழி ; இதுவரையில் 07 மண்டையோடுகள் மீட்பு!!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம்...

கொவிட் – காலியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு!!

கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது என மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மே 17ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து நிமோனியா பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உடனடியாக குழந்தையை தீவிரகிசிச்சை பிரிவிற்கு மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்காக முதல்வர் பிரதி முதல்வர் தெரிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை!!

வடக்கு மாகாணம் உள்ளூராட்சி திணைக்களத்தின் கீழ் உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு வெள்ளிக்கிழமை (13) காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு அறிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகிய தேவந்தினி பாபு 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர்...

யாழ் கொழும்பு பயணிகள் விமான சேவை!!

டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பித்துள்ளது. உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக இலங்கை சிவில் விமான...

தமிழ் தேசிய பேரவை – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையே கொள்கை ரீதியான இணக்க ஒப்பந்தம் கைச்சாத்து!!

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று திங்கட்கிழமை (02) கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக...

யாழ் பொது நூலகம் எரிந்து 44 ஆண்டுகள் நிறைவு

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, நேற்று பிற்பகல் தமிழ்த் தேசிய பேரவையினரால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. பொது நூலகத்தின் முன்பாக இடம்பெற்ற குறித்த நினைவேந்தலில், பொதுச் சுடரினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்றிவைத்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,...

கொரோனா புதிய வகை திரிபு தொற்றுக்கு இலக்கான இருவர் அடையாளம் காணப்பட்டனர்!!

கொரோனா புதிய வகை திரிபுகளால் பாதிக்கப்பட்ட இருவரை அடையாளம் கண்டுள்ளதாக இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவனம் (MRI) தெரிவித்துள்ளது. இவர்களிருவரும் புதிய ஒமிக்ரான் துணை திரிபுகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. ஆசியாவின் பல பகுதிகளில் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட இந்த துணை வகை கொவிட் திரிபு, தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட...

யாழ். போதனா அருகே மாற்றுத்திறனாளியிடம் பண மோசடி ; சகோதரர்கள் இருவருக்கு எதிராக முறைப்பாடு

யாழ். போதனா வைத்தியசாலை அருகே வாகன பாதுகாப்பு நிலையம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் 34 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்ற இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, பளையை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம்...

யாழில் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுக் கலந்தாலோசனை!!

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30 மற்றும் 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கட்டணக் கணிக்கைக் கையேட்டின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது கட்டண திருத்தத்துக்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL), இலங்கை மின்சார சபை (CEB), கடந்த 16 ஆம்...

யாழில் ஒருவீட்டுக்கு இரண்டு உறுதிகள் – இளங்குமரன் எம்.பி

யாழ்ப்பாணத்தில் உறுதிப்பத்திரங்கள் இல்லாத காணிகள் இருப்பதை போன்று ஒரு வீட்டுக்கு இரண்டு உறுதிப்பத்திரங்களை கொண்ட காணிகளும் உள்ளன. ஒருசில சட்டத்தரணிகள் நுட்பமான முறையில் அவ்வாறாக உறுதிப்பத்திரங்களை தயாரித்துள்ளனர் என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமாரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின்...

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டிற்கு தீவிர நடவடிக்கைகள்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடரும் மழைக் காலம் காரணமாக டெங்கு நோயின் பரவல் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நோய் பரவலை தடுக்கும் நோக்குடன் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மே 22ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு, யாழ் மாவட்ட செயலகத்தில் முக்கிய துறை சார்ந்த கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த...

நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம் ; பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை

யாழ்ப்பாணத்தில், நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த...

யாழில் கடத்தப்பட்ட யுவதி ; தெல்லிப்பழை பொலிஸார் தீவிர தேடுதலில்!

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை (22) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து...
Loading posts...

All posts loaded

No more posts