Ad Widget

இரா.சம்மந்தனுக்கு தெளிவுபடுத்தினேன்! எரிச்சலூட்டினால் நான் பொறுப்பல்ல: வட மாகாண முதலமைச்சர்

தமிழ் மக்கள் அவை தொடர்பில் இரா.சம்மந்தனுக்கு நான் தெளிவுபடுத்தினேன். எனது தெளிவுபடுத்தலுக்குப் பின்னர் மக்கள் அவை ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பு என சம்மந்தன் என்னிடம் கூறியுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு இது எரிச்சலூட்டினால் அதற்று நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் அவை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் முதலமைச்சரிடம் கேள்வி ஒன்றை எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரா.சம்மந்தனை கொழும்பில் சந்தித்தபோது மக்கள் அவை தொடர்பாக தெரிவித்திருந்தேன். இதன்போது நான் கூறிய விடயங்களை அவர் முழுமையாக கேட்டார். அதாவது மக்கள் அவை ஒரு கட்சி அல்ல கடந்த பல வருடங்களில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை கொடுக்கப்போகின்றோம். என்பதை எவ்வாறு அரசாங்கம் கூறாமல் இருக்கின்றதோ அதேபோன்று தமிழ் மக்களும் தமக்கு என்ன தேவை என்பதை கூறாமலே
இருக்கின்றார்கள்.

இந்நிலையில் அதனை மக்களிடமிருந்து அறிந்து கொண்டு வெளிப்படுத்தவதற்கான ஒரு அமைப்பாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம். என்பதை தெளிவுபடுத்தினேன். மேலும் கட்சியாக்கும் எண்ணம் அதற்காக செயற்படும் எண்ணம் இல்லை. என்பதையும் நான் தெளிவுபடுத்திய நிலையில் இது ஒரு ஜனநயாகரீதியான செயற்பாடு என்பதை இரா.சம்மந்தன் ஒத்துக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை படையினர் யாழ்.குடாநாட்டில் கால்வாய்களை துப்புரவு செய்யவேண்டும். என தாங்கள் கூறிய கருத்து இனவாத நோக்கில் பார்க்கப் படுகின்றதே? ஏன கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது மாகாணசபையில் குடாநாட்டில் வெள்ளநீர் தேங்குவதங்கான காரணங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருந்த போது போர் காலத்தில் புலிகளுடைய ஊடுருவலை தடுப்பதற்காக படையினர் கால்வாய்களை அடை த்தமையே காரணம் என உறுப்பினர் ஒருவர் கூறினார். எனவே அவர்கள் அடைத்தார்களாயின் அவர்களே திறக்கும் வல்லமையுடன் உள்ளமையால் அவர்கள் திறந்து விடட்டும் என்றே நான் கூறினேன். ஆதனை இனவாத நோக்கில் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.

அவ்வாறு நான் கூறிய கருத்துக்கு தவறான வியாக்கியானம் கொடுக்கவேண்டிய தேவையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை சம்மந்தனுடனான சந்திப்பு குறித்து கேட்டபோது, சந்திப்பு திறம்பட நடைபெற்றது. இருவரும் அறியாத விடயங்கள் தொடர்பாக அறிந்து கொண்டோம். புரிந்துணர்வுடன் கூடிய பேச்சுவார்த்தையாக அது அமைந்தது என முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts