- Saturday
- May 16th, 2026
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, சிறப்பு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது. அவ்வாறான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, மேல் நீதிமன்ற ஆணையாளராக முன்னாள் நீதிபதி ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 31 வருடங்கள் நீதிபதியாகச் சேவையாற்றிய ஐராங்கனி பெரேரா, இராணுவ வீராங்கனையான இனோகா...
நாட்டின் அபிவிருத்திக்குப் பாரிய பங்களிப்பைச் செலுத்தக்கூடிய வடக்கு, கிழக்கு மக்களை மீட்டெடுக்க விசேட திட்டம் தேவை. இவர்களின் பிரச்சினையை அவசர நிலைமையாகக் கருதி முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக விசேட கவனம் செலுத்தி தாமதமின்றி நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவேண்டும். இரு கட்சிகளும் இணைந்ததன் முக்கிய குறிக்கோளை அரசு மறந்துவிடக்கூடாது. இவ்வாறு நாடாளுமன்றில் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்...
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத் துணைப்படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். முன்பள்ளி செல்லும் தமிழ்க் குழந்தைகள் இராணுவச் சின்னம் பொறித்த சீருடையுடனேயே செல்கின்றனர். இது சரியானதா எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்தச் செயற்பாடானது தமிழ்க்...
138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது பகல்-இரவு ஆட்டமாக புது பரிமாணம் பெற்றுள்ளது. தற்போது மீண்டும் ஒரு பரிணாமமாக நாணயம் (டாஸ்) சுண்ட தேவையில்லை என்ற முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. இங்கிலாந்தில் கவுன்டி போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள். இதில் கவுன்டி...
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸில் இருந்து 7 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் மேலும் 5 கிலோ கஞ்சாவுடன் ஐவரைக் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். யாழ். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு பஸ்ஸில் ஏறியுள்ளனர்....
வடமாராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச சபை தனியாக்கப்பட வேண்டுமென்றும், நல்லூர், சுன்னாகம், மானிப்பாய், சங்கானை, நெல்லியடி போன்ற பிரதேசங்கள் நகர சபைகளாக தரம் பிரிக்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் 2016ம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி மற்றும்...
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் சிலர் இணைந்து 10,000 புத்தகங்களை ஞாயிறன்று அன்பளிப்பு செய்திருக்கின்றார்கள். கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு கடந்த நேரத்தில் இடம்பெற்ற அரச வன்முறைச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாணம் நூலகம் எரியூட்டப்பட்டது. இதன்போது அங்கிருந்த...
பிரபல நடிகர் கார்த்திக் உடல் நலககுறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வந்தது. மேலும் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாகவும் செய்திகள் பரவின. கார்த்திக்கின் உடல் நலம் குறித்த வதந்திகளுக்கு சரியான விளக்கத்தை கௌதம் கார்த்திக் பதிவு செய்துள்ளார். அவர் கூறும்போது, "என் அப்பா...
நியூசிலாந்துக்கு எதிரான பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3–வது நாளிலேயே இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா– நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பகல்–இரவு மோதலாக கடந்த 27–ந்தேதி அடிலெய்டில் தொடங்கியது. இது, வரலாற்றின் முதல்...
இந்திய ஆடுகளங்கள் குறித்து புகார் கூறிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு, இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் விளையாடி வரும் அம்லா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் (பிட்ச்) தாக்குப்பிடிக்க முடியாமல் மிரண்டு வருகிறது. மொகாலி மற்றும் நாக்பூரில் நடந்த டெஸ்டுகளில் தென்ஆப்பிரிக்கா வெறும் 3 நாட்களில் ‘சரண்’...
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘கபாலி’. இப்படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தினார்கள். அடுத்த கட்டமாக கோவா செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவில் ஒரு...
யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்களின் சுமார் 9700 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் மீள்குடியேற்ற நிலமைகள், மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து மத்திய அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்யும் நோக்கில் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில், குறித்த காணிகளுக்குச் சொந்தமான 9819 குடும்பங்களை சேர்ந்த...
புதிய அரசின் வரவு- செலவுத்திட்டத்திலுள்ள விடயங்களை விமர்சித்து யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'கூட்டரசாங்கம் பென்ஷனுக்கு வேட்டு' 'EPF - ETF கொள்ளையடிக்கிறது', 'உர மாணியம் நாசம் அரசாங்கத்தின் குண்டுக்கு சிக்காதிருப்போம்', 'பைக்- த்ரீ வீல் வாகனங்களுக்கு விதித்த வரியை சுருட்டிக்கொள்' ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டபட்டுள்ளன.
2016ஆம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக மைத்திரிபால சிறிசேன பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளை இணைத்து, தேசிய அரசாங்கமொன்றை அமைத்ததற்காகவே இந்த விருது கிடைக்கலாம் என்றும் அவர் கூறினார்.
வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு, சனிக்கிழமை (28) முதல் மீளப்பெறப்பட்டுள்ளதாக சபையின் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விரும்பினால் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், விந்தன் கனகரத்தினம் மற்றும் சபையின் எதிர்க்கட்சி...
வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், நேற்று சபை அமர்வின்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டது. மத்திய அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதியின் அடிப்படையில், 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்னோட்டம் முதலமைச்சரினால் முன்மொழியப்பட்டது. வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக்கூற்று அறிக்கை இன்றைய தினம் மாகாண சபையின்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் அவசரகால சட்ட விதிமுறைகளின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் உரிமைகள் தொடர்பில் ´ஆழ்ந்த´ கவலையடைந்துள்ளதாக கூறியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு சட்டமா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் இன்றியும், நம்பகமான ஆதாரங்கள் இன்றியும்...
யாழ் குடாநாட்டில் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கடந்த கால யுத்தம் காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ள வடமராட்சி கிழக்குப் பகுதியில் நான்கு வட்டாரங்கள் என தேசிய எல்லை நிர்ணயக் குழு அறிவித்துள்ளமை மீள் பரிசீலைனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில்...
காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நகர பேருந்து நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக அரசாங்கம் வெளியிடவேண்டும் என வலியுறுத்தி கொட்டும் மழைக்கும் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. சம உரிமை இயக்கத்தினரின்...
பாவனை அதிகாரசபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்புக்கம்பிகள் இருந்தமை வெள்ளிக்கிழமை (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பாவணை அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் இடம்பெற்றமை பாவனை அதிகார சபை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. யாழ். நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
