பயணிகளுடன் கொழும்பு சென்ற பஸ் தடுத்து வைப்பு

வழி அனுமதிபத்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ்ஸை வெள்ளிக்கிழமை (27) கொடிகாமம் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி 35 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ்ஸை, கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி தலமையிலான குழுவினர் மறித்து சோதனையிட்டனர். இதன் போது, வழி அனுமதிபத்திரத்தில் போலியான கையெழுத்தினை பாவித்து,...

‘முஸ்லிம்கள் பேரம் பேசி தேவையானதை பெறுகின்றனர்’

முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும்போது, தங்களுக்கு தேவையானவற்றை பேரம் பேசிப் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், நாங்கள் அரசாங்கத்திடம் எவ்வித பேரம் பேசலையும் செய்யவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், மாவட்டம் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் மற்றும் மாவட்டத்தில் அதிக வாக்குப் பெற்ற கட்சியின் பிரதிநிதி ஆகியோர் இணைத் தலைவர்களாக இருப்பார்கள்...
Ad Widget

வளலாய் மக்களுக்கு வாழ்வாதர உதவி

நோர்வே அரசாங்கத்தின் 67 மில்லியன் ரூபாய் நிதியுதவி வளலாய் பகுதி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர் தெரிவித்தார். இலங்கைக்கான தூதுவராக பதவியேற்ற தோர்ப்ஜோன், நோர்வே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் ஒரு அங்கமாக கடந்த 30 வருடங்களாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில்...

ரயில் கடவையில் அவசரப்படவேண்டாம்

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பான ரயில் கடவைகள் ரயில் வருவதற்காக மூடப்படும் போது, ரயில் கடவையானது எப்போது திறக்கப்படும் என்ற அவசரத்தில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் வீதியை முழுமையாக ஆக்கிரமித்து நிற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இரட்டை வீதிகள் என்பது இல்லாமல், இருவழிக்கு ஒரே வீதியில் நடுவில் வெள்ளைக்...

சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்ற திட்டம்

சௌதி அரேபியா பல டஜன் கணக்கானோருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அச்சம் தெரிவித்திருக்கிறது. 55 பேர் "பயங்கரவாதக் குற்றங்களுக்காக" மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்று ஒக்காஸ் என்ற பத்திரிகை கூறியது. ஆனால் அல் ரியாத் பத்திரிகையில் வெளியாகி, தற்போது நீக்கப்பட்ட செய்தி ஒன்றில்,...

இதுபோன்ற சவால்களை நாங்கள் சந்தித்ததே இல்லை – அம்லா

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நாக்பூர் டெஸ்டில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்த தொடரில் மூன்று ஆடுகளமும் முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்க சாதகமாக இருந்தது. தென்ஆப்பிரிக்காவின் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணமாக...

அரைசதம் இல்லாத டெஸ்ட்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நாக்பூர் டெஸ்டில் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நேற்று தொடர்ந்து ஆடினர். சுழல் ஜாலத்தின் ‘கிடுக்குபிடி’ கொடிகட்டி பறந்த இந்த டெஸ்டில், ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்தியாவின் முதலாவது இன்னிங்சில் முரளிவிஜய் எடுத்த 40 ரன்களே அதிகபட்சமாகும். 40 விக்கெட்டுகளும் முழுமையாக சரிந்த ஒரு டெஸ்டில் எந்த ஒரு பேட்ஸ்மேனும்...

சிக்கலான படத்தால், சிக்கலில் மாட்டிய இலங்கை கிரிக்கேட் வீரர்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் ஒருவர் குஷல் ஜனித் பெரேரா. எல்லா போட்டிகளிலும் பிரகாசிக்காத போதிலும், அப்பப்போது எதையேனும் செய்து அதாவது அதிரடியாக ஆடி பெயரைக் காப்பாற்றிக்கொள்வார். அதிரடி வீரராக அறியப்படும் இவர் , அதிரடியான சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். ஆம், கட்டிலில் பெண்ணொருவருடன் இருந்தவாறு அவர் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படும் அந்தரங்க செல்பியொன்று தற்போது இணையத்தில்...

செந்தூரனின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் செந்தூரனின் பூதவுடல் ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் சிந்த அக்கியுடன் சங்கமமானது. மாணவன் செந்தூரனின் இறுதிக் கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. கோப்பாய் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டிருந்ததுடன், பெருந்திரளான மக்கள் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்...

