- Friday
- May 15th, 2026
பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வௌிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் இலங்கையர்கள் எவரும் சிக்கி இருப்பார்களா என்பது தொடர்பில் அந்த நாட்டு உரிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்வத்தில் 153க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
ஜப்பானின் தென் மேற்கு கடற்பகுதிக்கு அப்பால் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக, தெற்கு ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, க்யூஷூ தீவிலுள்ள கஹோஷிமா கடற்கரை பகுதியை ஒரு மீட்டர் உயரமுள்ள அலைகள் தாக்கக் கூடும் என ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்தீவுக்கு அருகாமையில் கடற்கரைக்கு அப்பாலலுள்ள வேறு சில தீவுகளையும்...
சச்சின் டெண்டுல்கர் யார் என்று தெரியாத பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் டெண்டுல்கரின் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் சமீபத்தில் டெண்டுல்கர் பயணித்திருக்கிறார். அப்போது அவருக்கு விமானத்தில் வழங்கப்பட்ட சேவை குறித்து அதிருப்தி அடைந்த அவர், அந்த நிறுவனத்தின் விமானப் பணியாளர்களின் "ஏனோ,தானோ" அணுகுமுறை பற்றி தனது ட்விட்டர் கணக்கில் புகார் ஒன்றைத்...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நான்கு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் 7 இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 158 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் கிழக்குப்பகுதியில் பட்டாச்சான் என்ற சினிமா...
நடிகை சுருதிஹாசனுக்கு பெரிய படங்கள் அமைகின்றன. முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தீவிரமாக நடிக்கிறார். அஜித் ஜோடியாக நடித்த ‘வேதாளம்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். கவர்ச்சியில் தாராளமாக நடிப்பதாக சுருதிஹாசன் மீது விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது;-...
‘புலி’ படத்திற்குப் பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்து வருகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மகேந்திரன் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் விஜய் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘காக்கி’...
சமீபத்தில் நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 13. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசன்னா, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 29ம் தேதி உயிரிழந்தார். இதனால் விவேக்கும் அவரது குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்தது. மகன் பிரிவினால் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த விவேக், தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார். இது குறித்து...
யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் நடவடிக்கையினால் யாழ். மாவட்டம் முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை (13) வடக்கில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தாலுக்கு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 'அரசியல் கைதிகளின் விடுதலையானது அவசியமானது. அவர்களின் விடுதலையை வலியுறுத்திய வகையில் மேற்கொள்ளப்படும் இந்தக் ஹர்த்தாலுக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம். அடிப்படைத் தேவைகள் தவிர்ந்து, மற்றவர்கள் அனைவரும்...
யாழ் மாவட்டத்தை உள்ளடக்கிய வடமாகாணத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சிவன்சுதன் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் உள்ளவர்களே அதிகளவில் இந் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (11) நண்பகல் நடைபெற்ற...
முன்னாள் விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவு தலைவர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி சம்பந்தமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடக் கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது....
விண்ணில் இருந்து ´WT1190F´ என்று பெயரிடப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று இலங்கை நேரப்படி 11.48 இற்க்கு வீழ்வதை அடுத்து, இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருள், கரைக்கு அண்மித்த கடற்பகுதியிலேயே வீழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. காலிக்கும் ஹம்பாந்தோட்டைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியிலேயே இந்த மர்மப்பொருள் வீழும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் குறித்த...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு தன்னால் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனக்குள்ள அதிகாரங்களை கைவிட்டு ஜனநாயக சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவது இன்றியமையாத ஒன்று எனத் தெரிவித்தார். மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை பாராளுமன்ற மைதானத்தில்...
நம்பிக்கையை கைவிடாது தொடர்ந்து போராடுங்கள், எங்களால் முடிந்த நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தார் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா செயற்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரியூக் பெய்ங். காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் வாக்கு மூலத்தை பெற்றுவதற்காக காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராயும் ஐ.நா செயற்குழு யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின்...
தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம் பெற்று, இலங்கை மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கையிலும், தென்னிந்தியாவிலும், இந்த வார இறுதியில் அல்லது...
நீண்டகாலமாக இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி நாளை 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு கைதிகள், புதன்கிழமை (11) இரவு தப்பி ஓடியுள்ளனர். தப்பி ஓடிய கைதிகளை நாவற்குழிப் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று வியாழக்கிழமை (12) அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்தும் அவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர். இந்தக் தகவலை சாவகச்சேரி...
சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, நாளை வெள்ளிக்கிழமை (13) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...
யாழில் முதற்தடவையாக பாடசலைகளில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்தடவையாக இயங்கவுள்ள மாணவர் பாராளுமன்றத்திற்கான முதலாவது தேர்தல் நேற்று [11] யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. எதிர்காலத்தில் மாணவர்களிற்கிடையே வன்முறையற்ற, ஜனநாயக முறையில் பிரச்சனைகளை அணுகுவதை ஊக்குவிப்பதை நோக்காக கொண்டு இந்த செயற்திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவர்...
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்குப் பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம். பந்துசேன தெரிவித்தார். எனினும் அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான மேலதிக செயற்பாடுகள் பற்றி இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று...
Loading posts...
All posts loaded
No more posts
