நம்பிக்கையை தளரவிடாது தொடர்ந்து போராடுங்கள்! – காணாமற்போனோரின் உறவினர்களிடம் ஐ.நா அதிகாரி

நம்பிக்கையை கைவிடாது தொடர்ந்து போராடுங்கள், எங்களால் முடிந்த நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தார் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா செயற்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரியூக் பெய்ங்.

காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் வாக்கு மூலத்தை பெற்றுவதற்காக காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராயும் ஐ.நா செயற்குழு யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.

அவ்வேளை அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஐ.நா செயற்குழு அங்கத்தவர்களில் ஒருவரான ரியூக் பெய்ங் சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், நீங்கள் உங்கள் உறவுகளை தேடி வருகின்றீர்கள் அவர்களுக்காக போராடுகின்றீர்கள், உங்கள் நம்பிக்கையை தளரவிடாது தொடர்ந்து போராடுங்கள், மாற்றம் வரும் என நாங்கள் நம்புகின்றோம். அதற்காக நாங்கள் எங்களால் முடிந்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

Related Posts