- Sunday
- June 14th, 2026
கடல் அட்டை வளர்ப்புப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி, பூநகரி, பிதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி இலவன்குளம் பகுதியில் நேற்று முதல் இக்குடும்பத்தினர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்த தமது தொழிலில் ஈடுபடும் பகுதியில் கடல் அட்டை வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டுள்ளமையால் தமது வாழ்வாதாரம்...
தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் சிறுவனை வாளால் வெட்டி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கைவிட்டுச் சென்ற...
வட மாகாணத்தில் கணவனை இழந்த இளம் பெண்களிடம் இராணுவம் மட்டுமன்றி தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஊடகவிலாளர்களை தெளிவூட்டும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நீண்டகாலமாக...
கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்திலுள்ள நன்னீர் பகுதி உட்பட வைத்தியசாலை வளாகம் இராணுவத்தால் தொடர்ந்தும் கையகப்படுத்தப்பட்டுள்ளது' என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் இடம்பெற்ற போரின் போது மக்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறியதையடுத்து, அப்பகுதியை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. தற்போது போர் முடிவடைந்து...
திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தில் சுய தேவைக்கான மின்பிறப்பாக்கிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வசிப்போர் மின்சாரமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் மின்பிறப்பாக்கிகள் விற்பனை செய்யும் கடைகளில் கடந்த இரு நாட்களாக மின்பிறப்பாக்கிகள் விற்பனை சடுதியாக...
தண்டவாளத்தில் நடந்துகொண்டு அலைபேசியில் உரையாடிச்சென்ற இளைஞன் மீது ரயில் மோதிய சம்பவமொன்று சாவகச்சேரி ஐயா கடையடியில் செவ்வாய்க்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தடியை சேர்ந்த துரைசிங்கம் ஜங்கரன் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். இதில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியொன்றில் கடமையாற்றும் மேற்படி இளைஞன், தனது நண்பர்களுடன்...
இந்தியாவின் நாக்பூரில் ஆரம்பமான உலகக் கிண்ண 'ருவென்டி 20' சுப்பர் 10 சுற்றில் இந்திய - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டத்தின் போது அறிமுக வீரரான சாண்டனரின் அபாரமான பந்துவீச்சால் 79 ஓட்டங்களுடன் இந்திய அணியை சுருட்டிய நியூசிலாந்து அணி 47 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் என்பதால் நியூசிலாந்து அணி 3...
இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை இலங்கைக் கடற்பரப்பில் கட்டுப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றில் தான் முன்வைத்துள்ள பிரேரணைக்கு வடக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அதன் உறுப்பினர்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். குறித்த விடயத்தை தனிநபர் சட்டமூலமாகக் கொண்டுவந்த அவரின் பிரேரணைக்கு மாகாண சபைகளின் கருத்துக்களை நாடாளுமன்றம் கோரியது. வடக்கு மாகாண...
நாட்டில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், இது தொடர்பாக உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். இக்குழுவில் அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுசில் பிரேம ஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாகல ரத்னாயக்க, பிரதி அமைச்சர்களான எரான் விக்கிரமரத்ன, அஜித் பி...
கொழும்பு - காலி வீதியில் கல்கிஸை மிஹிந்து மாவத்தையில் இலக்கம் 172/2 இல் அமைத்துள்ள இரு மாடிகள் கொண்ட வீட்டில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியுள்ளனர். வீட்டின் முன்புறத்தில் 'மெடம் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ' எனப் பெயர்பலகை இடப்பட்டுள்ளது. இந்த வீட்டின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும்,...
வடக்கு, கிழக்கில் வீட்டுத் திட்டத்தை சாட்டாகப் பயன்படுத்தி ஊழலிலும் ஒழுங்கீனமான செயலிலும் ஈடுபட எவரையும் ஈடுபட அனுமதிக்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சால் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மாதிரிக்காக 2 வீடுகள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட நிலையில்...
நடேஸ்வரா மகா வித்தியாலயம் மீண்டும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை(12) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. அண்மையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போரின் போது இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த நடேஸ்வரா மகா வித்தியாலயத்தை நல்லிணக்க செயற்பாட்டினை வலுப்படுத்தும் ஓர் அங்கமாகவும் அங்குள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் மீள கையளிக்கும் நிகழ்வில்...
உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்டு 20 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு '96 கொண்டாடுவோம்' எனும் தலைப்பின் கீழ் பல்வேறுப்பட்ட நிகழ்வுகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் விளையாட்டுப்பிரிவு சேவ் த ஸ்போர்ட் இயக்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இதனை முன்னிட்டு '96 கொண்டாடுவோம் - கிரிக்கெட் பயிற்சி முகாம்' நாளை மறுநாள் (18) தெஹிவல கவுடானந்த சாஸ்திரானந்த மகா...
லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்ததுடன், மாடு ஒன்றும் உடல் சிதறி உயிரிழந்துள்ளது. யாழ். பளை புதுக்காட்டுச் சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில், பளைப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்...
பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கான விலையை ஏழு ரூபாவால் குறைக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. மேலும், நுகர்வோருக்கு ஒரு வார காலத்துக்கு அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை எதிர்வரும் 20ம்...
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களின் இணைய வழியாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்கள் வழங்கும் முறைமை செயலிழந்து போயுள்ளதாக அங்கு கடமையாற்றும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு என்பன இணைய வழியாக செய்யப்பட்டு, உடனடியாக மக்களுக்கு பிரதிகளை வழங்கும் நடவடிக்கை...
பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணையை சென்னை 4–வது கூடுதல் செசன்சு கோர்ட் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 5–ம் திகதி வீடியோ கான்பரன்சிங் மூலம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது, டக்ளஸ் தேவானந்தா இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி, வீடியோ கான்பரன் சிங் மூலம் விசாரணைக்கு ஒத்தழைப்பு வழங்கினார்....
'யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் வன்செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு அல்லது தகவல்கள் தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்' என யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமையை பொறுப்பேற்றுள்ள தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நேற்று செவ்வாய்க்கிழமை (15) நடத்திய ஊடகவியலாளர்...
தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் 34 பேர், பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதாரத் திணைக்கள அலுவலகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (15) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'நியமனம் வழங்குமாறு அனுமதிக் கடிதம் மத்திய அமைச்சினால் மாகாண சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது என...
கரணவாய், மூத்தவிநாயகர் கோவிலடியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய வயோதிபர் தற்கொலைக்கு செய்து கொள்ள முயற்சி செய்தமையினால், அந்த வழக்கு தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (14) வழங்கப்படவிருந்த தீர்ப்பு, எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். வயோதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அவரது சட்டத்தரணியூடாக...
Loading posts...
All posts loaded
No more posts
