Ad Widget

சுரேஸ் பிரேமச்சந்திரனின் சித்திரவதை முகாம் குறித்த குற்றச்சாட்டை இராணுவம் நிராகரிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சித்திரவதை முகாம் குறித்த குற்றச்சாட்டை இராணுவம் நிராகரித்துள்ளது.

இராணுவத் தரப்பினர் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாவகச்சேரி மாரதி இராணுவ முகாமில் சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டிருந்தது என சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

52ம் படையணிக்குச் சொந்தமாகவிருந்த இந்த முகாம் 2014ம் ஆண்டு மே மாதம் அகற்றிக்கொள்ளப்பட்டது.

இராணுவ முகாம் அகற்றப்பட்டு ஓராண்டின் பி;ன்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையின் கடற்படை முகாமில் சித்திரவதை முகாமொன்று காணப்படுவதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரனே முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தார் என சிங்கள ஊடகத்தில் சுட்டிக்காட்டிடுள்ளது.

இதேவேளை, திருகோணமலை முகாமைப் பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அங்கு இரகசிய சித்திரவதை முகாம் காணப்பட்டது என்பதனை உலகிற்கு அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts