- Monday
- May 18th, 2026
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவமதிக்கும் செயலைக் கண்டித்து, தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக வரணி இளைஞர் ஒருவர் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சுதந்திரமாகச் செயற்பட விடுமாறு வலியுறுத்தியதுடன் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வரணி இளைஞர் ஒருவர் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். வரணிப் பகுதியைச்...
யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை மக்களின் காணிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையில், அந்நிகழ்வு திடீரென மறு அறிவித்தல் வரும்வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளினால் உரிய மக்களிடம் கையளிக்கப்படவேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி...
இங்கிலாந்தில் மாணவன் ஒருவன் ஆங்கில பாடத்தில் தவறாக எழுதிய ஒரு வார்த்தையால் பொலிசார் அம்மாணவனின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டுள்ளனர். இங்கிலாந்தின் Lancashire என்ற இடத்தில் உள்ள பள்ளியில் பயின்று வந்த 10 வயது மணவன், தனது ஆங்கில பாடத்தில் நான் மாடி வீட்டின் வசிக்கிறேன்(Terrace house) என்று எழுவதுதற்கு பதிலாக நான் தீவிரவாத வீட்டில் வசிக்கிறேன்...
லிபியாவில் கொள்ளையடித்த 3 பேரை பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக்கொன்ற புகைப்படங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளித்து வருகின்றனர். இந்நிலையில் லிபியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்கள் முன்னிலையில் 3 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். கொள்ளை செயலில் ஈடுபட்டது, இஸ்லாமிய மதத்தில் இருந்து...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும் குறுகிய காலத்துக்குள் இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்து தலைநகர் டாவோஸ் நகரில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு உள்ளூர்,...
காணாமல் போனோர் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து அந்த பிரச்சினைக்கான தீர்வாகாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக காணாமற்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடப்பட்ட போது, கருத்து வெளியிட்ட பெண் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர்...
தமிழ் மக்கள் பேரவை உட்பட அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்கள் பெறப்பட்டே அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கை...
அரசியல் தீர்வு தொடர்பாக ஒருமித்து செயற்படுவோம். எல்லோருமாக சேர்ந்து மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய தலைவர் சம்பந்தன் தலைமையில் உழைப்போம் என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய...
காணாமல் போன சகலருக்கும் மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். காணாமல் போனவர்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர், நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையானது 'உள்ளக விசாரணையாக' இருக்கும் என்றும் பி.பி.சிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில்...
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இணைப்புக்குழு கூட்டம் வியாழனன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றபோது காணாமல் போனோரின் உறவினர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் போனோரில் பெருமளவானோர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தமையை கூட்டமைப்பு ஆட்சேபிக்கவில்லை என்று கூறியும், அதனைக் கண்டித்தும், காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக விளங்கிய காலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார். கம்பஹா, பள்ளி வீதியில் அமைந்துள்ள காலஞ்சென்ற அமைச்சரின் இல்லத்துக்கு தனது பாரியார் ஜயந்தியுடன் சென்று இறுதி அஞ்சலியை ஜனாதிபதி செலுத்தினார். சம்பந்தன் இரங்கல் இதேவேளை, தேசிய அரசில் காணி அமைச்சராக செயற்பட்ட எம்.கே.ஏ.டி.எஸ்....
சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்திற்குச் செல்ல முற்பட்ட இலங்கை அகதிகள் குழுவொன்று இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் நியூஸிலாந்துக்கு செல்ல முற்பட்ட 06 இலங்கை அகதிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அகதிகள் முகாமில் தங்கியுள்ள குறித்த அகதிகள் நியூஸிலாந்திற்குச் செல்ல தயாரான வேளை இந்திய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...
ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள்,...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன் செந்தூரனின் சகோதரிக்கு, மடிக்கணினியும், பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்காக ஆரம்பக்கட்ட நிதியுதவியும் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனால் மாணவியின் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது. குறித்த மாணவி சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, அவரின் முயற்சியால் மடிக்கணினியும், பல்கலைக்கழக கல்வியைத்...
வடமாகாணத்தில் உபயோகிக்கப்படாமல் இருக்கும் காணிகளை கையேற்க வேண்டுமென்று அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பொதுநூலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற 2016-2018 காலப்பகுதியில் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் தன்னிறைவு காணும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்...
தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமஅலுவலர் பிரிவில் கடமையாற்றும் பெண் கிராமஅலுவலர், இன்று வியாழக்கிழமை (21) வாகனத்தில் கடத்தப்பட்ட நிலையில், கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சில மணி நேரங்களில் பின்னர் அவர் மீட்கப்பட்டார். இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில்...
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள மீன்களுக்கான தடை நீக்குவதற்கு மற்றும் ஜீ.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்குவதற்கும் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் இடம்பெறுகின்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில் சுவீடன் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு இலங்கை...
இலங்கையில் தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறுநீரக சத்திரசிகிச்சை செய்வது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால கூறினார். சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற சிறுநீரக கடத்தல் சம்பந்தமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 06...
Loading posts...
All posts loaded
No more posts



