- Sunday
- June 14th, 2026
முகநூல் ஊடாக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் போலிப்பிராசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும், இவ்வாறான 50 முகநூல் கணக்குகளின் தகவல்களை விரைவில் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்...
யாழ்ப்பாணம் செங்குந்தா மைதான கிரிக்கட் வீரர் கிறிஸ்தோபர் பிரேமன் கொலை வழக்கில் 3 எதிரிகளுக்கு தலா 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தபட்ட ஏழு எதிரிகளில் முதலாம், இரண்டாம், ஏழாம் எதிரிகளான அருளானந்தம் சோபஸ், இராஜகுலேந்திரன் நிசாந்தன், உமாகாந்தன் கிரிகேசன் ஆகிய மூவருக்குமே இவ்வாறு...
நீதியும் சட்டமும் என்ற கோட்பாட்டில் இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளும் மீனவர்களுக்கான தீர்வினை பெற்றுகொடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொள்வது தொடர்பாக வடமாகாண மீனவ சம்மேளனத் தலைவர்கள், கிராம அமைப்புகள், மீனவ சங்க பிரதிநிதிகளுடான சந்திப்பு ஒன்று...
மன்னார் - முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாபத்துறை பகுதியில் செவ்வாய்கிழமை (15) காலை ஒருகோடி 87 லட்சம் ரூபா பெறுமதிமிக்க கேரளா கஞ்சாவிணை மன்னார் மது வரி திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். சிலாவத்துறையில் 56 வீட்டு திட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள. கடற்கரையை அண்டிய சிறு ஓடையில் நிலத்துக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கிராம்...
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைஸ் ஹட்டக்சன் மற்றும் அவரது குழுவினர் நேற்று புதன்கிழமை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். நேற்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். அதன்பின்னர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ். மாவட்ட...
தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது. வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக களுபோவில போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று...
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக் கிண்ண போட்டியில் கெயிலின் சிக்ஸர் மழையில் இங்கிலாந்து அணியை மேற்கிந்திய தீவுகள் அணி தோற்கடித்தது. நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182...
இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது போட்டி கொல்கொத்தாவில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்ற இருபது வருடங்களை கொண்டாடும் வைகயில், “96ஐ கொண்டாடுவோம்” என்ற...
இலங்கை தமிழர் வரலாற்றில் தமிழ் மக்களின் பிரச்சனையில் தீவிரமாக செயற்பட்டு பல்வேறு கஷ்டங்கள், துன்பங்கள், அவமானங்களையும் பட்டு நியாயமற்ற முறையில் உயிர் பறிக்கப்பட்ட ஒரு உத்தம தலைவன் எம்மை விட்டு பிரிந்து 27 வருடங்களுக்குள் அமிர்தலிங்கம் யார் என்று கேட்கின்ற இளைய தலைமுறையினருக்கு திருமதி மங்கையற்கரசி யாரென்று விளங்கப்படுத்துவது சுலபமான காரியமல்ல. திருமதி மங்கையற்கரசி அவர்களின்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளராக கடமையாற்றி வந்த சண்முகலிங்கம் சிவசங்கர் எனப்படும் பொட்டு அம்மான் தமிழகத்தில் மறைந்து வாழ்ந்து வருவதாக திவயினவில் கீர்த்தி வர்ணகுல சூரிய தகவல் வெளியிட்டுள்ளார். மனைவி, பிள்ளையுடன் தமிழகத்தில் பொட்டு அம்மான் மறைந்து வாழ்ந்து வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொட்டு அம்மான், 'குருட்டீ' என்ற பெயரில் தமிழகத்தில் வாழ்ந்து...
மன்னார் மாவட்டத்தில் நெற்சந்தைப்படுத்தும் சபையால் நெல் கொள்வனவு ஆரம்பமாகியுள்ளது. இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த திங்கட்கிழமை (14.03.2016) சென்று பார்வையிட்டுள்ளார். வடக்கில் நெல் உற்பத்தி இம்முறை அதிகமாக இருந்தபோதும் நெல்லைச் சந்தைப்படுத்த முடியாமல் இருப்பதாக வடக்கு முதலமைச்சரும் விவசாய அமைச்சரும் அண்மையில் பிரதம மந்திரியைச் சந்தித்துத் தெரியப்படுத்தியிருந்தனர். இதன்போது, இது வடக்குக்கு மாத்திரம்...
தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதில் இவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல்கள் கருகி இருப்பதாக...
தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில், நடிகர், நடிகையருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி, நடிகர் சங்கத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. சின்னத்திரை நடிகர்கள் முதல் வெள்ளித்திரை நடிகர்கள் வரை நடிகர்களின் தற்கொலை சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நடிகர்களுக்கு மருத்துவ அடையாள...
தெழுங்கு தொலைக்காட்சியில் பிரபல நடிகையாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்த நிரோஷா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜெமினி மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளாரக பணியாற்றி வந்த நிரோஷா, இன்று (மார்ச் 16) அதிகாலை, தான் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 23 வயதாகும் நிரோஷா, செய்தி சேனல் ஒன்றில் நிருபராக பணியாற்றிக்கொண்டே,...
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், என்.ஐ.ஐ.டி. டிவியும் இணைந்து தொலைக்காட்சியில் இணையவழி மூலமாக இலவசப் படிப்புகளை வழங்குகின்றன. இதுகுறித்து பல்கலைக்கழக முதன்மையர் (ஆய்வுத் துறை) எஸ். சுவாமிநாதன் தெரிவித்தது: உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மாணவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகமும் என்.ஐ.ஐ.டி. டிவியும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இந்த உடன்படிக்கை பி.டெக்.,...
கிளிநொச்சியில் புத்தர்சிலையுடன் கூடிய புதிய வழிபாட்டிடம் ஒன்று புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை கிளிநொச்சிப் படைகளுக்கான தலைமையகத் படைத்தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேன திறந்துவைத்துள்ளார். அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாபோதி விகாரையிலிருந்து கடந்த ஜனவரிமாதம் வெள்ளரசு மரக்கிளையொன்று கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி படைத் தலைமையத்தில் நடப்பட்டது. அதனையடுத்து அந்த வெள்ளரசு மரத்துக்கான சுற்றுச்சுவருடன் கூடிய சமாதி நிலையில்...
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணையத்தள அங்குரார்ப்பணம் நேற்று(15) செவ்வாய்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்றது. எழுத்தாளர் உமா வரதராஜன், ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், புரவலர் ஹாசிம், தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜகுலேந்திரா, லயன் நோபேர்ட் பொர்னான்டோஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியமர வேண்டும். இல்லையேல் காணி அரசுடமையாக்கப்படும்' என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(15) நடைபெற்ற இந்த வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குள கிராமத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கென வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் இலவசமாக காணி...
அடுத்து வரும் இரு தினங்களுக்கு நாடு பூராகவும் 7 1/2 மணித்தியால மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மின்சாரத்தடை இரு பகுதிகளாக மேற்கொள்ளபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று புதன்கிழமையும் வியாழக்கிழமையும் குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரையும் மாலை 6 மணிமுதல்...
Loading posts...
All posts loaded
No more posts
