வெப்பமான காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று புதன்கிழமை (03) வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில்,வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் அவதானத்துடன் செயற்பாடுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இப்பகுதிகளின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள் இலகுவான ஆடைகளை அணியுமாறும், நிழலான பகுதிகளில் ஓய்வெடுத்தல் மற்றும் போதியளவு நீரை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts