தெரிவுக்குழுவை சாடியுள்ள லசித் மாலிங்க

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் புதிய தெரிவுக்குழுவினை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கடுமையாக சாடியுள்ளார். உபாதையில் பாதிக்கப்பட்டுள்ள தம்மை அணியில் இணைத்துக் கொண்டமை ஓர் பிழையான தீர்மானம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தெரிவுக்குழுவின் தலைவராக முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா கடமையாற்றுவதுடன், உறுப்பினராக குமார் சங்கக்கார கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காலில்...

கடந்த 100 ஆண்டுகளில் ஒப்பிடும் போது மிக அதிக அளவு வெயில்-நாசா

தற்போது கோடைகாலம் தொடங்கி விட்ட நிலையில் வெயில் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இது குறித்து அமெரிக்காவின் நாசாவின் விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனமான கட்டார்டு இன்ஸ்டியூட்டின் இயக்குனர் கவின் ஸ்மிட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த 100 ஆண்டுகளைகாட்டிலும் உலகில் பிப்ரவரி மாதத்தில்தான் கடும் வெயில் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில்...
Ad Widget

சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை

சிறுமி சேயா சௌதமி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

15 வருடங்களுக்கு பின்னர் ஊடகத்துறை அமைச்சர் யாழிற்கு விஜயம்

யாழ்.மாவட்டத்திற்கு 15 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக எதிர்வரும் 26ம் திகதி விஜயம் மேற்கொள்ளும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலுப்படுத்தும் வகையில் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போது, ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு...

ஆஸி.யில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று பின் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர் ஒருவரை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கைதுசெய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே இவர் கைதாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

128 குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதை தாண்டி பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆதரவற்ற மாற்று திறனாளிகளுக்கு இல்லம் நடத்துகிறார். அநாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். ராகவேந்திரருக்கு கோவில் கட்டியிருக்கிறார். அடுத்து தன் அம்மாவுக்கு கோவில் கட்டி வருகிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்துக்கு வாங்கிய சம்பளத்தில்...

நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் உள்ளிட்ட மூவர் தற்காலிக நீக்கம்!

ஊழல் புகார் எதிரொலியால் நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாசர் தலைமையிலான புதிய அணி பதவியேற்ற பின்னர், பல அதிரடியான நடவடிக்கைகளும், நலத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். நடிகர் சங்கத்தில் பல கோடி ஊழல் செய்துள்ளதாக சமீபத்தில் நடிகர் சரத்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக...

இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2 தயாராகிறது?

இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305 கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், புலி ஆகிய படங்களை இயக்கியவர் சிம்புதேவன். ஆனால் இந்த படங்களில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த சரித்திரமான படமான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் தான் சூப்பர் ஹிட்டானது. அதனால் விஜய்யின் புலி...

யாழ். இந்துவின் கௌரவத்தைக் கெடுக்கும் ரவுடிகளை உடன் கைது செய்யுங்கள்!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மிகச் சிறந்த கல்விக் களஞ்சியம். ரவுடிக் கும்பல்கள் அதன் கௌரவத்தைக் கெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். இத்தகைய ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர் குழுக்கள், பழைய மாணவர் குழுக்களை இனங்கண்டு, உடனடியாகக் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள...

யாழில் மீண்டும் மின்தடை

மீண்டும் எமது வலயத்துக்கு காலை 9.15 முதல் மின்தடை. இதுதொடர்பில் மின்சாரசபையின் பொறியிலாளரின் கருத்தின்படி இந்த எழுந்தமானமான மின்வெட்டு 3 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை மின்நிலையம் இயங்க 3 நாட்கள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தடையில் இல்லாத வலயங்களின் பாவனை குறையும்போது அதற்கேற்ப தடையில் உள்ள வலயங்கள் மீள மின்சாரம் பெறும் ....

போட்டிபோட்டு ஓடும் பஸ் சாரதிகளை கைது செய்யவும்

யாழ்ப்பாணத்தில் வீதிகளில் போட்டிபோட்டு ஓடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கைது செய்து சட்டநடவடிக்கைக்கு உட்படுத்துமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று திங்கட்கிழமை (14) பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இவர்கள் போட்டிபோட்டு ஓடுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு போட்டிபோட்டு ஓடுபவர்களைக் கைது செய்வதுடன், பஸ்களையும்...

அக்கராயனில் பொலிஸ் சுற்றிவளைப்பு : இருவர் கைது

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வன்னேரிக்குளம் மற்றும் கண்ணகிபுரம் ஆகிய கிராமங்களில் கிளிநொச்சி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (14) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர். சந்தேகநபர்களிடமிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேற்படி இரு கிராமங்களிலும் மணல் கடத்தல் இடம்பெறுகின்றது என பொலிஸாருக்கு நீண்டகாலமாக...

பிரபாகரனின் பாதுகாவலர் பயன்படுத்திய கொப்பு ஒப்படைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்புவை ஒப்படைப்பதற்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். 24 கோடி ரூபாய் பெறுமதியான ஹெலிகொப்டரைத் தாக்கியழித்த விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்பே இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக இருந்த அருளானந்தன் நிஸாந்தன்...

கண்பிரச்சினைகள் தொடர்பில் நேரத்துடன் பரிசோதனை

கண் பிரச்சினைகள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் உரிய நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் கண் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்புடன் இருக்கலாம் என சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கண் நோய்கள் தொடர்பில் அண்மையில் சுகாதார அமைச்சினால் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நமது நாட்டிலுள்ள சுமார் 1.7 சதவீதமானோர்கள் பார்வையற்றவர்களாகவுள்ளனர் என 2014/2015 ஆம் ஆண்டுக்கான சுகாதார...

வடமாகாண விவசாயக் கண்காட்சி மன்னாரில் ஆரம்பம்

வடமாகாண விவசாயக் கண்காட்சி மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (14.03.2016) ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், ஸ்ரீ.சாந்தி, வடமாகாண...

‘கோபத்தை விட்டுவிடு’- மனைவிக்கு சாய் பிரசாந்த் எழுதிய உருக்கமான கடிதம்!

தற்கொலை செய்து கொண்ட சின்னித்திரை நடிகர் சாய் பிரசாந்த் இல்லத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கடிதத்தில், 'எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு' என்று தனது மனைவி சுஜிதாவுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ள அவர், நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம் என்றும் அதில் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல தொலைக்காட்சித்...

மின்வழங்கும் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு : ஜனாதிபதி உத்தரவு

மின் வழங்கும் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். தேசிய மின் கட்டமைப்பின் ஒத்துழைப்புடன் மின் விநியோகிக்கும் சகல நிலையங்களுக்கும் இராணுவத்தினர் மூலம் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்றைய தினம் நாட்டின் சகல பகுதிகளுக்குமான மின் விநியோகம் தடைப்பட்டதோடு இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்றைய...

இராணுவ ரக் மோதி ஒருவர் உயிரிழப்பு

இராணுவ ரக் மோதியதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை (14) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் - மன்னார் (ஏ -32) வீதியில் பூநகரி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பூநகரி 4ஆம் கட்டைச்...

வடமாகாண சபை அதிகமாக செலவு செய்ய எத்தணிக்கிறது

1,000 லீற்றர் குடிநீர் பெறுவதற்கு 7.95 ரூபாய் செலவாகும் இரணைமடுக் குடிநீர்த் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அதேயளவு குடிநீர் பெற 140 ரூபாய் செலவாகும் மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்துக்கு வடமாகாண சபை ஆதரவு தெரிவித்து, அத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார். மருதங்கேணி குடிநீர்த்...

கத்திமுனையில் ரூ.2.43 மில்லியன் பொருட்கள் கொள்ளை

மல்லாகம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை 12.30 மணியளவில் உள்நுழைந்த திருடர்கள், வீட்டிலிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். முகங்களை கறுப்புத் துணியால் மூடியபடி கத்திகள், பொல்லுகள் சகிதம் வீட்டுக்குள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று, வீட்டிலிருந்தவர்களை மிரட்டி,...
Loading posts...

All posts loaded

No more posts