தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கிய இடம் போன்று மலையகக் கட்சிக்கும் வழங்க வேண்டும்!

வடக்கு, கிழக்கிற்கும் மலையகத்திற்கும் இன்று முதல் உறவுப் பாலம் ஏற்படுத்தப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு மேசையில் மலையக மக்கள் சார்பான கட்சியும் இடம்பெற வேண்டும். இவற்றுக்கான ஆரம்ப கட்டமாக இன்று அமரர் சந்திரசேகரனின் 6 ஆவது சிரார்த்த தினம் திகழ வேண்டும்.இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள்...

இ.போ.ச. பஸ்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து யாழ். நகரில் கண்டனப் பேரணி!

இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும், தாக்குதல்களை மேற்கொள்வோரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினர். யாழ்.மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி ஆஸ்பத்திரி வீதி வழியாக கண்டி வீதியை அடைந்து , கண்டி வீதி...
Ad Widget

20 மைக்ரோன் இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு தடை

20 மைக்ரோன் இற்கும் குறைவான அளவுடைய பொலித்தீன் பாவனைக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக உணவு வகைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வகைகளின் மைக்ரான் அளவு 20க்கும் குறைவாக காணப்படுகின்றது. இவ்வாறான பொலித்தீன் வகை தயாரிப்பு, விற்பனை மற்றும் பாவனை போன்றவற்றிற்கு எதிராக இன்று முதல் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள இருப்பதாக...

ஆபாசப்படம் வெளியிட்டவன் மர்ம உறுப்பில் ஆசிட் வீசிய இளம்பெண்!

ஸ்மார்ட் போன் யுகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், தனக்கு இழைக்கபடும் அநீதிக்காக அதே பெண்கள் ஆவேசமாக பழிவாங்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. தென் ஆப்பிரிக்காவின் புமலங்கா நகரைச் சேர்ந்த ஹம்ரி கோசா(25) என்ற வாலிபன் சில தினங்களுக்கு முன், தான் வழக்கமாக செல்லும் உள்ளூர்...

தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வு சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றில்

தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை 2500 ரூபாவினால் அதிகரித்தல் மற்றும் அவர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தது 10,000 ரூபாவாக உயர்த்துதல் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் இம்மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன தெரிவித்தார். இம்மாதத்திற்கு அந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். புதிய வருட...

ரசிகர்களுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். கடந்த சில ஆண்டுகள் வரை தனது பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த். சில காரணங்களால் இந்தச் சந்திப்பை திடீரென்று நிறுத்திக் கொண்டார். ரசிகர்களின் சந்திப்பைத் தவிர்ப்பதற்காகவே தனது பிறந்த...

பஞ்சாப் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாத தாக்குதல்

பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப் படை தளத்திற்குள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு வீரர்கள் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இருதரப்பினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவதால் ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். இரண்டிற்கும் மேற்பட்டவர்கள்...

என்னை நடிகை ஆக்கியது தமிழ் சினிமா – எமி ஜாக்சன்

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் ‘பிசி’யாக நடித்துக் கொண்டிருப்பவர் எமிஜாக்சன். அவர் தனது நடிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தங்கமகன் படத்தில் தனுசுடன் நடித்தது ஜாலியான அனுபவம். நான் நன்றாக நடிப்பதற்கு அவர் உதவினார். எந்த மொழி படமாக இருந்தாலும் சமாளித்துக் கொள்வேன். வசனங்களை புரியும்படி எழுதி வைத்துக் கொண்டு படிக்கிறேன். என்னை நடிகை ஆக்கியது...

எதிர்காலத்தை பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லை – விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சேதுபதி’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். அருண் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். மதுரை பின்னணியில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிக்கு வெளியேயும், வீட்டிற்குள்ளேயும் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். இப்படம் குறித்து...

தமிழக கோவில்களுக்குள் செல்ல ஆடைக்கட்டுப்பாடு!

தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்ல ஆடைக் கட்டுப்பாடுகள் இன்று முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்கள் ஜீன்ஸ், பெண்கள் ஸ்கர்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கோவில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தார். அந்த வழக்கில் கடந்த...

