வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது: நடிகர்-நடிகைகள் மாடிகளில் தஞ்சம்

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இந்த வெள்ள பாதிப்புக்கு நடிகர்-நடிகைகளும் தப்பவில்லை. கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், ஈக்காட்டுதாங்கல் பகுதிகளில்தான் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள்...

2 நாட்களில் காற்றழுத்த தாழ்வுநிலை வலு இழக்கிறது : அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் தொடர்ந்து நிலவுவதால், தமிழகத்தில் அடுத்தடுத்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி அந்தமான் அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.பின்னர், அந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கை மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள...
Ad Widget

நான் எனது மக்களை உண்மையாகவே நேசிக்கிறேன் – கமல்ஹாசன்

வெள்ள சேத பாதிப்பால் மக்கள் படும் கஷ்டங்கள் தன்னை கவலையில் ஆழ்த்தி உள்ளதாகவும், சென்னைக்கே இந்த நிலைமையா? என்று வியப்படைவதாகவும் கமல்ஹாசன் கூறினார். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் நேற்று அளித்த பேட்டி வருமாறு:- மழை வெள்ளத்தால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை, இயற்கை பேரிடர் என்பது குறைத்து மதிப்பிடும் வார்த்தை. சென்னைக்கே இந்த நிலைமை ஏற்பட்டு...

கைத்தொலைபேசிக்காக மாணவர்களை அடியாட்களாக்கிய அதிபர்!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் (இலக்கம் 2) அரசினர் தமிழ்க்கலைவன் பாடசாலையில் மேல் வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்பு மாணவர்களை கடுமையாகத் தாக்கி விசாரணைக்கு உட்படுத்தியதில் தாக்கப்பட்ட மாணவர்கள் நான்கு பேர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, மேற்குறித்த பாடசாலையின் அதிபரின் ஐம்பதாயிரம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை காணவில்லை என தெரிவித்து சந்தேகம் என்ற...

யாழிலும் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு

இலங்கை தேசிய அரசாங்கத்தின் 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை எதிர்த்து தேசியளவில் மேற்கொள்ளப்படும் வைத்தியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் யாழ்.மாவட்ட வைத்தியர்களும் இணைந்துள்ளனர். தேசிய வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்களுக்கான தீர்வையற்ற வாகன கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை உள்ளிட்ட பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி தேசிய மட்டத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாகவே...

சுரேஸ் பிரேமச்சந்திரனின் சித்திரவதை முகாம் குறித்த குற்றச்சாட்டை இராணுவம் நிராகரிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சித்திரவதை முகாம் குறித்த குற்றச்சாட்டை இராணுவம் நிராகரித்துள்ளது. இராணுவத் தரப்பினர் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சாவகச்சேரி மாரதி இராணுவ முகாமில் சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டிருந்தது என சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார். 52ம் படையணிக்குச் சொந்தமாகவிருந்த இந்த முகாம்...

தகவல் அறியும் உரிமை ,வாகன அனுமதி சலுகைகளுக்கு அனுமதி

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி சலுகைகள், 10 வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் என்றும் இது, அதிகபட்சம் இரண்டு வாகனங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை தகவல் அறியும் உரிமை சட்டமூலத்துக்கான அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்....

பாட்டியை குளியலறையில் அடைத்து வைத்த பேத்தி கைது

தென்னிலங்கையின் காலி பகுதியில் தனது பாட்டியை நீண்ட நாட்களாக மலசலகூடத்திற்கு அருகில் பாழடைந்த குளியலறையொன்றில் அடைத்து வைத்த பேத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 78 வயதுடைய குறித்த வயோதிபப் பெண்ணிற்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவரது மகளே தனது பாட்டியை அடைத்து வைத்திருந்துள்ளதாகவும் மீட்டியாகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த...

சென்னை வெள்ளத்தினால் ஈழ தமிழர்கள் பாதிப்பு

இந்திய சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஈழ தமிழர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். ஈழ தமிழர்கள் வசிக்கும் கே.கே.நகர், மடிப்பாக்கம், அண்ணாநகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், நெசப்பாக்கம், போரூர், உள்ளிட்ட பகுதிகளிலும், வெள்ளத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தொலைபேசித் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேவேளை,...

கூட்டணியை பொறுப்பேற்குமாறு சங்கரி விடுத்த அழைப்புக்கு விக்னேஸ்வரன் பதில்!

எனது சட்டக் கல்­லூரி நண்பர் ஆனந்­த­சங்­கரி எனது அர­சியல் செயற்­பா­டுகள் குறித்து வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்­துக்­க­ளுக்கும் அவர் என்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கைக்கும் எனது நன்­றிகள். இதை மட்­டுமே என்னால் தற்­போது கூற­மு­டியும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். வட­மா­காண முத­ல­மைச்சர் விரும்­பினால் இந்த நிமி­டமே தனது கட்­சியை ஒப்­ப­டைக்க தயார் என்று தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின்...

சர்வதேச சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது – மாவை

நாட்டுக்குக் கிடைத்திருக்கும் சர்வதேச சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக வரவு- செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும், வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் காண்பது தொடர்பில் வரவு- செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை...

பில்லி, சூனியம் செய்தவர் விளக்கமறியலில்

பில்லி, சூனியம் வைப்பதாகக் கூறி பொதுமக்களிடம் பெருமளவு பணத்தை பெற்று வந்தவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை புதன்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார். பில்லி, சூனியம் மீது நம்பிக்கையுடையவர்கள் குறித்த நபரிடம் சென்றால் அவர்களிடமிருந்து சிறிய தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு மருந்து ஒன்றை வழங்குவதாகவும் அந்த...

யாழில் எச்.ஐ.வி தொற்றுக்கு இருவர் மரணம்

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் இருவர், எச்.ஐ.வி தொற்று தாக்கத்துக்கு உள்ளாகி இவ்வருடம் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பால்வினை தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவின் பொது வைத்தியர் திருமதி தாரணி குருபரன், இன்று புதன்கிழமை (02) தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிரிழந்த இருவரும் 30 வயதையுடையவர்கள். கடந்த வருடம் இந்த தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளனர்...

கிடங்கிற்குள் இறங்கியவர்கள் மர்மமாய் உயிரிழப்பு

உடுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் குழாய்க் கிணறு அருகிலிருந்த கிடங்கிற்குள் பூட்டப்பட்டிருந்த மோட்டாரை பழுதுபார்க்க நேற்று புதன்கிழமை (02) மாலை குறித்த கிடங்கினுள் இறங்கிய இருவர் மர்மான முறையில் இறந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். புலோலி பகுதியைச் சேர்ந்த எஸ்.மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையைச் சேர்ந்த என்.கிருஸ்ணமூர்த்தி (வயது 61) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேற்படி பள்ளத்தில்...

மதுபானம் வழங்க மறுத்த அரசியல் கைதியின் மோட்டார் சைக்கிள், பணம் பொலிஸாரால் பறிமுதல்!

மதுபானம் வழங்காதால் அரசியல் கைதி ஒருவர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டு அவரது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று சாவகச்சேரி வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி வடக்கு, டச்சு வீதியில் வசித்த சுப்பிரமணியம் நிதிகேசன் என்பவர் வவுனியா தடுப்பு முகாமில் இருந்து மகளின் மருத்துவத் தேவைக்காக விடுமுறையில் வீடு வந்துள்ளார். முன்னாள் போராளியான அவர், 2014ஆம்...

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’

பாடசாலைகளில் உள்ள நெருக்கடிக்கு தீர்வாக 'அருகிலுள்ள பாடசாலை... சிறந்த பாடசாலை' என்ற தொனிப்பொருளில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பிரபல பாடசாலைகளுக்குள்ள பௌதீக மற்றும் ஆளணி வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும நேற்று...

சீருடை வவுச்சர்கள் : முறைப்பாடுகளுக்கு 1919 அழைக்கவும்!

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் காணப்பட்டால் 1919 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறையிடலாம் எனவும், எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடை வவுச்சர்களை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில்...

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் : தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு!

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. மேலும் மக்கள் விடுதலை முன்னணி இதற்கு எதிராக வாக்களித்ததோடு, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய...

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது

அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது. இது வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது . வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை...

தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் – இந்திய வானிலை அதிகாரி

தென்னிந்தியாவின் கடலோர பகுதிகளில், குறிப்பாக தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன்பிறகு மழையின் அளவு குறைந்தாலும் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் மத்திய வானிலை துறையின் டைரக்டர் ஜெனரல் எல்.எஸ்.ரத்தோர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாட்டில்...
Loading posts...

All posts loaded

No more posts