- Thursday
- June 25th, 2026
காங்கேசன் துறை ஊரணி கடற் பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற் பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எரிபொருளுக்கு QR நடைமுறையினை பின்பற்ற வலு சக்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அனுமதி கோரியுள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். வட மாகாண அதிபர் சங்கத்தினர் புதன்கிழமை மாவட்ட செயலரை சந்தித்து, எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் நீண்ட வரிசைகள் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவற்றால் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் , எரிபொருள் பெறுவதற்கு...
வலி வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற் தொழில் சங்கத்துக்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். மறுநாள் வீடு திரும்பாத காரணத்தினால் சக...
யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பெட்ரோலை பெற்று சென்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெட்ரோல் பெற்று கொள்ளும் இந்நிலைமை...
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வழமைபோல் செவ்வாய் கிழமை தவிர்ந்த ஏனைய...
தமிழ் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக சிதறிக்கிடக்கும் தமிழ் கட்சிகளின் பலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலமான முறையில் முன்னிறுத்துவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின்...
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வரும் அவர் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் துணைவேந்தர் ஆக நியமனம் பெறுகிறார். அண்மையில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளை பெற்று முதன்மை நிலையை பேராசிரியர் வேல்நம்பி பெற்றிருந்தார். அத்துடன் துணைவேந்தர் தேர்தலில் கடந்த மூன்று தடவைகள் முதல்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்வதற்கு யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு: கடந்த 07 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தின் 06 ஆம் இலக்க வாயிலுக்கு முன்பாக நிறுத்தி...
மண்டைதீவு பகுதியில் நடைபெற்று வந்த சர்வதேச கிரிக்கெட் மைதான மற்றும் விளையாட்டு வளாகம் நிர்மாணப் பணிகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. 48 ஏக்கர் பகுதியை உள்ளடக்கிய இந்த திட்டம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வரவில்லை என்றாலும், சுற்றுச்சூழல் அனுமதியின்றி நிலத்தை சமப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ லங்கா...
மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இழுத்தடிப்பு செய்து வருவதனால் , இம்முறையும் திருவிழா செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் அப்பகுதிகள்...
சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை தாங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அதனைத் தரையிறக்கும் பணிகள் நேற்றே ஆரம்பிக்கப்பட்டன. மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் எதிர்வரும் 25 மற்றும் 28ஆம் திகதிகளில்...
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) குறித்த போராட்டம் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை தாம் வழி மறித்ததாகவும், அதன்போது வாகனத்தை நிறுத்தாது சென்றமையால், வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி...
மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளது.சுகாதாரத்துக்கு பவானந்தாராஜா, கல்விக்கு ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரத்துக்கு ரஜீவன், உள்ளுராட்சிமன்றங்களுக்கு இளங்குமரன், விவசாயம் மற்றும் காணிக்கு திலகநாதன் என்ற அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண நிழல் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இது முதுகெலும்பில்லாத கேவலமானதொரு செயற்பாடு.மாகாண சபைத்...
எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இருக்காது எனவும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. கடந்த 17 மற்றும் 18ஆம் திகதிகளில் 284,000 வீட்டு பாவணைக்கான எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை (19) முதல் சனிக்கிழமை வரை...
நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19)அதிகாலை குறித்த 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் முற்பகல் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினரால் கையளிக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் குறித்த நபர்களையும் படகுகளையும் முன்னிலைப்படுத்தவுள்ளதாக...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. பட்டமளிப்பு விழா நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு அண்மையில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா...
மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் புதன்கிழமை (18) மாவட்ட செயலக அரசாங்க அதிபர்...
வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியாச் சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர்,...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக...
வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார். அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே, இத்தீர்மானம் எட்டப்பட்டது. தற்போது முகாமைத்துவ...
Loading posts...
All posts loaded
No more posts
