மழையினால் வெங்காயச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பாதிப்பு!

வெங்காயச் செய்கையில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழை காரணமாக நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். பெருமளவான வெங்காயச் செய்கையானது அழிவடைந்துள்ளது. இது தொடர்பில் வெங்காயச் செய்கையாளர் ஒருவர் கூறுகையில், 'நான் எனது தோட்டத்தில் 250 கன்றுகளை நாட்டியிருந்தேன். இன்னும் 20 நாட்களுக்கு பின்னர் மழை பெய்திருந்தால் முழுமையான அறுவடையைப் பெற்றிருப்போம். அதனால் எனக்கு 1½...

இரவல் நகைகளை விற்று, மதுபானம் வாங்கிய பெண் கைது

நம்பிக்கை மோசடி செய்து நகைகளை விற்ற கூவில் கீரிமலை பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய பெண்ணை, நேற்று புதன்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். திருமண வீடு, ஏனைய வைபவங்களுக்கு அணிந்து விட்டுத் தருவதாகக் கூறி, அயல் வீடுகள் இரண்டில் கடந்த 7ஆம் திகதி நகைகளை குறித்த பெண் வாங்கியுள்ளார். வாங்கிய...
Ad Widget

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தனுஷூக்கு எதிராக போராட்டம்?

விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தியதாக கூறி நடிகர் தனுஷூக்கு எதிராக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரபல திரைப்பட நடிகர் தனுஷ், தனியார் டிடிஎச் நிறுவன விளம்பரத்தில் கேபிள்...

யாழில் 16.4% நீரிழிவு நோய்

யாழ்.மாவட்டத்திலுள்ளவர்களில் 16.4 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோயுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறுநீரக வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார். நீரிழிவு தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இலங்கையில் வடக்கு, கிழக்கு...

12 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிரசவித்த தாய் உயிரிழப்பு

இளவாலை சென்.ஜேம்ஸ் பகுதியில், 12 நாட்களுக்கு முன்னர், குழந்தையொன்றை பிரசவித்த தாய், நெஞ்சுவலி காரணமாக நேற்று புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஜேசப் மரியகஸ்டா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதிகள் உண்ணாவிரதம்; சம்பந்தன் பறந்துவிட்டார்

அரசியல் கைதிகள், தங்கள் விடுதலையை வலியுறுத்தி இங்கு உண்ணாவிரதம் இருக்க, அவர்களை 7ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக நேரில் சென்று உறுதிமொழி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இந்தியா, டெல்லியில் இருப்பது சரியில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை (11)...

கன்னத்தில் கடித்து இளைஞர்கள் ரகளை

கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு அண்மையில் வீதியில் நடந்து சென்றவரை வழிமறித்த இருவர், அவரிடம் தீப்பெட்டி கேட்டபின்னர், அவரை கத்தியால் கீறி, கன்னத்தில் கடித்த சம்பவம் தீபாவளி தினத்தன்று நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ஐயாத்துரை ராஜசேகரம் (43) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 17 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இருவரே இவ்வாறு செய்துள்ளனர். இந்த...

2வது போட்டியிலும் சச்சின் அணி தோல்வி: தொடரை வென்றது வார்னே டீம்

கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடரின் 2வது போட்டியிலும் வார்னே வாரியர்ஸ் அணியிடம் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி தோல்வியடைந்ததால் இந்த தொடரை இழந்தது. ஓய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும், 3 டி20 போட்டிகள் கொண்ட, கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடர் அமெரிக்காவில் 3 நகரங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான சச்சின் பிளாஸ்டர்ஸ்...

யாழில் ஐக்கிய நாடுகளின் விசேட குழுவினர்!- காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகளின் விசேட குழுவினர் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணம் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் உறவினர்களுடன் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் யாழில் காணாமல் போனவர்களினதும், கடத்தப்பட்டவர்களினதும் உறவினர்களை குறித்த குழுவினர் சந்தித்து முறைப்பாடுகளைப் பெற்று...

பிணை வழங்கிய பின்னும் தொடர்கிறது உண்ணாவிரதம் ; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு நேற்று கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ள நிலையிலும் பொது மன்னிப்பு கோரிய அரசியல் கைதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 5ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளில் 7 பேர் மயக்கமுற்ற நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

பாடசாலை மாணவிகளுக்கு பேரூந்து நடத்துனர் செய்த கொடூரம்!!

பாடசாலை மாணவிகள் ஏழு பேர் நடத்துனரால் பேரூந்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். யாழிலிருந்து -திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வவுனியா பஸ் தரிப்பிடத்தில் தரித்து நின்றபோது பஸ்ஸின் உள்ளே ஏறிய மாணவிகள் 7 பேரே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்....

செஞ்சோலை சிறுவர்களின் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி தினமான 10-11-2015 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுவர்கள் புத்தாடை அணிந்து மிக மகிழ்வாக தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாடினர். மகிழ்வான தீபாவளியன்று அருள்மிகு முல்லைத்தீவு வற்றாப்பளை அம்பாள் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்த பின்னர் சகோதர இல்லமான முல்லைத்தீவு பாரதி சிறுவர் இல்லத்தை சென்றடைந்தனர். அங்கு தமது மதிய உணவின் பின்னர் அங்கு...

கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் சிதறினால் அதன் பாகங்களை தொட வேண்டாம் !!

வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர விஞ்ஞானியுமான சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்:- இலங்கையின் தென்பகுதியிலுள்ள தேவேந்திரமுனையிலிருந்து...

தமிழ் அர­சியல் கைதி­களின் விட­யத்­திற்கு விரைவில் தீர்வு – டி.எம்.சுவா­மி­நாதன்

தமிழ் அர­சி யல் கைதி­களின் விட­யத்­திற்கு விரைவில் நிரந்­தரத் தீர்வு கிடைக்­கு­மென தெரி­வித்­துள்ள அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் நாட்­டி­லுள்ள சிறைச்­சா­லை­களில் பல்­வேறு சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். சிறைச்சாலைகள் விவகார அமைச்சராக நேற்று பத­வி­யேற்ற பின்னர் கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார். நாட்­டி­லுள்ள சிறைச்­சா­லை­களில் பல்­வேறு குறை­பா­டுகள் காணப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. அவை தொடர்பில் விசேட கவ­ன­மெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன....

சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று

கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி நிகழ்வுகள் இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளன. இன்றைய தினம் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக்...

வடக்கு – கிழக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்க : ஜனாதிபதி பணிப்பு

யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களை மீளக் குடியேற்றுவது தொடர்பில் எழுந்துள்ள செயன்முறை நெருக்கடிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அவற்றுக்கான தீர்வுகளையும், யோசனைகளையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...

அவன்கார்ட் நிறுவனத்துக்கு இலங்கை அரசு தடை விதித்தது!

இலங்கையில் அவன்கார்ட் நிறுவனத்தை உடனடியாக தடை செய்து அதனுடன் தொடர்புடைய அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் கடற்படையினரிடம் கையளிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார். அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் முடிவு ஒன்றை எட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த விசேட கலந்துரையடலையடுத்து இந்த தீர்மானம்...

பாடசாலை ஆசிரியர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்த தடை

ஊவா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தில் கைத்தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடை செய்யப்படவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவிக்கின்றார். அத்துடன் மாணவர்கள் சிலரும் பாடசாலைக்கு கைத்தொலைபேசிகளை எடுத்து வருவதாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் நடவடிக்ககை எடுக்க பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 10,000 ரூபாவாக அதிகரிக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது....
Loading posts...

All posts loaded

No more posts