Ad Widget

கூட்டணியை பொறுப்பேற்குமாறு சங்கரி விடுத்த அழைப்புக்கு விக்னேஸ்வரன் பதில்!

எனது சட்டக் கல்­லூரி நண்பர் ஆனந்­த­சங்­கரி எனது அர­சியல் செயற்­பா­டுகள் குறித்து வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்­துக்­க­ளுக்கும் அவர் என்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கைக்கும் எனது நன்­றிகள். இதை மட்­டுமே என்னால் தற்­போது கூற­மு­டியும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

வட­மா­காண முத­ல­மைச்சர் விரும்­பினால் இந்த நிமி­டமே தனது கட்­சியை ஒப்­ப­டைக்க தயார் என்று தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர் வீ.அனந்­த­சங்­கரி நேற்­று­முன்­தினம் கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார்.

இதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே விக்­கி­னேஸ்­வரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­டு ­நா­ளாந்தம் பெரும் துயரில் வாழும் மக்­க­ளுக்­கு­செய்­ய­ வேண்­டி­ய­ ப­ல ­ப­ணிகள் உள்­ளன. இன்று கூட இப்­பேர்ப்­பட்­ட­மக்கள் உத­வி­கோ­ரி ­என்­னிடம் வந்­தார்கள். இன்­று­மக்கள் சந்­திப்­புநாள். நாம் எல்­லோரும் ஒன்­று­சேர்ந்­துஎம் மக்­க­ளை ­வ­லு­வுட்­டு­வ­தற்குப் பாடு­ப­ட­ வேண்­டி­ய­த­ருணம் இது.

இதை­வி­டுத்து, உட்­கட்­சி­மோ­தல்கள்,கருத்­து­ மு­ரண்­பா­டு­க­ளினால் எம­து­ செ­யற்­பா­டுகள் வேறு­வ­ழி­களில் திசை­தி­ருப்­பப்­ப­டு­வ­து­ போன்­ற­வை ­த­விர்க்­கப்­ப­ட­வேண்டும். நான்­ இது பற்றிக் கவ­ன­மா­கவே இருக்­கின்றேன். அனைத்­து­ தமிழ்க் கட்­சி­களும் ஒரு­மித்­து­நின்­று­ அர்ப்­ப­ணிப்­பு­டனும் பற்­று­று­தி­யு­டனும் எவ­ருக்கும் விலை­போ­காமல் சில்­லறை இலா­பங்­க­ளுக்­கு­ ச­ரிந்­து ­கொ­டுக்­காமல் எம­து ­மக்­க­ளுக்­கா­ன­ செ­யற்­றிட்­டங்­க­ளை­ முன்­னெ­டுக்­க­ முன்­வ­ர­வேண்டும் என்று விரும்புகின்றேன். இதுவே மக்களின் விருப்பமுமாகும்.

எனது சட்டக்கல்லூரி சமகால நண்பர் ஆனந்தசங்கரி அவர்கள் எனது அரசியல் செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்தி உள்ள கருத்துக்களுக்கும் அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் எனது நன்றிகள். இதைமட்டுமே என்னால் தற்போது கூற முடியும்.

Related Posts