ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம்

ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்த முடிவெடுக்க மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் 2 பேர் இதற்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன்...

கலிபோர்னியாவில் துப்பாக்கிச் சூடு: 20 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் அருகில் உள்ள சான் பெர்னார்டினோ என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது....
Ad Widget

விக்ரம் பிரபு படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா

விக்ரம் பிரபு நடிப்பில் ‘வாகா’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் ‘வீர சிவாஜி’ படத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஷாமிலி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்குப் பிறகு ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய பிரபாகரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘சுந்தரபாண்டியன்’ படம்...

மழை எதிரொலி: திரைப்படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக அடை மழை பொழிந்து வருகிறது. இந்த மழையால் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது....

யாழ். பல்கலை மாணவன் தற்கொலை! : பகிடிவதை காரணமா??

யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் தனது வீட்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பருத்தித்துறை, புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பெளதிக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்ற 21 வயதுடைய தவராசா குபேரன் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான...

சென்னை – கொழும்பு விமானங்கள் இரத்து

தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை மற்றும் கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்று காலை 07.20 தொடக்கம் மாலை 06.30 வரை இலங்கையில் இருந்து புறப்படத் தயாராக இருந்த மூன்று விமானங்கள் மற்றும் அதிகாலை 01.45 முதல் இரவு 10.15 வரை சென்னையில் இருந்து இலங்கை வரத்...

விக்னேஸ்வரன் விரும்பினால் த.வி.கூ நாளையே அவர் வசமாகும்!

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் படித்த பண்புள்ள நம்பிக்கையானவர். அவர் ஏற்பாரேயானால் எமது கட்சியை இந்த நிமிடமே அவரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, ‘என்னுடன் செயற்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். புனிதமான இந்த கட்சியை எதிர்காலத்தில் வீதியில் விட்டுச் செல்ல...

அரச வைத்தியர்கள் நாளை வேலைநிறுத்தம்

அரசாங்க வைத்தியர்கள் நாளை காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அரச சேவையாளர்களின் அடிப்படைச் சம்பளம் திருத்தம் செய்யப்படாமை, சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையுடனான வாகன அனுமதிப் பத்திர முறை இரத்துச் செய்யப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில்...

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவனேசத்துரை சந்திரகாந்தனை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் இந்த உத்தரவை பிறப்பித்தார். இன்று காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்ட பிள்ளையான் நீதிமன்றத்தில்...

புங்குடுதீவில் 13 வயது சிறுமி துஷ்பிரயோம்!

புங்குடுதீவு பகுதியில் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த சிறுமியை தொடர்ச்சியாக இரு தடவைகள் அவரது தந்தை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிலிருந்து தெரிய வந்துள்ளது. சிறுமி வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

தந்தையானார் பேஸ்புக் நிறுவுனர் மார்க்; உலகத்தை மாற்ற பல கோடிகள்!

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவுனர் மார்க் ஷகர்பெர்க் மற்றும் இவரது மனைவி பிரிஸ்சில்லா தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு மெக்ஸ் என பெயர் சூட்டியுள்ளனர். தங்களது குழந்தையின் புகைப்படத்தை அவர்கள் ​பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அத்துடன் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உள்ள பேஸ்புக் நிறுவுனர் மார்க்...

முல்லை மாவட்ட விவசாயிகளுக்கு நவீன நெல்அறுவடை இயந்திரம்

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் விதமாக வடமாகாண விவசாய அமைச்சால் ரூபா 5 மில்லியன் பெறுமதியான நவீன நெல்அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான குறைதீர் நடமாடும் சேவை முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01.12.2015) நடைபெற்றது. இதன்போது, நெல்அறுவடை இயந்திரத்தை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஒட்டுசுட்டான் ஒருங்கிணைந்த...

“பலாலி விமானத் தளம் பொது மக்கள் பாவனைக்கு வசதியாக மாற்றப்படும்போதே அங்கு புதிய முதலீடுகளைச் செய்ய வசதியாக இருக்கும்.”- டக்ளஸ்

2016ம் வருடத்திற்கான வரவுசெலவுத்; திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்; தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் (01.12.2015) ஆற்றிய உரை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் உரையாற்றக் கிடைத்ததற்காக எமது கட்சியாகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பிலும், தொடர்ச்சியாக ஆறு தடவைகளாக...

வட மாகாண உள்ளக வீதிகளைப் புனரமைக்க உடனடி ஏற்பாடுகள் தேவை! – டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாணத்தின் உள்ளக வீதிகள் திருத்தப்படாமை காரணமாக மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, இவ் வீதிகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்பு செய்வதற்கு உடனடி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர்...

மாணவர்கள் குடைபிடித்துக் கொண்டு பரீட்சை எழுதும் நிலை!

யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் பிற்பகல் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரையும் தொடர்ந்தது. நேற்றுக் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குடாநாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள்...

மாணவர்களின் கல்வியைக் குழப்பி வருங்கால சந்ததியை அடிமைப்படுத்த சதி! – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடபகுதியின் மூலதனமாக விளங்கும் கல்வியைக் குழப்பி எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கு திட்டமிட்டே பல சதிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்பப் பீடக் கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் அவர் தெரிவித்தார். மன்னார்...

கோத்தபாயவைக் கைது செய்தால் போராட்டம் வெடிக்கும்! – பௌத்த பிக்கு எச்சரிக்கை

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று பெவிதி ஹன்ட என்ற சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முத்தெட்டுவே ஆனந்த தேரர், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து...

காசோலைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டே வரி விதிக்கும் யோசனை – ரவி கருணாநாயக்க

பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கென வங்கி உடன் உண்டியல் மற்றும் காசோலைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டே பண மீளெடுப்புக்களின் போது வரி விதிக்கும் யோசனை, முன்வைக்கப்பட்டதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வரவு- செலவுத் திட்டத்தில் ஒரு மில்லியன் தொடக்கம் 10 மில்லியன் வரையான பண மீளெடுப்புக்களின் போது, 2 சதவீதமும், 10 மில்லியனுக்கு மேற்பட்ட பண...

வரணியில் வதை முகாம் – சுரேஷ்

வரணி பகுதியில் இராணுவத்தின் 526ஆவது படையணி நிலைகொண்டிருந்த வரணி படைமுகாமில், சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தெரிவித்தார். வரணி படைமுகாமில் சித்திரவதை முகாம் காணப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் அவரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த தனியார்...

கடலோரங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்?

வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப மாற்றங்கள் காரணமாக நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (02) இடி மின்னலுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இம்மழைவீழ்ச்சியினளவு 150...
Loading posts...

All posts loaded

No more posts