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் தலைமையில் பரமேஸ்வரா ஆலய முன்றலில் தீபம் ஏற்றி வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டிருந்ததாக அறியமுடிகின்றது.

வடக்கில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நோர்வே அரசு தயார்

வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு முயற்சியினை எற்படுத்த நோர்வே அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் இலங்கையின் பல்வேறு துறைகளில் அபிவிருத்திகளை ஆராய்ந்துவரும் இத்தருணத்தில் வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் ஏன் முன்வரவில்லை. அதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப் ஜோர்ன் கோஸ்ரட்சீதர்...

புலிகளின் நகைகள் சிக்கவில்லை

வடமராட்சி, மணற்காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்க நகைகள் மற்றும் பணத்தை மீட்டெடுக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட தோண்டும் நடவடிக்கையில் எவையும் சிக்கவில்லை. சுமார் 7 அடி ஆழத்துக்கு மண் அகழப்பட்ட போதும், கட்டடடிபாடுகள் மாத்திரமே கிடைத்தன. மணற்காட்டுப் பகுதிக்கு, கடந்த 20 ஆம் திகதி சென்ற ஐந்து...

மாணவனின் மரணம் வீணாக மாறிவிடக்கூடாது! – முதலமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தற்கொலைச் செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் உணர்வுகளையும், எதிர்ப்பார்ப்பினையும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் நம்பிக்கை இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு முதல்வரைச் சந்தித்த ஊடகவியலாளர்கள் மாணவனின் தற்கொலை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர்...

மாவீரர்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று காலை நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில் அவர் மாவீரர்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்றதோடு, இதில் உயிர்நீத்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். மாவீரர் தினத்தினை முன்னிட்டு வடக்கில்...

பொருட்களின் விலை குறைப்பு : வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியது

வரவு செலவு திட்டத்தில் விலை குறைப்புச் செய்யப்பட்ட பொருட்கள் பலவற்றின் புதிய விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விலை குறைப்புச் செய்யப்பட்ட பருப்பு, நெத்தலி, கருவாடு, 400 கிராம் உள்நாட்டு பால்மா மற்றும் கடலை வகைகள் என்பவற்றின் புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, உலர்ந்த...

தடைகள் நீக்கம் தேசிய நல்லிணக்கத்திற்கு நல்லெண்ண சமிக்ஞையாகும்! ஏனைய தடைகளும் நீக்கப்பட வேண்டும்!

புலம் பெயர்ந்தோர் அமைப்புகள் மற்றும் தனி நபர் சிலர் மீதான தடைகள் நீக்கஞ் செய்யப்பட்டுள்ளமை, தேசிய நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் காட்டியுள்ள நல்லெண்ண சமிக்ஞையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பிடி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், 2014ம் வருடம் மார்ச்...

விழிப்புநிலையில் இருக்கிறதாம் பாதுகாப்பு அமைச்சு

வடக்கில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்க, பாதுகாப்பு அமைச்சு முழு அளவிலான விழிப்பு நிலையில் இருக்கும் என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு. அரசியலமைப்பின் படி, நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு அமைப்புத் தொடர்பான...

உயிர் துறந்த மாணவனி்ன் கடிதத்தை மறைக்க முயற்சி! – சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, தன் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவனின் கடிதத்தை பொலிஸார் உள்ளிட்ட சில தரப்பினர் மூடி மறைக்க முயற்சித்து வருவதாக தாம் சந்தேகிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தின் பிரதிகள் தமக்கும் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், அவ்வாறான ஒரு கடிதம் கிடைக்கவில்லையென...

தமிழ்க்கைதிகளின் விடுதலைக்காய் தனதுயிரை மாய்த்துக் கொண்ட மாணவனின் சம்பவம் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது: – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலுயுறுத்தி கோண்டாவில் தொடருந்து வழித்தடத்தில் தொடருந்து முன் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்ட மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனது சம்பவத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் சுதன்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மாவீரர்களை நினைவேந்தி நிற்கும்...

யாழ் பல்கலைக்கழகத்தில் தேசிய தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள்!

தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நேற்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் கொண்டாடப்பட்டது. தேசிய தலைவரின் 61 வது பிறந்தநாள் நேற்று உலகில் பல்வேறு நாடுகளில் தமிழர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், இராணுவ நெருக்குவாரங்களால் இலங்கையில் கொண்டாடப்படக் சூடிய சூழ்நிலை இருக்கவில்லை. எனினும், நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரத்தியேக இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை,...
Loading posts...

All posts loaded

No more posts