புதிய ஆண்டில் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும்! – வி.உருத்ரகுமாரன்

புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த...

தையிட்டியிலும் இராணுவத்தின் வதைமுகாம்!

உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் சீலிங், முட்கம்பிகளினால் வேயப்பட்டுள்ளது. இதனால், அந்த வீடு இராணுவத்தினரின் வதை முகாமாக இயங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அங்கு சென்று திரும்பியோர் தெரிவித்தனர். மேற்படி பகுதியில் இராணுவத்தினரின் பயிற்சி முகாம் ஒன்று இருந்துள்ளது. அந்தப் பயிற்சி...
Ad Widget

யாழ்.குடாநாடு கடலில் மூழ்கும் ஆபத்து! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

யாழ். குடாநாடு கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் உள்ளதெனவும், யாழ்ப்பாண வாசிகள் அனைவரும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் கடல்நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம் நேரிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞானிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை தொடர்பில் தெளிவுபடுத்திய வட மாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், யாழ்ப்பாண மக்கள், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்வார்களாயின் மேற்கண்ட...

மலரும் புத்தாண்டில் தமிழர் பிரச்சினைகள் நல்லாட்சி அரசில் தீரும் என்பது உறுதி! கூட்டமைப்பு!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணவும் நல்லாட்சி அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் மலரும் இந்தப் புத்தாண்டை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நிலையான சமாதானத்தையும் புரிந்துணர்வையும் நிலைநாட்ட இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் முன்வரவேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மலரும் இந்தப் புதிய...

மக்களின் இலட்சியத்தை அடைந்தே தீருவோம்! புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

நாட்டு மக்களின் இலட்சியத்தை அடைந்தே தீருவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:- "எண்ணற்ற எதிர்பார்ப்புகள் நம் எதிரே சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. நாம் கடந்த ஜனவரியில் எங்களுடையதும் எமது பரம்பரையினரதும் வாழ்வை புதியதொரு திருப்புமுனைக்கு இட்டுச்சென்ற ஒரு முக்கியமான பிரவேசத்தின் ஊடாக மிகவும்...

காணி விடுவிப்பை வரவேற்கிறது கூட்டமைப்பு

வலி.வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துகென அரசினால் விடுவிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. காணி விடுவிக்கப்பட்டமையை வரவேற்று அது விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- வலி.வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினர் வசமிருந்த 701 ஏக்கர் காணிகளை அப்பகுதி மக்களின் மீள்குடியேற்றத்துக்கென அரசாங்கம் விடுவித்துள்ளமையை தமிழ்த்...

பிரபாகரன் ஒருவரே தேசியத் தலைவர்! இனியொருவர் உருவாகப் போவதில்லை!!

தேசியத் தலைவர் ஒருவரே, அவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே. இவருக்கு முன்பும் ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை. இவருக்குப் பின்னர் இனியொரு தேசிய தலைவர் உருவாகப் போவதில்லை.இவ்வாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை மாலை நடைபெற்ற கட்சிக்...

வர்ண இரவுகள் விருது வழங்கும் நிகழ்வு

வடமாகாணத்தின் சாதனை வீர வீராங்கனைகளிற்கான வர்ண இரவுகள் விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (30) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடமாகாண கல்வி கலாசாரா விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவை மாகாண அமைச்சர் த.குருகுலராஜா தலைமைதாங்கினார். இந்த வர்ண இரவுகளில் சாதனை வீர, வீராங்கனைகளுக்கான விருதுகளை வடமாகாண முதலமைச்சர்...

மோட்டார் சைக்கிள்களுக்கான பணத்தினை மீளப் பெறவும் – பொதுத்திறைசேரி அறிவிப்பு

அரச அலுவலகங்களில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம்திகதிக்குப்பின்னர் பணம் செலுத்தியவர்கள் தங்களது பணத்தினை முறையாக மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என பொதுத்திறைசேரியின் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்தல் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்,...

புது வருட ஆரம்பத்திலேயே டுபாயில் 63 மாடி கட்டிடத்தில் தீ விபத்து

டுபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு மாடி நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தை ஒட்டி வாணவேடிக்கை நடக்க இருந்த இடத்துக்கு அருகிலேயே இந்தக் கட்டடம் உள்ளது. அட்ரஸ் டவுன்டவுன் ஹோட்டல் என்ற இந்த 63 -மாடிக் கட்டடம், உலகின் உயரமான கட்டடமான பர்ஜ் கலீஃபாவுக்கு அருகே உள்ளது....

தேசிய பொங்கல் விழா யாழில்

தேசிய பொங்கல் விழா, இம்முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படவுள்ளது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வலி வடக்கில் 701.5 ஏக்கர் காணிகளில் மக்கள் மீள்குடியேறவுள்ளதை முன்னிட்டு, வலி வடக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகளும் ஏற்பாடாகியுள்ளன. இந்நிகழ்வில் ஜனாதிபதி...

தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரானது

தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரானது என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக அவரிடம் வினவிய போதே வடமாகாண சபையில் வைத்து இவ்வாறு நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் பேரவையானது, தமிழரசு கட்சிக்கோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கோ...

அனைத்து சிறந்த நோக்கங்களும் வெற்றியடையக் கூடிய வருடமாக அமையட்டும்

பிறந்திருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான புதுவருடத்தினை அழுத்தம் மற்றும் அடக்குமுறையுணர்வின்றி சுதந்திரமான ஒரு சூழலில் புது வருடத்தை வரவேற்​போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பிறந்திருக்கும் புதுவருடத்தினை முன்னிட்டு வௌியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட பிரதமர், 2016 புது வருடமானது மக்கள் எதிர்பார்ப்புக்களை வெற்றியடையச்...

சைபர் தாக்குதலால் பிபிசி இணையதளங்கள் முடங்கின

மிகப்பெரிய இணையவழித் தாக்குதல் காரணமாக பிபிசியின் அனைத்து இணைய சேவைகளும் வியாழனன்று காலை பாதிக்கப்பட்டன. வியாழனன்று லண்டன் நேரம் காலை ஏழு மணிக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்தது. அந்த சமயத்தில் பிபிசி இணைய பக்கங்களுக்கு வந்த பார்வையாளர்களால் குறிப்பிட்ட பக்கங்களை பார்க்கவோ, படிக்கவோ முடியவில்லை. மாறாக Error message எனப்படும் குறிப்பிட்ட இணைய சேவையை நீங்கள்...

ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் ஒருவனுடைய வாழ்க்கையே மாறிவிடும் கதை தான் கதகளி: விஷால் பேச்சு

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கதகளி’. இதில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் விஷால் பேசும்போது, ‘எல்லோரும் என்னிடம் இந்த படத்துக்கு ஏன் ‘கதகளி’ என்று தலைப்பு வைத்தீர்கள் என்று கேட்கின்றனர். நாங்கள் கதகளி...

இரா.சம்மந்தனுக்கு தெளிவுபடுத்தினேன்! எரிச்சலூட்டினால் நான் பொறுப்பல்ல: வட மாகாண முதலமைச்சர்

தமிழ் மக்கள் அவை தொடர்பில் இரா.சம்மந்தனுக்கு நான் தெளிவுபடுத்தினேன். எனது தெளிவுபடுத்தலுக்குப் பின்னர் மக்கள் அவை ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பு என சம்மந்தன் என்னிடம் கூறியுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு இது எரிச்சலூட்டினால் அதற்று நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் அவை...

வடமாகாணத்தின் மூத்த பிரஜை தனது 105 ஆவது வயதில் காலமானார்

வவுனியா மாவட்டத்தின் மூத்த பிரஜையாகிய சதாசிவம் ஐயா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் வேலாயுதம் சதாசிவம் செவ்வாய்க்கிழமை குருமண்காட்டில் உள்ள தமது குறிஞ்சி இல்லத்தில் இறைபதம் அடைந்தார். இறைவனடி சேர்ந்தபோது, அவருக்கு வயது 105. இந்த வயதிலும் முதுமையின் தளர்ச்சியுடன் தானாகவே நடமாடி, தனது தேவைகளைப் பூர்த்தி செய்து நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புபவர்களுக்கு ஓர்...

யாழில் பெண்ணின் அந்தரங்கப் படங்களை வைத்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியவர் கைது!

பெண்ணின் அந்தரங்கப் படங்களை வைத்துக்கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு அப்பெண்ணை மிரட்டிய ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - வடமராட்சி - பருத்தித்துறையில் புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த பெண் தனது அந்தரங்கப் படங்களை தனது கைத்தொலைபேசியில் உள்ள 'வைபர்' மூலம் அதே பகுதியில் வசிக்கும்...

யாழ் பல்கலைக்கழக உணவக சாப்பாட்டில் ஈ

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் உணவகத்தில் மாணவர் ஒருவர் புதன்கிழமை வாங்கிய மதியச் சாப்பாட்டில் இரண்டு ஈக்கள் இருந்துள்ளன. மேற்படி உணவகம் சுகாதாரச் சீர்கேடான முறையில் இயங்கி வருவதாக முன்னரே கூறப்பட்டிருந்தது. மேற்படி, உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (29) விற்பனை செய்யப்பட்ட றோல்ஸ் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக மாணவர்கள் கூறினர். இந்த உணவகத்தை, நடத்துவதற்கு...

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மிதிவெடிகள்

இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் சில இடங்களில் மிதிவெடி அபாயம் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் 468.5 ஏக்கர் காணிகளும் வலிகாமம் கிழக்கு வளலாய் பகுதியில் 233 ஏக்கர் காணிகளும் இராணுவத்தினரால் செவ்வாய்க்கிழமை (29) திடீரென விடுவிக்கப்பட்டன. இதனையடுத்து, நேற்று புதன்கிழமை, மக்கள் மிக ஆர்வமாக அந்த இடங்களைப்...
Loading posts...

All posts loaded

No more posts