2016 இல் உலகம் எதிர் கொள்ளவுள்ள அழிவு

2016 ம் ஆண்டில் எல் நினோ (கடும் வெப்பம்) சுழற்சியால், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பசியாலும், கடுமையான நோயாலும் பாதிக்கப்படுவார்கள் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. புவியின் சுழற்சி காரணமாக எல் நினோ (கடும் வெப்பம்), லா நினா...

யாழ் மாவட்டம் பெண்களை பாதுகாக்கும் மாவட்டமாக மாற வேண்டும்

யாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள, போதைவஸ்துக்கள் இல்லாத பெண்களையும் மாணவிகளை பாதுகாக்கும் மாவட்டமாக மாற வேண்டும் என்று யாழ். உயர் நீதிமன்ற நீதபதி மா.இளஞ்செழியர் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கான சத்தியபிரமான நிகழ்வு யாழ். நீதிமன்ற வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்திய பிரமாணத்தினை செய்து கொண்ட பின்னர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே...

நாட்டில் புலிப் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பம்! மகிந்த

மேற்கத்தேய நாடுகளின் உதவியுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி அலகுகளாக்கவும், விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்கவும் தமிழர் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாம் ஏற்படுத்திக் கொடுத்த மாற்றமும், உருவாக்கிய ஜனநாயகமும் இன்று சீரழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி மாற்றம் நாட்டை...

தோல்­விக்கு இலங்கை கிரிக்கட் நிர்­வா­கமே காரணம் !அர்­ஜுன ரண­துங்க

நியூஸி­லாந்­துக்கு எதி­ரான கிரிக்கட் போட்­டி­களில் இலங்கை அணியின் தோல்­விக்கு இலங்கை கிரிக்கட் நிர்­வா­கமே காரணம் என குற்றம் சாட்டும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரண­துங்க, கடந்த ஐந்து வரு­ட­கா­ல­மாக நாம் ஒரு திற­மை­யான அணியை உரு­வாக்­கவில்­லை­யெ­னவும் குற்றம் சாட்­டினார்.. நியூஸி­லாந்­துக்கு சென்­றுள்ள இலங்கை கிரிக்கட் அணி அங்கு விளை­யா­டிய போட்­டிகளில்...

அதிரடியாக அதிகரித்த சிகரட் விலை!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.சிலோன் டொபாக்கோ நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, பிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 22 ரூபா. கோல்ட்லீப் (Gold Leaf) ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 35...

‘பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்னதாக பிரார்த்தனை செய்ய கட்டாயப்படுத்தினர்’

ஐ.எஸ். தீவிரவாதிகள் 'பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்னதாக பிரார்த்தனை செய்ய கட்டாயப்படுத்தினர்’ என்று அவர்களிடம் பாலியல் அடிமையாக சிக்கி உயிர்பிழைத்த பெண் தெரிவித்துஉள்ளார். சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கிய பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் அடிமைகள் ஆக்கி கொடுமை செய்து வருகின்றனர். அவர்களிடம் சிக்கி உயிர்பிழைத்த பெண்கள் தெரிவிக்கும் தகவலானது...

இளையராஜாவின் ‘தாரை தப்பட்டை’ ரஹ்மானின் ”அச்சம் என்பது மடமையடா” டிரெயிலர் வெளியீடு

சசிகுமார், வரலட்சுமி போன்றோர் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், தாரை தப்பட்டை. இளையராஜா இசையமைத்த இப்படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம், அச்சம் என்பது மடமையடா. ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்கும் மக்களை பதிவு செய்யுமாறு அறிவித்தல்

பலாலி கன்னார் வயல் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் தின விழாவில் பங்கேற்கவுள்ள மக்களை முன் பதிவு செய்து கொள்ளுமாறு பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவிலும் இந்துக் கோயில்கள் மற்றும் மீள்குடியேற்ற சபையும் அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் விழா பலாலி கன்னார் வயல் ஸ்ரீ...

கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை பாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும்!

இலங்கையின் கலாச்சாரத்திற்கு பங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையிலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டுமென அகில இலங்கை இந்து காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது விசேட கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை வாழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை பாதிக்கும் வகையிலான தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்...

கடவுச்சீட்டு கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!

தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. வரவுசெலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய இந்தக் கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைய, ஒரே நாளில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்...
Loading posts...

All posts loaded

No more posts